search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rural Development"

    • வட்டாரப் பொறியாளரை மாவட்ட நிர்வாகம் பணிநீக்கம் செய்ததை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 20க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    பல்லடம் :

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டாரப் பொறியாளரை மாவட்ட நிர்வாகம் பணிநீக்கம் செய்ததை கண்டித்து, பல்லடம் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பல்லடம் சங்கத் தலைவர் காந்திராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ரவி வரவேற்றார்.மாநிலத் தலைவர் ரமேஷ் கண்டன உரையாற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்லடம் சங்க பொருளாளர் ஜெயக்குமார், மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மதிய உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் நரிக்குடி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகர், வாசுகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க செயலாளர் ராஜசேகரன்,சத்துணவு சங்க கிளை செயலாளர் கோவிந்தன்,துணை தலைவர் அர்ச்சுனன்,மாவட்ட இணை செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • கிராம வளர்ச்சிக்காக ரூ.30 லட்சம் வழங்கிய இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
    • பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கோவில்பட்டி கிராமம். இங்கு கோவில்பட்டி மற்றும் தாண்டவன்பட்டி கிராம மக்களால் ஒன்றிணைந்து வழிபடும் பழமையான காணப்படை அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலை புதிதாக கட்டுவ தற்கு நிதி ஆதாரம் தேவைப்பட்டது. இதனால் கிராம மக்கள் ஒன்றிணைந்து தங்களால் இயன்ற நிதி உதவி செய்து இந்த கோவிலை கட்டும் பணியை ெதாடங்கினர்.

    இந்த நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு கோவில் ட்டி மற்றும் தாண்டவன்பட்டி கிராமத்தை சேர்ந்த இளை ஞர்கள் துபாய் நாட்டில் கம்பி கட்டுதல், கொத்தனார் வேலை, கார்பெண்டர் போன்ற பல்வேறு உடல் உழைப்பு சார்ந்த தொழி லுக்கு பணியாட்களாக சென்று வேலை பார்த்து வந்தனர்.

    அவர்கள் தங்கள் கிராம மேம்பாட்டிற்கு உதவுவ தற்காக அவர்கள் பணியில் இருந்த 2004-ம் ஆண்டு முதல் 19 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மாதம் ரூ.115 வீதம் சேமிக்க முடிவு செய்த னர். இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து இந்த கிராமங்களில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த குழுவில் இணைந்து, தங்களது பங்கிற்கான தொகையினை யும் கொடுத்து சேமித்து வந்தனர்.

    இவ்வாறு சேமித்த பணம் ரூ.30 லட்சத்தை தாண்டியது. இதனை தொடர்ந்து தங்களது கிராமத்தில் உள்ள கோவிலை சிறப்பாக கட்டி கும்பாபிஷேகம் நடத்துவ தற்கு நிதி உதவி செய்ய துபாய் வாழ் இளைஞர்கள் முடிவு செய்தனர்.

    இதனை தொடர்ந்து அவர்கள் கோவில் கட்டுவதற்கு ரூ.15 லட்சமும், கிராமத்தில் பேவர் பிளாக் தளம் அமைக்க ரூ.8 லட்சம் என பல்வேறு பணிகளுக்கு மொத்தம் ரூ.30 லட்சம் வழங்கினர். அவர்களுக்கு கிராம மக்கள் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட் டது.

    இதுபற்றி அந்த இளைஞர்கள் கூறுகையில், ேகாவில் திருப்பணி மற்றும் கிராம மேம்பாட்டுக்கு உதவி செய்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே தொடர்ந்து இதுபோல் சேமித்து பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    • ஆட்களை நியமிப்பது போன்ற பொய் கணக்கு காண்பித்து முறைகேடுகள் செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன.
    • ஊராட்சிகளில் நிலவும் குடிநீர் பிரச்சனை, ஊராட்சி நிர்வாகத்தையும் கவனிப்பதால் வேலை பளு அதிகரித்துள்ளது.

    பல்லடம்:

    மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்திற்கு தனி வட்டார வளர்ச்சி அலுவலர் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது;- தமிழ்நாட்டில் ஊராட்சி ஒன்றியங்களில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்ப டுகிறது. இத்திட்டத்தில் பணியாளர்களை நியமிப்பதில் பாரபட்சம், ஆட்களை நியமிப்பது போன்ற பொய் கணக்கு காண்பித்து முறைகேடுகள் செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன.

    இதற்கிடையே ஊரக வளர்ச்சி துறை மூலம் மத்திய அரசின் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டம், தூய்மை பாரதம், தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டம், மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்கள்செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்ட பணிகளை கவனத்தில் கொண்டு ஊராட்சிகளில் நிலவும் குடிநீர் பிரச்சனை, ஊராட்சி நிர்வாகத்தையும் கவனிப்பதால் வேலை பளு அதிகரித்துள்ளது. எனவே இது போன்ற பிரச்சனைகளை களையவும், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சிசெயலாளர் உள்ளிட்டோரின் வேலைப்பளுவை குறைக்கும் வகையில், மற்ற மாநிலங்களைப் போன்று தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கென தனி வட்டார வளர்ச்சி அலுவலர் நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் பணியாற்றும் 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பினர்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் ஈரோடு கலெக்டர் அலுவலகம், 14 ஒன்றியங்கள் என மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு இரவு நேர ஆய்வு கூட்டம், விடுமுறை நாளில் கள ஆய்வுக்கு அழைப்பதை கைவிட வேண்டும். அனைத்து வட்டாரத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    பிற துறை பணிகளில் ஈடுபடும் போது இத்துறைக்கான பணிகளை செய்ய முடியவில்லை. இவற்றை கைவிட வலியுறுத்தியும், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினை திரும்ப பெற வேண்டும் உள்பட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந் தேதி முதல் விதிப்படி வேலை செய்தல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் போராட்டம் வரும் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் பணியாற்றும் 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பினர்.

    இந்நிலையில் வரும் 10-ந் தேதி முதல் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    • தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும்.
    • 14-ந்தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பல்லடம் : 

    தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்கள் உட்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றும், இன்றும் சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். அதன்படி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலகப் பணிகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கியது. இதே போல, கிராம ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள், மற்றும் உதவியாளர்கள் பணிக்கு வரவில்லை. கோரிக்கைகள் நிறை வேற்றப்படாவிட்டால் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் முன்பாக பவானி கிளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பவானி கிளை சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பவானி:

    பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் முன்பாக பவானி கிளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பவானி மகளிர் அணி தலைவி புவனா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி கண்டன உரையாற்றினார்.

    ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் 3 நாட்களுக்கு மேலான அனைத்து விடுப்பு களையும் விதிமுறைகளுக்கு மாறாக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற நிர்பந்திப்பது. குறை வான கூலிக்கு வேலை வாங்கிவிட்டு ஒரே உத்தரவில் 8 முழு சுகாதார திட்ட ஒருங்கிணை ப்பாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பவானி கிளை சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் பவானி கிராம உதவியாளர்கள் சங்கம் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம் பணியாளர்கள் ஒருநாள் தற்செயல் விருப்பு எடுத்து தங்களின் கோரி க்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • திருமருகல் ஒன்றியத்தில் 209 கிராமங்களில் தினசரி குடிநீர் வழங்கப்படுவதில்லை.
    • ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் இடிக்கப்பட்ட பழுதடைந்த கட்டடங்களை விரைந்து கட்டவேண்டும்.

    நாகப்பட்டினம்:

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில், நாகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    அதில் எம்.எல்.ஏ ஷா நவாஸ் பேசியதாவது,

    அமைச்சர் அடுத்த முறை நாகப்பட்டினம் வரும்போது நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் மற்றும் நாகை ஒன்றியத்தில் ஆய்வு செய்ய வேண்டும். திருமருகல் ஒன்றியத்தில் 209 கிராமங்களில் தினசரி குடிநீர் வழங்கப்படுவதில்லை. ஒருநாள் விட்டு ஒருநாள் தான் குடிநீர் கிடைக்கிறது. குடிநீருக்காக மக்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. பொதுவாகவே, குடிநீர் வசதி, சாலை வசதி, இருப்பிட வசதி போன்ற அடிப்படை தேவைகளுக்காக மக்களை போராடும் நிலைக்கு தள்ளக்கூடாது. அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

    ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் இடிக்கப்பட்ட பழுதடைந்த கட்டடங்களை விரைந்து கட்டவேண்டும். குளங்களுக்குசுற்றுச்சுவர் அமைத்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்.100 நாள் வேலைதிட்டம் முறையாக செயல்படு த்தப்பட வேண்டும். நாகப்ப ட்டினம் பேரிடர்களால் பாதிக்கப்படும் பகுதி என்பதால், அதுபோன்ற காலங்களில் மக்களுக்கு மீட்பு மையங்களாக சமுதாயக் கூடங்கள் தான் பெரிதும் பயன்படுகின்றன. எனவே சமுதாயக் கூடங்கள் அதிகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும்.

    குப்பைகள் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. திடக்கழிவு மேலாண்மை முறையாக செய்யப்பட வேண்டும்.திட்டங்களுக்கு நிதி ஒதுக்க ப்பட்டவுடன் அவற்றை காலதாமதம் இன்றி நிறைவேற்ற அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும். இவ்வாறு பேசினார்.

    ஆய்வுக் கூட்டத்தில், அரசு முதன்மைச் செயலர் பெ.அமுதா, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மேலாண்மை இயக்குநர் எஸ்.திவ்யதர்ஷிணி கலெக்டர் அருண்தம்புராஜ், மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் உ.மதிவாணன், நாகை மாலி எம்.எல்.ஏ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    • ரங்கப்பனூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளி கட்டிடம், அங்கன்வாடி பள்ளி கட்டிடம் பழுதடைந்ததையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ரெத்தின மாலா கணக்குகளை ஆய்வு செய்தார். தற்பொழுது நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை மேல் தேக்க தொட்டி, மற்றும் ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளி கட்டிடம், அங்கன்வாடி பள்ளி கட்டிடம் பழுதடைந்ததையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக சரி செய்கிறோம் என்று உறுதி அளித்தனர். இந்த ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன், துணை தலைவர் ராதிகா பாஸ்கரன், ஊராட்சி செயலர் திருமால்வளவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட (ஊரகம்) பயனாளிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட திட்ட கையேடு வழங்கப்பட்டது.
    • சுவரொட்டியானது மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

    நெல்லை

    நெல்லை மாவட்ட கலெக்டரால், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பான கையேடு மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான புகார் தொலைபேசி எண் குறித்த சுவரொட்டி வெளியிடப்பட்டது.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட (ஊரகம்) பயனாளிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட திட்ட கையேட்டினை பயனாளிகளுக்கு வழங்கியும், ஊரக குடியிருப்பு திட்டங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அனைத்து திட்டங்கள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க 89254 22215 மற்றும் 89254 22216 ஆகிய தொலைபேசி எண் குறித்த சுவரொட்டியினை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார்.மேலும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

    சுவரொட்டியானது மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

    ×