search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடிப்படை வசதிகளை நிறைவேற்ற எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    X

    அமைச்சர் பெரியகருப்பனுக்கு ஷாநவாஸ் எம்.எல்.ஏ. பொன்னாடை அணிவித்தார்.

    அடிப்படை வசதிகளை நிறைவேற்ற எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    • திருமருகல் ஒன்றியத்தில் 209 கிராமங்களில் தினசரி குடிநீர் வழங்கப்படுவதில்லை.
    • ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் இடிக்கப்பட்ட பழுதடைந்த கட்டடங்களை விரைந்து கட்டவேண்டும்.

    நாகப்பட்டினம்:

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில், நாகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    அதில் எம்.எல்.ஏ ஷா நவாஸ் பேசியதாவது,

    அமைச்சர் அடுத்த முறை நாகப்பட்டினம் வரும்போது நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் மற்றும் நாகை ஒன்றியத்தில் ஆய்வு செய்ய வேண்டும். திருமருகல் ஒன்றியத்தில் 209 கிராமங்களில் தினசரி குடிநீர் வழங்கப்படுவதில்லை. ஒருநாள் விட்டு ஒருநாள் தான் குடிநீர் கிடைக்கிறது. குடிநீருக்காக மக்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. பொதுவாகவே, குடிநீர் வசதி, சாலை வசதி, இருப்பிட வசதி போன்ற அடிப்படை தேவைகளுக்காக மக்களை போராடும் நிலைக்கு தள்ளக்கூடாது. அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

    ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் இடிக்கப்பட்ட பழுதடைந்த கட்டடங்களை விரைந்து கட்டவேண்டும். குளங்களுக்குசுற்றுச்சுவர் அமைத்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்.100 நாள் வேலைதிட்டம் முறையாக செயல்படு த்தப்பட வேண்டும். நாகப்ப ட்டினம் பேரிடர்களால் பாதிக்கப்படும் பகுதி என்பதால், அதுபோன்ற காலங்களில் மக்களுக்கு மீட்பு மையங்களாக சமுதாயக் கூடங்கள் தான் பெரிதும் பயன்படுகின்றன. எனவே சமுதாயக் கூடங்கள் அதிகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும்.

    குப்பைகள் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. திடக்கழிவு மேலாண்மை முறையாக செய்யப்பட வேண்டும்.திட்டங்களுக்கு நிதி ஒதுக்க ப்பட்டவுடன் அவற்றை காலதாமதம் இன்றி நிறைவேற்ற அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும். இவ்வாறு பேசினார்.

    ஆய்வுக் கூட்டத்தில், அரசு முதன்மைச் செயலர் பெ.அமுதா, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மேலாண்மை இயக்குநர் எஸ்.திவ்யதர்ஷிணி கலெக்டர் அருண்தம்புராஜ், மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் உ.மதிவாணன், நாகை மாலி எம்.எல்.ஏ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    Next Story
    ×