என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dravidian model"

    • 2091 கோடி ரூபாய் முதலீட்டில், 2104 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உற்பத்தி ஆலை
    • வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டை அதிகப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் இன்று (பிப்.6) தொழில், முதலீடு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறை சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

    இதில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 2091 கோடி ரூபாய் முதலீட்டில், 2104 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மீச்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் அமைத்துள்ள, அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் (Room Air Conditioners) மற்றும் காற்றழுத்தக் கருவிகள் (Compressors) உற்பத்தி ஆலையை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    "கும்மிடிப்பூண்டியில் MitsubishiElectric உற்பத்தி ஆலை. 2023-இல் MoU கையெழுத்தானது. இன்று திறப்பு விழா கண்டு, 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறவுள்ளனர். ஓயவே மாட்டோம்! ஒவ்வொரு நாளும் நிறைவுற்ற பெருந்திட்டங்கள் திறப்புவிழா காண்பதும், புதிய திட்டங்களுக்கு வித்திடுவதும்தான் திராவிட மாடல்! எனக் குறிப்பிட்டுள்ளார்.  

    • வேறு எதையும் கொடுப்பதைவிட அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுப்பது அவசியம்.
    • பயம், மிரட்டல், பணம், பக்தி என நிறையவற்றை உலக அரசுகள் நம்பியுள்ளது.

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப் வழங்கும் 'உலகம் உங்கள் கையில்' நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கல்வி நிர்வாகிகள், திரைப்பட நடிகர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

    இந்நிலையில் இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய்சேதுபதி,

    "இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எனக்கு பெரிய சந்தோஷம், பெருமையும்கூட. நம்மை படிக்கவைக்க ரொம்ப நாட்களாகவே இந்த அரசு திட்டம் போட்டு கொண்டுவருகிறது. வேறு எதையும் கொடுப்பதைவிட அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுப்பது அவசியம். அதற்கான முக்கிய பங்கை இந்த அரசு மறுபடி மறுபடி கொடுத்துக்கொண்டே வருகிறது. அதற்கு மிகவும் நன்றி. ஒருவரின் வளர்ச்சிக்கு அவரின் அறிவுதான் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களை முன் நகர்த்தி செல்ல பெரும் பங்கு வகிக்கிறது அரசு. அதற்கு ரொம்ப நன்றி." என தெரிவித்தார். 


    மடிக்கணினிகள் வழங்கும் விழாவில் விஜய் சேதுபதி 

    நடிகர் மணிகண்டன் பேசியதாவது, 

    "தனது திறனை வெளிப்படுத்த இருக்கும் வசதி, வாய்ப்புகள் கிடைக்காத ஒரு மனிதனின் சோகத்தைவிட, பெரியசோகம் இந்த உலகத்தில் எதுவும் கிடையாது. எவ்வளவோ திறமைகள் இருந்தும், அதனை வெளிப்படுத்த சரியான வசதிகள் இல்லாத எத்தனையோ பேரை நான் பார்த்துள்ளேன். இனிமேல் அதுபோல நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்ற நிலையை இங்குள்ள முத்தான திட்டங்கள் உருவாக்கியுள்ளன. அதற்காக தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய நன்றிகள்.

    முக்கியமாக பள்ளிக்கல்வித்துறையில் நான் நிறைய திட்டங்களை பார்த்துள்ளேன். உலக வரலாற்றில் ஒரு அரசு மூலதனமாக எதனை நம்புகிறது என்பது மிக முக்கியமான ஒன்று. பயம், மிரட்டல், பணம், பக்தி என நிறையவற்றை உலக அரசுகள் நம்பியுள்ளது. ஆனால் திராடவி மாடல் அரசு அறிவை, கல்வியை மூலதனமாக நம்புகிறது. அது மிகப்பெரிய மூலதனம் என்பதற்கான சான்றாக, இன்று விதைக்கும் விதைகளின் பலனை எதிர்காலத்தில் நிச்சயமாக பார்ப்போம்." எனப் பேசினார். 

    • மக்களிடம் திமுக இளைஞரணி கொள்கை விதையை விதைக்க வேண்டும்.
    • திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    பாஜகவிற்கு எதிராக கொள்கை ரீிதியாக திமுக வெற்றி பெற்று வருகிறது. பாஜகவினரால் வெற்றிக்கொள்ள முடியாதது தமிழ்நாட்டில் மட்டும் தான். தமிழ்நாட்டை பார்த்தாலே அமித்ஷாவிற்கு எரிச்சல் வருகிறது. சங்கி படைகளை கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

    அன்போது வந்தால் அரவணைப்போம், ஆணவத்தோடு வந்தால் அடிபணிய மாட்டோம். இந்தயாவிலேயே சித்தாந்த ரீதியாக சண்டை போடும் ஒரே மாநில கட்சி திமுக தான்.

    மக்களிடம் திமுக இளைஞரணி கொள்கை விதையை விதைக்க வேண்டும். திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    அரசியலில் சொகுசு பார்க்க வேண்டாம்; கடுமையாக உழைத்தால் தான் இடம் கிடைக்கும். கடந்த கால ஆட்சியாள்கள் செய்த தவறை திமுக இளைஞரணி கொண்டு சேர்க்க வேண்டும்.

    கடந்த கால ஆட்சியர்கள் மீண்டும் ஆட்சி வந்தால் நடக் உள்ள அநீதிகளை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைத்த பாஜக முன்பு இல்லாத அளவிற்கு ஆக்ரோஷத்துடன் செயல்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் திராவிட மாடல் 2.O அமைய திமுக இளைஞரணி கடுமையக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டின் மற்றுமொரு அறிவியல் பாய்ச்சல்தான் விண்வெளித் தொழில் கொள்கை 2025.
    • தமிழ்நாட்டில் எந்த நல்லது நடந்தாலும் வயிறெரியும் அரசியல் காழ்ப்புணர்வு கூட்டம்.

    திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் மற்றுமொரு அறிவியல் பாய்ச்சல்தான் விண்வெளித் தொழில் கொள்கை 2025. ஆனால் தமிழ்நாட்டின் நலனில் அக்கறை இல்லாத அற்பமான எதிர்கட்சிகள் நம்பி நாராயணனின் ஆலோசகராக இருக்கும் நிறுவனத்தோடு கோர்த்து பேசுவது அற்பமான செயல்.

    தமிழ்நாட்டில் எந்த நல்லது நடந்தாலும் வயிறெரியும் அரசியல் காழ்ப்புணர்வு கூட்டம், இக்கொள்கையை விமர்சிப்பதாக நினைத்து IIT வல்லுநர்கள், இளந்தமிழர்கள் வேலை வாய்ப்பு பெறவுள்ளோரையும் சேர்த்தே கொச்சைப்படுத்துகிறது.

    அரசியல் எதிரிகளுக்கு புகையட்டும். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்கும் சட்டமுன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
    • 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குரல்கள் உள்ளாட்சி மன்றங்களில் இனி ஒலிக்கும்.

    தமிழக சட்டசபையில் இன்று உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்கும் சட்டமுன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

    இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    வாழ்வில் ஓர் பொன்னாள், இந்நாள்!

    தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளிலும் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் உன்னதச் சட்டத்தை இன்று சட்டமன்றத்தில் முன்மொழிந்தேன்!

    12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குரல்கள் உள்ளாட்சி மன்றங்களில் இனி ஒலிக்கும்! இதுதான் திராவிட மாடல்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இருமொழிக் கொள்கை என்பது நம் உயிர்க் கொள்கை!
    • இது பணப்பிரச்சினை அல்ல; இனப் பிரச்சினை!

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நிதிக்காக இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமைகளின் ஆட்சியல்ல இது; தடைக்கற்களை உடைத்தெறியும் தடந்தோள்கள் கொண்ட திராவிட மாடல் ஆட்சி இது!

    இருமொழிக் கொள்கை என்பது நம் உயிர்க் கொள்கை!

    இது பணப்பிரச்சினை அல்ல; இனப் பிரச்சினை!

    தமிழ் காக்க - தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட - தமிழினம் உயர - மாநில சுயாட்சியை உறுதிசெய்ய விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திராவிட மாடல் என்பது ஒரு மாதிரியாக இருக்கிறது. மாடல் என்பது தமிழா?
    • திராவிட மாடலுக்கு நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை கூறினார்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அதன்பின், கன்னியாகுமரியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தூத்துக்குடியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டு வந்தார்.

    வரும் வழியில் அவர் நெல்லை விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு அவரை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திராவிட மாடல் என்பதற்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்திருக்க வேண்டும்.

    திராவிட மாடல் என்பது ஒரு மாதிரியாக இருக்கிறது. மாடல் என்பது தமிழா?

    திராவிட மாடலுக்கு பதிலாக முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • அடுத்த தேர்தலில் தி.மு.க. காணாமல் போய்விடும் என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசினார்.
    • இந்த திராவிட மாடல் என்பது பூச்சாண்டி காட்டக்கூடிய வேலை.

    சிவகங்கை

    சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பங்கேற்று பேசியதாவது:-

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப அரசியல் செய்து வருகிறார். ஒரு சாதாரண எளிய தலித் தி.மு.க. தொண்டனை வருகிற 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா?

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தலைவராக ஒரு சாதாரண எளிய தொண்டன் கட்சியின் கிளை செயலாளரை ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா? அப்படி சொன்னால்தான் திராவிட மாடல் ஆகும். இந்த திராவிட மாடல் என்பது பூச்சாண்டி காட்டக்கூடிய வேலை.

    திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப அரசியல் செய்து வரும் தி.மு.க. அடுத்த தேர்தலில் காணா மல் போய்விடும்

    இவ்வாறு அவர் பேசி னார். இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, கருணாகரன், அருள்ஸ்டிபன், சிவாஜி , சிவசிவஸ்ரீதர், சேவியர், பழனிச்சாமி, கோபி, மண்டல தகவல் தொழி ல்நுட்ப இணை செயலாளர் தமிழ்செல்வன்.

    மகளிரணி செயலாளர் ஜாக்குலின், மாவட்ட மகளிரணி வெண்ணிலா சசிகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாலுகோட்டை மணிகண்டன், மணிமுத்து, பாசறை பொருளாளர் சரவணன்.

    பாசறை இணை செயலாளர் சதீஸ்பாலு, கவுன்சிலர்கள் ராபர்ட், கிருஷ்ணகுமார், தாமு, மாணவரணி நகரசெய லாளர் ராஜபாண்டி, பாசறை இணை செயலாளர் மோசஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாட்டைத் தலைநிமிரவைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல, தமிழர் பெற்ற உணர்வு.
    • பேரறிஞர் பெருந்தகையின் லட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:

    நாம் செல்லுகின்ற திராவிட மாடல் பாதைக்கு பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று.

    "ஏ தாழ்ந்த தமிழகமே" எனத் தட்டியெழுப்பி, தமிழ்நாட்டைத் தலைநிமிரவைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல, தமிழர் பெற்ற உணர்வு. பேரறிஞர் பெருந்தகையின் லட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.



    • கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.ஜெ.பிரபாகரன் தலைமை வகித்தார்.
    • திருப்புன்கூரில் திராவிட மாடல் அரசின் 2-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த திருப்புன்கூரில் திராவிட மாடல் அரசின் 2-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.ஜெ.பிரபாகரன் தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர்கள் இரா.முருகன், கே.சசிக்குமார்,மாவட்ட பிரதிநிதி விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் தியாக.விஜயேஸ்வரன், பேரூர் கழகச் செயலாளர் அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் சுப்பராயன், மாவட்ட பொருளாளர் மகா.அலெக்சாண்டர், கொள்ளிடம் ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சாமிநாதன் ஆகியோர் பேசினர். தலைமை கழக பேச்சாளர் தீக்கனல் என்.செல்வம் சிறப்புறையாற்றினார்.

    • கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை ஒட்டுமொத்தமாக சீரழிந்து போய் இருந்தது.
    • எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும் உங்களின் கோரிக்கையை அரசு நிச்சயம் நிறைவேற்றித்தரும்.

    சென்னை:

    அடையாரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று, போக்குவரத்துத்துறை சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பணிபுரிந்து ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வுபெற்ற, இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 414 பேருக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு, ஓய்வூதிய ஒப்படைப்பு உள்ளிட்ட பணப் பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை ஒட்டுமொத்தமாக சீரழிந்து போய் இருந்தது. இதை சீரமைக்கும் வகையில் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். போக்குவரத்துத்துறையில் முதலமைச்சர் வகுத்துக்கொடுக்கும் திட்டங்களை அமைச்சர் சிவசங்கர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். போக்குவரத்துத்துறையில் பல திட்டங்களை தொடங்கி வைக்கும் வாய்ப்பை அமைச்சர் சிவசங்கர் எனக்கு வழங்கியுள்ளார்.

    முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பணியாளர்களின் சம்பள விகிதம் சீர்குலைக்கப்பட்டது. இது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி பே-மெட்ரிக்ஸ் முறையில் தற்போது மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, போக்குவரத்து துறையில் பணிபுரிந்த 6 ஆயிரத்து 281 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்டவற்றை வழங்கிட உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, 2-வது கட்டமாக 3 ஆயிரத்து 414 பேருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட உள்ளது.

    இதன் அடையாளமாக 612 பேருக்கு இன்று ரூ.171 கோடியே 23 லட்சம் மதிப்பிலான பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. சுகாதாரம், கல்வி போன்ற துறைகள் எப்படி மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறதோ அதுபோல போக்குவரத்துத்துறை மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறது. போக்குவரத்துத்துறை ஊழியர்களின் சிக்கல்களை சரிசெய்யும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

    தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக செவி சாய்த்து தீர்வு கண்டு வருகிறது. பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் என்ற நமது திட்டத்தை கர்நாடகாவில் புதிதாக அமைந்துள்ள காங்கிரஸ் அரசும் அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும் உங்களின் கோரிக்கையை அரசு நிச்சயம் நிறைவேற்றித்தரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி., த.வேலு எம்.எல்.ஏ., போக்குவரத்துத்துறை கூடுதல் செயலாளர் பணீந்திரரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • கல்வியும், சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
    • கல்விப் புரட்சியை ஏற்படுத்தியது தி.மு.க.–வோட ஆட்சி என்றார்.

    மதுரை

    மதுரை புதுநத்தம் சாலை–யில் ரூ.216 கோடி மதிப்பீட் டீல் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூல–கத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திறந்துவைத் தார். அப்போது அவர் பேசி–யதாவது:-

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண் கள் என நான் அடிக்கடி சொல்வது, கல்வியும் சுகா–தாரமும்தான். அதனால் தான், கலைஞர் நூற்றாண்டு தொடக்கமான கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி அன்று கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவம–னையை சென்னை, சைதாப்பேட்டை, கிண்டியில் திறந்து வைத் தேன்.

    ஒரு மாதம் கழித்து ஜூலை 15 ஆம் நாளான இன்றைக்கு (நேற்று) கலை–ஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்தி–ருக்கின்றேன். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததை–யும் செய்வான் இந்த ஸ்டா–லின் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் சென்னையில் மருத்துவமனையும், மதுரை–யில் இந்த நூலகமும். இவை இரண்டும் திராவிட முன் னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்காத வாக்குறுதிகள்.

    தமிழ்நாட்டினுடைய தலைநகர் சென்னை என் றால், இந்த மதுரை, தமிழ் நாட்டினுடைய கலைநகர். தலைநகரில், தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணாவின் நூற்றாண்டில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்துத் தந்தார் கலை–ஞர்.

    இன்று அந்த தலைவர் கலைஞரின் நூற்றாண்டில், இந்தக் கலைநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் எனும் தென் தமிழ்நாட்டின் அறி–வாலயத்தை நான் அமைத் திருக்கிறேன். இந்த நூல–கத்தை திறந்து வைக்கக்கூடிய பெரும் வாய்ப்பும், பெருமை–யும் எனக்கு கிடைத்திருப் பதை எண்ணி எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

    சங் கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த மாமதுரையில் சங்ககால இலக்கியங்களை சாமானியருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சங்கத் தமிழ் இயற்றிய மாமதுரை–யில் நூலகம் வைக்காமல் வேறு எங்கு வைக்க முடியும்.

    கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பொறுத்தவரைக் கும், குழந்தைகள் –மாண–வர்கள் போட்டித் தேர்வர் கள் – மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் பயன்பெ–றக்கூடிய வகையில் ஆறு தளங்கள் மூன்று லட்சம் புத்தகங்களைப் பெற்றிருக் கக்கூடிய இந்த நூலகத்திற்கு அறிவுத் தேடலுடன் நீங்கள் வரும்போது உங்களை அன்போடு வரவேற்க தலை–வர் கலைஞரே சிலை வடி–வமாக இங்கே காட்சிய–ளித் துக் கொண்டிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தான் என்பதை யாரும் மறந்திடக்கூடாது. அதற்கு திராவிட இயக்கமும், தி.மு.க.வும்தான் காரணம். உங்களைப் போலவே, பள்ளியில் படிக்கின்றபோது தமிழ்ப் பற்று இருந்த–தால்தான் எழுத்தாற்றல் பெற்று, போராட்டக் குணத்தின் காரணமாக மிகப்பெரிய தலைவரானார் கலைஞர்.

    பள்ளியில் நன்றாகப் படி என்று அண்ணா சொன்னா–லும், கலைஞர் படித்தது என்னவோ, அண்ணாவின் கொள்கைப் பள்ளியிலும், பெரியாரின் போராட்ட கல்லூரியிலும்தான். அன் றை அரசியல் சூழலும் கலை–ஞருக்குள்ளே இருந்த போராளியும், அவர் விரும் பிய பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போன–தற்கு காரணம். ஆனால், கலைஞருக்குள்ளே இருந்த அந்தப் போராளிதான் இன்றைக்கு பலரும் படிக்க காரணம்.

    படிப்பை நாம் எல்லோ–ரும் அடையவேண்டும் என்ற தலைவர் கலை–ஞர் உருவாக்கியதுதான் இன் றைய நவீன தமிழ்நாடு. இன்றைக்கு தமிழ்நாட்டில் நீங்கள் பார்க்கின்ற பெரும் பாலானவை கலைஞரால் உருவாக்கப்பட்டவை. நவீன கலைஞரால் உருவாக்கப்பட் டது. ஒரு இனத்தின் வளர்ச் சிக்கு முதலில் தேவை கல்வி. அதை முத–லில் கொடுத்தது, திராவிட இயக் கத்தின் தாய்க்கட்சி–யான நீதிக்கட்சி. கல்விப் புரட் சியை ஏற்படுத்தியது தி.மு.க.–வோட ஆட்சி.

    தரமான கல்வி வழங்கு–வதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முத–லிடத்துக்கு முன்னேற வேண்டும் என்பதற்கான அனைத்து பணிகளையும் செய்து கொண்டு இருக்கி–றோம். இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், 'எண்ணும் எழுத்தும்' இயக் கம், பசியோடு பள்ளிக்கு வரக்கூடிய மாண–வர்களின் பசியை போக்க 'முதலமைச் சரின் காலை உணவுத்திட்டம்' என பல்வேறு திட்டங்கள பள்ளிக்கல்வித் துறை சார் பில் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

    அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் உயர்கல்வி படிக்க வேண்டுமென்று சொன்னால், அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற "புது–மைப்பெண் திட்டம்". வரு–கிற செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்த–நாளில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கப் போகிறோம்.

    தகுதியுடைய குடும்பத் தலை–விகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கப் போகிறது. உங்கள் குடும்பத்தில் உங்கள் அம்மாவே இதனை பெறு–வார்கள். இத்தனை ஆயிரம் கோடி மதிப்பிலான பெரிய சமூகநலத் திட்டம் இதுவரை இல்லை என்று சொல்கின்ற மாதிரி மாபெரும் திட்டமாக அந்தத் திட்டம் உருவாக்கப் பட இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    விழாவில் எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார், தலைவர் ரோஷினி நாடார், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன், மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன்,

    மாநில தீர்மானக்குழு செயலாளர் அக்ரி கணேசன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் முத்து–ராமன், மேலக்குயில்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபிரபு, அவைத் தலை–வர் பாலசுப்ரமணியன், பொருளாளர் சோமசுந்தர–பாண்டியன், மாவட்ட பிரதி–நிதி அழகு பாண்டி, இளை–ஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, பகுதி செயலாளர்கள் சசி–குமார், மருதுபாண்டி, ஒன்றிய சேர்மன் வீரரா–கவன், கிழக்கு மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இளங்கோ, வைகை மருது, மாநகர் மாவட்ட இளை–ஞரணி அமைப்பாளர் சௌந்தர், 92-வது வார்டு கவுன்சிலர் கருப்புசாமி, அரசு வக்கீல் ஸ்ரீதர், நியாய விலை கடை தொழிலாளர் சங்க தனுஷ்கோடி, பால–முருகன், மதுரை மாநகர் மாவட்ட 52-வது வார்டு தி.மு.க. விஜி என்ற விஜயகுமார்,

    ஒன்றிய சேர்மன் வேட்டையன், மதுரை மாநகர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் முத்துக்குமார், மதுரை மாநகர் மாவட்ட விளையாட் மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மணிகண் டன், இளைஞரணி துணை அமைப்பாளர் ராம பிரசாத், மாநில பொதுக்குழு உறுப்பி–னர் வைகை பரமன், ஊராட்சி தலைவர்கள் கவிப்பிரியா கணபதி, ஆனந்த், சரண்யா ராஜவேல், வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, துணைத்தலைவர் கார்த்திக், அலங்காநல்லூர் பேரூ–ராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, சோழவந் தான் பேரூராட்சி தலைவர் ஜெய–ராமன், துணைத்தலை–வர் லதா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×