என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்- டி.ஆர்.பி.ராஜா
- தமிழ்நாட்டின் மற்றுமொரு அறிவியல் பாய்ச்சல்தான் விண்வெளித் தொழில் கொள்கை 2025.
- தமிழ்நாட்டில் எந்த நல்லது நடந்தாலும் வயிறெரியும் அரசியல் காழ்ப்புணர்வு கூட்டம்.
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது:-
தமிழ்நாட்டின் மற்றுமொரு அறிவியல் பாய்ச்சல்தான் விண்வெளித் தொழில் கொள்கை 2025. ஆனால் தமிழ்நாட்டின் நலனில் அக்கறை இல்லாத அற்பமான எதிர்கட்சிகள் நம்பி நாராயணனின் ஆலோசகராக இருக்கும் நிறுவனத்தோடு கோர்த்து பேசுவது அற்பமான செயல்.
தமிழ்நாட்டில் எந்த நல்லது நடந்தாலும் வயிறெரியும் அரசியல் காழ்ப்புணர்வு கூட்டம், இக்கொள்கையை விமர்சிப்பதாக நினைத்து IIT வல்லுநர்கள், இளந்தமிழர்கள் வேலை வாய்ப்பு பெறவுள்ளோரையும் சேர்த்தே கொச்சைப்படுத்துகிறது.
அரசியல் எதிரிகளுக்கு புகையட்டும். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்.
இவ்வாறு அவர் கூறினார்.






