ஒவ்வொரு நாளும் நிறைவுற்ற பெருந்திட்டங்கள் திறப்புவிழா காண்பதும், புதிய திட்டங்களுக்கு வித்திடுவதும்தான் திராவிடமாடல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2091 கோடி ரூபாய் முதலீட்டில், 2104 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உற்பத்தி ஆலைவேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டை அதிகப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு நாளும் நிறைவுற்ற பெருந்திட்டங்கள் திறப்புவிழா காண்பதும், புதிய திட்டங்களுக்கு வித்திடுவதும்தான் திராவிடமாடல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் இன்று (பிப்.6) தொழில், முதலீடு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறை சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இதில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 2091 கோடி ரூபாய் முதலீட்டில், 2104 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மீச்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் அமைத்துள்ள, அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் (Room Air Conditioners) மற்றும் காற்றழுத்தக் கருவிகள் (Compressors) உற்பத்தி ஆலையை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

"கும்மிடிப்பூண்டியில் MitsubishiElectric உற்பத்தி ஆலை. 2023-இல் MoU கையெழுத்தானது. இன்று திறப்பு விழா கண்டு, 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறவுள்ளனர். ஓயவே மாட்டோம்! ஒவ்வொரு நாளும் நிறைவுற்ற பெருந்திட்டங்கள் திறப்புவிழா காண்பதும், புதிய திட்டங்களுக்கு வித்திடுவதும்தான் திராவிட மாடல்! எனக் குறிப்பிட்டுள்ளார்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com