என் மலர்
நீங்கள் தேடியது "Chief Minister MK Stalin"
- அலுவலர் குழு 2017 இன் பரிந்துரையின் அடிப்படையில், ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
- கூடுதல் செலவினம் அந்தந்தத் துறைகளின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட கணக்குத் தலைப்புகளின் கீழ் பற்று வைக்கப்படவேண்டும்
சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியம் 2,000 ரூபாயில் இருந்து 3,400 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், மேலும் பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 400 ரூபாயாக வழங்கப்படும். மேலும், பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அலுவலர் குழு 2017 இன் பரிந்துரையின் அடிப்படையில் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள், வனக் களப்பணியாளர்கள். அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு காலமுறை ஓய்வூதியம் மற்றும் ஒட்டுமொத்த தொகை வழங்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு ஓய்வூதியம் மற்றும் ஒட்டுமொத்த தொகை உயர்த்தி வழங்கிடவும், குடும்ப ஓய்வூதியம் மற்றும் உயிரிழக்க நேரிட்டால் இறுதிச் சடங்கிற்கான செலவினம் வழங்கியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு ஓய்வூதியம், ஒட்டுமொத்த தொகையினை உயர்த்தியும், அப்பணியாளர்கள் ஓய்விற்கு பின் உயிரிழக்க நேரிட்டால் சிறப்பு குடும்ப ஓய்வூதியம் மற்றும் இறுதிச் சடங்கிற்கான செலவினத் தொகை கீழ்கண்டவாறு வழங்கலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.
உயர்த்தப்பட்ட சிறப்பு ஓய்வூதியம், ஒட்டுமொத்தத் தொகை, குடும்ப ஓய்வூதியம் ஆகியவை அந்தந்த துறையின் உரிய கணக்குத் தலைப்புகளின் கீழ் அனுமதிக்கப்படும். இதற்கான கூடுதல் செலவினம் அந்தந்தத் துறைகளின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட கணக்குத் தலைப்புகளின் கீழ் பற்று வைக்கப்படவேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிரந்தரக் குடியுரிமை பெற்றுத் தரப் போராடுவோம்.
- நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலிக்கும்
இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம். நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
"இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்; நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம். இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள், அவர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில 3 கல்வியாண்டுகளில் 5,771 மாணவர்களுக்கு 11.07 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை, சுயஉதவிக் குழுக்களுக்கு நிதி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் பேணி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.
நீண்டகாலமாக இந்திய மண்ணில் வசித்து வரும் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய குடியுரிமையை இந்திய அரசு விரைந்து வழங்கும் என எதிர்பார்க்கிறோம். அதுவரை நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலிக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- மகளிருக்கு கோடை கால சிறப்புத் தொகையுடன் சேர்த்து ரூ. 5000 வரவு வைக்கப்பட்டுள்ளதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- ரூ.31,592.39 கோடி முதலீடு உறுதியளிக்கப்பட்டுள்ளதுடன், 61,521 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்
தமிழ்நாடு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு இன்று (பிப். 23) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் புதிதாக நிறுவப்பட உள்ள மற்றும் விரிவாக்கம் செய்யப்படவுள்ள 46 திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டங்களினால் ரூ.31,592.39 கோடி முதலீடு உறுதியளிக்கப்பட்டுள்ளதுடன், 61,521 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் மகளிருக்கு கோடை கால சிறப்புத் தொகையுடன் சேர்த்து ரூ. 5000 வரவு வைக்கப்பட்டுள்ளதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இதுவரை தன்னுடைய தாமதத்திற்கான காரணத்தை அவர் விளக்கவில்லை.
- 'எனக்கு யாருமே எதிரிகள் இல்லை, அனைவரும் நண்பர்கள்தான்'
வேலூரில் இன்று நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் தன்மீது பழி போட்டிருந்ததாக பேசியிருந்தார். கூட்டத்தில் பேசிய அவர்,
"எனக்கொரு ஒரு புதிய நண்பர் கிடைத்துள்ளார். அது யாரு தெரியுமா? முதலமைச்சர் அவர்கள்தான். 'எனக்கு யாருமே எதிரிகள் இல்லை, அனைவரும் நண்பர்கள்தான்' என்று சொன்னார் முதலமைச்சர். அப்படியிருக்க, கரூர் விஷயத்தில் ஏன் என் மீது பழி போட்டீர்கள்? உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அப்படி பேசியிருப்பீர்களா? நாங்கள் எல்லாம் உங்களுக்கு நண்பர்கள் என்றால் ஒரு நிகழ்ச்சி நடத்துவதற்கு ஒரு அனுமதியோ இடமோ ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள்? அனைத்தையும் நீங்களே செய்துவிட்டு அப்படியே போறபோக்கில் எதாவது பேசுகிறீர்களா?" எனக் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்,
"முதலமைச்சர் அவரை குற்றம் சொல்லவில்லை. அவர் பேசுவதைப் பார்த்தால் யார் வேண்டுமானாலும் அவர் மீது குற்றம் சுமத்துவார்கள், யார் வேண்டுமானாலும் அவரைப் பழிப்பார்கள். நண்பகல் 12 மணிக்கே அங்கு வந்து கூட்டத்தில் உரையாற்றுவேன் என்று சொல்லிவிட்டு, கொளுத்தும் வெயிலில் தண்ணீரோ உணவோ இல்லாமல் மக்களை இரவு 7:30 மணி வரை காத்திருக்க வைக்கும் போது, மக்கள் இறக்கின்றனர். இதற்கு யார் காரணம்? ஏன் அவர் 12.30 மணிக்கு வரவில்லை? இதுவரை அவர் விளக்கவில்லை.
அவர் குடித்திருந்தாரா? நான் அதை கேட்க விரும்பவில்லை. ஆனால் 12 மணிக்கு வருகிறேன் எனக்கூறிவிட்டு ஏன் 7.30 மணிக்கு வந்தார்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
- தமிழ்நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு தொகுதியிலும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.
- இந்தியா முழுக்க பின்பற்றக்கூடிய மாடலாக நம்முடைய திராவிட மாடல் இருக்கிறது
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொளத்தூர் பூம்புகார் நகரில் இந்து சமய அறநிலையத்துறையின் கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரியை திறந்து வைத்து பேசியதாவது:-
"இந்தியா முழுக்க பின்பற்றக்கூடிய மாடலாக நம்முடைய திராவிட மாடல் இருக்கிறது என்றால், அந்த திராவிட மாடல் அரசின் மாடல் தொகுதியாக இருப்பது கொளத்தூர் தொகுதி. எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்ற தொகுதியாக கொளத்தூரை வளர்த்து எடுத்துள்ளோம்.
ஏதோ தேர்தல் வரும் போது மட்டும் ஒன்று, இரண்டு திட்டங்களை தொடங்கி வைக்கவில்லை. கடந்த 5 வருடமாக பார்க்கிறீர்கள். ஒவ்வொரு மாதமும் வந்து உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுத்து கொண்டு வருகிறோம். இங்கு பல்கலைக்கழகம் போன்று கபாலீசுவரர் கல்லூரியை உருவாக்கி உள்ளார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு.
கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரியை உலகத் தரத்தில் உருவாக்கி உள்ளோம். கல்வி எனும் கடவுள்தான் உங்களுக்கு அனைத்தையும் கொடுக்கும். பெரிய பெரிய திட்டப் பணிகளை தமிழ்நாடு முழுவதும் திறந்து வருகிறேன். தமிழ்நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு தொகுதியிலும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். மக்களை மையப்படுத்தி மக்களை தேடி வந்து சேவைகளை வழங்குகிற மக்களாட்சியாக திராவிட மாடல் பெயர் எடுத்துள்ளது.
இந்த நல்லாட்சி தொடர, நம்ம கொளத்தூர் மேலும், மேலும் உயர, உங்களுடைய ஆதரவு என்றும் எங்களுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்." இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கோவி.செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன், மேயர் ப்ரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- முஸ்லீம் லீக் சார்பில் 5 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், திமுக 2 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளது.
- கடந்த தேர்தலில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டது.
தமிழ்நாடு தேர்தல் களத்தில் நீண்டநாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்த திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று முறைப்படி தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீட்டை முன்னெடுக்க டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.
முதற்கட்டமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் முஸ்லீம் லீக் சார்பில் 5 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், திமுக 2 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளது. நாளை மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. நாளை மறுநாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இந்நிலையில் இன்று காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த முகுல் வாஸ்னிக் மற்றும் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. ஆனால் இன்று கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 18 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. இந்நிலையில் இம்முறை காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கண்டென்ட்டில் கிங் தி.மு.க.தான்.
- 2019-ல் இருந்து தமிழ்நாட்டில் நடந்த எல்லா தேர்தல்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் சந்திப்பு இன்று சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது உரையாற்றிய அவர்,
"இந்தியாவிலேயே பூத் அளவில் டிஜிட்டல் ஏஜெண்டுகளை வைத்திருக்கும் ஒரே அரசியல் இயக்கம் தி.மு.க.தான். ஆன்லைன் மட்டுமின்றி, ஆஃப்லைனிலும் கலக்கும் அணியாக தி.மு.க. ஐடி அணி இருக்கிறது. ஆன்லைனில் உங்கள் வேலை ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்வது மட்டுமில்லை. அஜந்தாவை செட் செய்வது. ஏனெனில் கண்டென்ட்டில் கிங் தி.மு.க.தான்.
நம்மை களங்கப்படுத்தி, தமிழ்நாட்டிற்குள் நுழைய, சிதைக்க எதிரிகள் நினைக்கின்றனர். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் அவதூறுகள். அவதூறு பரப்புவோருக்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்காமல், ஆக்கப்பூர்வ பணிகளும் செய்ய வேண்டும்.
டிஃபென்ஸ் மட்டுமே ஆடக்கூடாது. அவ்வப்போது அட்டாக் மோடிலும் செயலாற்ற வேண்டும். அடித்து ஆட வேண்டும். நிறைய திட்டங்களை மக்களுக்கு கொடுத்திருக்கிறோம். கடந்த மாதத்தில் மட்டுமே எவ்வளவோ பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அறிந்துகொள்ள என்னுடைய சமூக வலைதளப் பக்கம், திமுகவின் பக்கங்கள், அரசு சமூக வலைதளப் பக்கங்களை பின்தொடருங்கள். ஐடி விங்கின் வாட்ஸ் ஆப் சேனலை அனைவரையும் பின்தொடர வைய்யுங்கள். நம் சாதனைகள்தான் பேச்சுப் பொருளாக இருக்கவேண்டும்.
தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்கி, அதில் குளிர்காய எதிரிகள் நினைக்கின்றனர். கடந்த ஐந்து மாதங்களில் பல திட்டங்களை போட்டனர். பொய் செய்திகளை பரப்ப முயன்ற திட்டங்கள் அம்பலப்பட்டு, அவமானப்பட்டு நிற்கின்றனர். பொய் செய்திகளை பரப்ப நிறைய ரைட் விங் கணக்குகளை பாஜக நடத்தி வருகிறது. அவர்கள் நம்மை குறித்து பொய் செய்தி பரப்பினால், உரிய ஆதாரத்தோடு உடனே பதிலடி தர வேண்டும்; இதை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பயம் இருக்கும். பொய் செய்திக்கு நூற்றுக்கணக்கில் தரும் பதிலடியால், அவர்கள் அதை நீக்கிவிட்டு ஓட வேண்டும்.
காமெடியாக பதில் கூறுங்கள், கிண்டலாக பதிவிடுங்கள். ஆனால் எதுவாக இருந்தாலும் கூலாக, பொறுமையாக செய்யுங்கள். அவர்களக்கு வந்தால் ரத்தம், திமுகவிற்கு வந்தால் தக்காளி சட்னி என செய்தி சேனல்களும், தேர்தல் ஆணையமும் செயல்படுகிறது. நாம் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு சொல்லையும், எழுத்தையும் பொறுப்போடு உருவாக்குங்கள்.
தோழமை கட்சியினருடன் சிண்டுமுடிக்கும் வேலையில் எதிர்க்கட்சியினர் ஈடுபடுவர். அவர்களின் சூழ்ச்சிக்கு நாம் இடம் தரக்கூடாது. திமுகவின் அதிகாரப்பூர்வ செய்திகளை மட்டும் நம்பி செயல்படுங்கள். மற்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள். களத்திலும், ஆன்லைனிலும் சரியாக செயல்பட்டால் நமது இலக்கை நாம் நிச்சயம் எட்ட முடியும். அதற்கான அடித்தளம்தான் இந்த ஆடுகளம் செயலி.
2019-ல் இருந்து தமிழ்நாட்டில் நடந்த எல்லா தேர்தல்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. யார் ஜெயிப்பார்கள் என எல்லோருக்கும் தெரியும். தி.மு.க.கூட்டணிதான் வெல்லும் என அனைவருக்கும் தெரியும். ஆனால் எத்தனை தொகுதிகள், எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்ற முடிவுகளுக்காகத்தான் காத்திருப்போம்.
2026 தேர்தலும் அதே போலத்தான். திமுகவின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட ஒன்று. ஆனால் அது எவ்வளவு பெரிய வெற்றியாக அமையும் என்பதை நோக்கிதான் இந்த உழைப்பு. செயல்வீர ர்கள் எல்லாக் கட்சிகளிலும் இருப்பார்கள். ஆனால் கொள்கைக்கான அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாமல், இணையத்தில் களமாடும் தோழர்கள் தி.மு.க.வில் மட்டும்தான் உண்டு. ஆஃப்லைன், ஆன்லைன் இரண்டிலும் தி.மு.க.தான் சிங்கம் எனக் காட்டுவோம். வெல்வோம் ஒன்றாக' என தெரிவித்தார்.
- காமராசர் நிலையில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
- கூட்டணியில் இருந்து மம்தா ஏற்கனவே வெளியேறிவிட்டார்.
இந்தியா கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பொறுத்தமான தலைவர் என முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மணி சங்கர் அய்யர் தெரிவித்திருந்தார். மேலும் நேருவுக்கு பின் பிரதமராகும் வாய்ப்பைப் பெற்றவர் காமராசர். ஆனால் காமராசர் தனக்கு ஆங்கிலம், ஹிந்தி தெரியாது என மறுத்தார். இன்று ஸ்டாலினும் அதேபோன்ற சூழலில்தான் இருக்கிறார் என நினைக்கிறேன்.
நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி வருவதற், கூட்டணியை ஒருங்கிணைக்க ஒரு ஆளுமை தேவை. ஸ்டாலின் வெற்று அரசியல் முழக்கங்களை எழுப்பிவருபவர் அல்ல. கடந்த சில வருடங்களாக அவர் பேசிவரும் ஒவ்வொரு தத்துவமும் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது. நாட்டின் முக்கியமான பிரச்சனைகளையே பேசுகிறார். எனவே ராகுல் பிரதமராக ஸ்டாலினால் துணைநிற்க முடியும். அவர் திறமையானவர். அந்தத் திறன் ஸ்டாலினிடம் மட்டும்தான் உள்ளது. ராகுல் காந்தியின் பிரதமர் பதவிக்கு அவர் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டார். எனவும் தெரிவித்தார்.
மேலும் இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் இந்தியா கூட்டணியின் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்மொழிந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
"இந்தியா கூட்டணியிலேயே வலுவாக இருப்பது திமுகதான். ஏனெனில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. காங்கிரஸிற்கு 10 உறுப்பினர்களை தந்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் காங்கிரஸிற்கு இந்த வலு இல்லை. அதனால் மு.க.ஸ்டாலின் வெளியேறிவிட்டால் இந்தியா கூட்டணி என்பது எழுத்தில் மட்டும்தான் இருக்கும். வேறு எந்த வலுவான தலைவர்களும் அந்த அணியில் இருக்கமாட்டார்கள். கூட்டணியில் இருந்து மம்தா ஏற்கனவே வெளியேறிவிட்டார். கூட்டணியில் இருந்தால்கூட சிலர் தனித்தே தேர்தலை சந்திக்கின்றனர்.
இந்த சூழலில் ஸ்டாலினும் வெளியேறிவிட்டால், இந்தியா கூட்டணி எங்கு இருக்கும்? இந்தக் கூட்டணியில் தற்போது வலுவாக இருப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். என தெரிவித்தார்.
- சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிருந்தார் அபிஷன் ஜீவிந்த்.
- படம் 10 நாள்களில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது
அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷந்த் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமான படம் 'வித் லவ்'. இபட்டதில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் பாசிலியன் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர். சான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கடந்த ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் மதனும், தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்தும் மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வித் லவ் திரைப்படம் வெளியான 10 நாள்களில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- நூறுநாள் திட்டமும், மகளிர் உரிமைத்தொகை திட்டமும் ஒன்றுதான்
- ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவோம் என்று நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார்.
தமிழ்நாட்டில் தகுதியுள்ள மகளிருக்கு மாதா மாதம் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ரூ.1000 அளித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்கான தொகை, மற்றும் கோடை சிறப்பு தொகை என மொத்தம் ரூ.5000 இன்று மகளிரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் திருமாவளவன் இதனை செயல்படுத்தியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசால் இன்று அவர்களது வங்கிக் கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தொகை 3000. கோடைக்கால இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கு உதவித்தொகை 2000 என ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இது மகளிரை மனம் குளிரச் செய்யும் மகத்தான அறிவிப்பாகும். இதைச் செயல்படுத்திய முதலமைச்சர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு ஏறத்தாழ ஒன்றரை கோடி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தைத் திமுக தேர்தல் வாக்குறுதியாக அளித்தபோது இது சாத்தியமே இல்லை என்று அதிமுக விமர்சித்தது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளால் வழிமொழியப்பட்டது.
பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியாவின் பிற மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தபோது அதேபோல் மகளிருக்கு உதவித்தொகை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தன. தமிழ்நாட்டில் திமுக அரசு நடைமுறைப்படுத்தும் இந்தத் திட்டத்தைப் பார்த்து இப்போது அசாம், டெல்லி, ஒடிசா, கர்நாடகா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் முதலான மாநிலங்களில் மாதம் தோறும் மகளிருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இப்படி இந்தியாவுக்கே முன்மாதிரியாக இந்தத் திட்டம் அமைத்துவிட்டது.
உரிமைத் தொகையைப் பெறும் பெண்கள் அந்தத் தொகையை சிறு சிறு கடன்களை அடைப்பதற்கும் தமது குழந்தைகளின் கல்வி, முதியோரின் மருத்துவச் செலவுகள் ஆகியவற்றை ஈடு கட்டுவதற்கும் பயன்படுத்துகின்றனர். சிறிய அளவில் அவர்கள் சேமிக்கவும் செய்கின்றனர். இந்த உரிமைத் தொகை பெண்களுக்கு குறிப்பாகக் கிராமப்புறப் பெண்களுக்குப் பொருளாதாரத் தற்சாற்பை அளித்திருக்கிறது.
தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில் இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜக - அதிமுக கூட்டணியினர் சதி செய்துள்ளனர். நீதிமன்றத்தின் மூலமாகத் தடை ஆணை பெறுவதற்கும் முயற்சி செய்து இருக்கிறார்கள். இதை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கும் முன்பணமாக 1000 ரூபாயும், கோடை காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை எதிர்கொள்வதற்காக 2000 ரூபாய் உதவித்தொகையும் சேர்த்து ஐந்தாயிரம் ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் மகளிருக்கு இன்று கிடைத்திருக்கிறது இது அவர்களுடைய மனம் குளிரச் செய்யும் அறிவிப்பு மட்டுமல்ல கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அறிவிப்பும் ஆகும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போது இந்திய ஒன்றிய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து கிராமப்புற மகளிருக்கு அந்தத் தொகை கூலியாகக் கிடைப்பதற்கு வழி செய்தது. இதனால் கிராமப்புற பொருளாதாரம் சற்று பாதுகாக்கப்பட்டது.
'கொரோனா காலத்தில் இந்தியப் பொருளாதாரம் பெரிய அளவில் வீழ்ச்சி அடையாமல் தடுத்ததில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி முக்கிய பங்கு வகித்தது' என்று பொருளாதார நிபுணர்கள் கூறினர். அதைப் போலத்தான் மகளிர் உரிமைத் திட்டமும் செயல்படுகிறது. இந்தத் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 74% பேர் கிராமப்புறப் பெண்களாவர்.
பெண்களிடம் பணத்தைக் கொடுத்தால் அதை அவர்கள் ஆக்கபூர்வமான வழிகளில் தான் செலவு செய்வார்கள். அது பண சுழற்சியை ஏற்படுத்தி பொருளாதார மேம்பாட்டுக்கு வழி வகுக்கும். மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தமிழ்நாட்டில் அதைத்தான் செய்திருக்கிறது.
'அடுத்து அமையப் போகிற திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை மாதம் 2000 ரூபாய் என உயர்த்தி வழங்கப்படும்' என்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இது யாரும் எதிர்பாராத ஒரு அறிவிப்பாகும். திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெற்று வரும் பெண்கள் 'மீண்டும் திமுகவைத்தான் ஆட்சியில் அமத்துவோம்!' என்று உறுதி எடுத்து இருக்கிறார்கள். இந்த அறிவிப்பு அவர்களுக்கெல்லாம் ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது.
2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவோம் என்று நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். அது பொய்யான வாக்குறுதி என்பது அம்பலமானது. 15 லட்சம் அல்ல 15 ரூபாயைக் கூட அவர்கள் கொடுக்கவில்லை.
மோடியைப் போல வாயால் வடை சுடுபவரல்ல நமது முதலமைச்சர். மிகச் சிறப்பாக மகளிர் உரிமைத் திட்டத்தை அவர் செயல்படுத்திக் காட்டியுள்ளார். எனவே, அடுத்துவரும் திமுக ஆட்சியில் 2000 ரூபாயும் உறுதியாக வழங்கப்படும் என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். 2021 இல் தான் அளிற்ற வாக்குறுதிகளை மட்டுமின்றி அளிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் காட்டியவர் நமது முதலமைச்சர். காலை உணவுத் திட்டம் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்படவில்லை. ஆனால், அந்தத் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
மக்கள் நல அரசாக, சமூக நீதி அரசாக, இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில், கல்வி வளர்ச்சியில், சுகாதாரக் கட்டமைப்பில் முதல் மாநிலம் என்ற பெருமைகொண்ட அரசாகத் தமிழ்நாடு அரசைத் தலைநிமிரச் செய்திருக்கிறார் நம்முடைய முதலமைச்சர். அவருடைய சாதனை தொடர்வதற்கு தமிழ்நாட்டு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அவரது தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் அமைய ஆதரவு தரவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ஒரு வீடு கட்டுவதற்குத் தலா ரூ. 3.50 லட்சம் நிதி உதவியைத் தமிழ்நாடு அரசு வழங்குகிறது.
- "குடிசைகள் இல்லாத மாநிலமாக" மாற்றுவதற்காகத் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட திட்டம்
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
குடிசை மற்றும் சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், பட்டா இருந்தும் சொந்தமாக வீடு இல்லாதவர்கள், ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட தகுதியுடைய பயனாளிகளுக்கு, 360 சதுர அடி நிலம் இலவசமாக வழங்கப்பட்டு, ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டித்தரப்படும்.
இதுவரை இத்திட்டத்தின்கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கலைஞர் கனவு இல்லம் திட்டம், 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை "குடிசைகள் இல்லாத மாநிலமாக" மாற்றுவதற்காக தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. 2030-க்குள் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- சென்னையும், வடக்கு தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
- இந்தியாவில் எந்தக் கட்சியிலும் இல்லாத கட்டமைப்பு திமுகவில் உள்ளது.
திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடு இன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்றது. இதில் திமுகவின் 15 மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த BLA2, BLC, BDA, BYA நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வாக்குச்சாவடி முகவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் நிகழ்வில் பேசிய அவர்,
"சென்னை, விழுப்புரம் மண்டலங்களில் 49 தொகுதிகள் அடங்கியுள்ளது. இங்கு வெற்றியை உறுதி செய்ய நாம் இங்கு கூடியுள்ளோம். சென்னையும், வடக்கு தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
தேர்தல் பணி என வந்தால், திமுகவினரை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. நான் மட்டுமல்ல, திமுகவின் எதிரிகளே இதை பல நேரங்களில் சொல்லியிருக்கிறார்கள். அதே ஆற்றல், அதே கவனத்தோடு இந்தமுறையும் உழைக்கவேண்டும். தேர்தல் களத்தில் திமுகதான் ஹீரோ. இந்தியாவில் எந்தக் கட்சியிலும் இல்லாத கட்டமைப்பு திமுகவில் உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த பூத்துகளின் எண்ணிக்கை 75 ஆயிரம். ஒவ்வொரு பூத்திற்கும் நாம் 350 வாக்குகளை டார்கெட் செய்திருக்கிறோம். இதை அடைந்தாலே 2 கோடியே 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நாம் பெறலாம். 2021-ஐவிட தற்போது நமக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலிலேயே அது தெரிந்தது.
நிச்சயமாக 2026 தேர்தலில் திமுக வெல்லும். தற்போதைய சூழலில் திமுக கூட்டணி தவிர்த்து யாருக்கு வாக்களித்தாலும், வளர்ச்சி அரசியல் மாறி கலவர அரசியல்தான் நடக்கும். வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்பதை முடிவு செய்யப்போவதுதான் இந்தத் தேர்தல் .
அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டை காக்க எல்லோரையும் திமுகவை ஆதரிக்கவேண்டிய தேவையை விளக்கவேண்டும். மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு செய்யக்கூடிய நிதி வஞ்சகத்தையும், அதை எதிர்த்து கேள்விக்கேட்காத அதிமுகவையும் மக்கள்முன் தோல் உரிக்கவேண்டும்.
பாஜகவின் டப்பா என்ஜின் முன்னால், தமிழ்நாடு திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் என்ஜின் என்றும் தலைகுனியாது. இதனை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வாக்காளருக்கும் கொண்டு செல்லவேண்டும். களப்பணி மட்டும்தான் முழுப்பணி. வெறுப்பை விதைத்து, வன்முறையைத் தூண்டி, மக்களை பிளவுப்படுத்தி அதன்மூலம் வெற்றிப் பெறலாம் என துடிக்கும் விஷவிதைகளை தமிழ்நாட்டிற்குள் விடவேக்கூடாது. நாம் போராடுவது திமுகவின் வெற்றிக்காக அல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக.
எங்கு யார் நின்றாலும், 234 தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் நிற்கிறேன் என்று நினைத்து பணியாற்றவேண்டும். ஒற்றுமை இல்லாமல் இலக்கை அடையமுடியாது. இந்தியாவில் எந்தக் கட்சியும் இப்படி உழைக்காது. அதனால்தான் திமுக, தமிழ்நாடு நம்பர் ஒன்னாக இருக்கிறது." என தெரிவித்தார்.






