அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி!

மகளிருக்கு கோடை கால சிறப்புத் தொகையுடன் சேர்த்து ரூ. 5000 வரவு வைக்கப்பட்டுள்ளதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.31,592.39 கோடி முதலீடு உறுதியளிக்கப்பட்டுள்ளதுடன், 61,521 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்
அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி!
Published on

தமிழ்நாடு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு இன்று (பிப். 23) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் புதிதாக நிறுவப்பட உள்ள மற்றும் விரிவாக்கம் செய்யப்படவுள்ள 46 திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்களினால் ரூ.31,592.39 கோடி முதலீடு உறுதியளிக்கப்பட்டுள்ளதுடன், 61,521 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் மகளிருக்கு கோடை கால சிறப்புத் தொகையுடன் சேர்த்து ரூ. 5000 வரவு வைக்கப்பட்டுள்ளதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com