என் மலர்
நீங்கள் தேடியது "Karur incident"
- விஜய் இரண்டாவது நாளாக டெல்லியில் உள்ள சிபிஐ ஆஜராகி விளக்கம் அளித்தார்.
- தியேட்டர் ஒன்றிலும் இந்த டயலாக்கை ஜீவா பேசியிருந்தார்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்றுகூட தவெக தலைவர் விஜய் இரண்டாவது நாளாக டெல்லியில் உள்ள சிபிஐ ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த கரூர் சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிக்கையில் அவர் பெயரும் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் ஜீவாவின் பேச்சுக்கு இணையத்தில் கடும் கண்டனங்கள் எழுந்துவருகிறது. அதாவது கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தன்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் உயிரிழப்புகள் தொடர்பாக, 'படிச்சு படிச்சு சொன்னோம். கண்டிஷன்ஸை ஃபாலோ பண்ணுங்கடான்னு' எனப் பேசியிருந்தார். ஆனால் அது சமூக வலைதளங்களில் பெரும் ட்ரோல் செய்யப்பட்டு, கேலி, கிண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த டயலாக்கை தலைவர் தம்பி தலைமையில் படத்தில் நடிகர் ஜீவா பேசியிருந்தார். அதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டதற்கு டிரெண்டிங்காக வைத்தோம். இயக்குநர் கூறியதால்தான் பேசினேன் என தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தியேட்டர் ஒன்றிலும் இந்த டயலாக்கை ஜீவா பேசியிருந்தார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வைரலாக்கினர். இந்நிலையில் இதற்கு இணையவாசிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பல உயிர்கள் பறிபோன ஒரு சோகமான நிகழ்வின் போது வெளிப்பட்ட வார்த்தைகளை, ஒரு திரைப்படத்தில் நகைச்சுவைக்காக அல்லது கிண்டலாகப் பயன்படுத்தியது மிகவும் உணர்ச்சியற்ற செயல் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.







