என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி"
- இபிஎஸ் மக்கள் கூட்டத்திற்கு முன் ஏதாவது பேச வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார்.
- எங்கள் கட்சியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கவலைப்பட தேவையில்லை.
திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உங்களுடன் ஸ்டாலின் முகாம் அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார். இன்னும் 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார்.
ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் சிலர் நீதிமன்றம் சென்று உள்ளார்கள். எது எப்படி இருந்தாலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நாங்கள் செயல்படுவோம்.
திட்டத்தின் பெயரை வைத்தும் சிலர் அரசியல் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி பொது தேர்வு கால அட்டவணைகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.
எடப்பாடி பழனிச்சாமி தற்போது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். மக்கள் கூட்டத்திற்கு முன் ஏதாவது பேச வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அது எதுவும் எடுபடவில்லை.
அவர் மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைக்கிறார். ஆனால் அவருடைய அழைப்பை அனைவரும் நிராகரித்து வருகிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் தி.மு.க.வில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இளம் தலைவராக இருக்கிறார். எங்கள் கட்சியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கவலைப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- “இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே” என்பதை மாணவச் செல்வங்களுக்கு அன்போடு தெரிவிக்கிறேன்.
- மாணவச் செல்வங்கள் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள் எனும் நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உண்டு.
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது. பொதுத்தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் காலை 9 மணிக்கு வெளியிட உள்ளார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்களில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில், இன்று வெளியாகும் பொதுத்தேர்வு முடிவு மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்றைய தினம் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுகிறோம்.
முதலமைச்சர் அவர்களின் கூற்றுப்படி "இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே" என்பதை மாணவச் செல்வங்களுக்கு அன்போடு தெரிவிக்கிறேன்.
மதிப்பெண்களை அளவாக கொள்ளாமல், தங்களின் திறமைகள் சார்ந்த துறைகளில் மாணவச் செல்வங்கள் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள் எனும் நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உண்டு. மாணவர்களே… உங்கள் ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் ஆளுமைமிக்க நாற்காலி காத்துக்கொண்டிக்கிறது. வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
- கல்வி முறை, பாடத்திட்டங்கள், பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து அன்பில் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.
- 1699-ஆம் ஆண்டு கட்டப்பட்ட நூலகம் தற்போது இணையதள வசதியின் மூலம் வாசகர்களுக்கு பெரும்பாலான சேவைகளை வழங்கும் நவீன நூலகமாக திகழ்கிறது.
சென்னை:
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டென்மார்க், சுவீடன், நார்வே ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த நாடுகளில் உள்ள கல்வி முறை, பாடத்திட்டங்கள், பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து அன்பில் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஸ்காட்லாந்துக்கு சென்றுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அங்குள்ள தேசிய நூலகத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டார்.
இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பிரிட்டன் கூட்டமைப்பின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான ஸ்காட்லாந்து தேசிய நூலகம் சென்றோம். 1699-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்நூலகம் தற்போது இணையதள வசதியின் மூலம் வாசகர்களுக்கு பெரும்பாலான சேவைகளை வழங்கும் நவீன நூலகமாக திகழ்கிறது.

தொடர்ந்து ஸ்காட்லாந்தின் மைய நூலகத்தையும், குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் சிறுவர் நூலகத்தையும் பார்வையிட்டோம்.
முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்
திராவிட மாடல் ஆட்சியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகமும் ஸ்காட்லாந்து நாட்டின் நூலகங்களைப் போலவே காலம் பல கடந்து சாதனையாளர்கள் பலரை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை! என கூறியுள்ளார்.
பிரிட்டன் கூட்டமைப்பின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான ஸ்காட்லாந்து தேசிய நூலகம் சென்றோம். 1699-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்நூலகம் தற்போது இணையதள வசதியின் மூலம் வாசகர்களுக்கு பெரும்பாலான சேவைகளை வழங்கும் நவீன நூலகமாக திகழ்கிறது.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) May 31, 2024
தொடர்ந்து ஸ்காட்லாந்தின் மைய நூலகத்தையும்,… pic.twitter.com/8lHqAtaorP






