என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Exam date"

    • கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களுக்காக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • கணினி பயிற்றுநர் நிலை-1 தேர்வு செப்டம்பர் 28ல் நடக்கும்.

    முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களுக்காக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 தேர்வு செப்டம்பர் 28ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், செப்டம்பர் 28ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு தேதி அக்டோபர் 12ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

    • இபிஎஸ் மக்கள் கூட்டத்திற்கு முன் ஏதாவது பேச வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார்.
    • எங்கள் கட்சியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கவலைப்பட தேவையில்லை.

    திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    உங்களுடன் ஸ்டாலின் முகாம் அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார். இன்னும் 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார்.

    ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் சிலர் நீதிமன்றம் சென்று உள்ளார்கள். எது எப்படி இருந்தாலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நாங்கள் செயல்படுவோம்.

    திட்டத்தின் பெயரை வைத்தும் சிலர் அரசியல் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி பொது தேர்வு கால அட்டவணைகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.

    எடப்பாடி பழனிச்சாமி தற்போது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். மக்கள் கூட்டத்திற்கு முன் ஏதாவது பேச வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அது எதுவும் எடுபடவில்லை.

    அவர் மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைக்கிறார். ஆனால் அவருடைய அழைப்பை அனைவரும் நிராகரித்து வருகிறார்கள்.

    உதயநிதி ஸ்டாலின் தி.மு.க.வில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இளம் தலைவராக இருக்கிறார். எங்கள் கட்சியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கவலைப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
    • முழு ஆண்டு தேர்வுக்குப் பிறகு ஏப்ரல் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

    அதில், 2025-26ம் கல்வியாண்டின் மொத்தம் 210 நாட்கள் வேலை நாட்கள்; அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

    மேலும், அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

    காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளுக்கு 2026ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி முழு ஆண்டு தேர்வுகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    பள்ளி வேலை நாட்கள் 2026 ஏப்ரல் 24ம் தேதியுடன் நிறைவுபெறும் என்றும் ஏப்ரல் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அறிவியல் தேர்வு, ஏப்ரல் 22ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • சமூக அறிவியல் தேர்வு, 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில், 4 முதல் 9 வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகளின் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, வரும் ஏப்ரல் 10ம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வு, ஏப்ரல் 22ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 12ம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு, 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    உருது பள்ளிகளுக்கு மட்டும் அறிவித்த விடுமுறையை, அனைத்து பள்ளிகளுக்குமாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    • பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    • 10-ம் வகுப்பு துணைத் தேர்வு நிலை 2-ந்தேதி தொடங்கி 8-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் நேற்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய 8.94 லட்சம் மாணவ-மாணவிகளில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

    பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த துணை தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.

    10-ம் வகுப்பு பொதுத் தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், வருகை புரியாத மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத துணைத் தேர்வு நடத்தப்படுகிறது.

    மீண்டும் தேர்வு எழுத அவர்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று 16-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஜூலை மாத துணைத் தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்கள் மற்றும் ஏப்ரலில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தனித்தேர்வர்களும் 16-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

    செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வருகை புரியாதவர்கள், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர 16-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு சென்று கட்டணம் ரூ.125 பணமாக செலுத்தி பெயர்களை பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த அனுமதி சீட்டை காண்பித்தால் மட்டுமே அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவார்கள். 10-ம் வகுப்பு தேர்வு கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.70, மொத்தம் ரூ.195. இதனை சேவை மையத்தில், பள்ளியில் பணமாக செலுத்த வேண்டும்.

    மேற்கண்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தில் ஜூன் 3 மற்றும் 4-ந்தேதி ஆகிய 2 நாட்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.500 ஆகும்.

    ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தேர்வர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

    10-ம் வகுப்பு துணைத் தேர்வு நிலை 2-ந்தேதி தொடங்கி 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஜூலை 2-ந் தேதி தமிழ், 3-ந்தேதி ஆங்கிலம், 4-ந்தேதி கணிதம், 5-ந்தேதி அறிவியல் 6-ந்தேதி விருப்ப மொழிப்பாடம், 8-ந்தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும். தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெறும்.

    மேற்கண்ட தகவலை தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

    ×