என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2025-26 கல்வியாண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியீடு- பள்ளிக் கல்வித்துறை
    X

    2025-26 கல்வியாண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியீடு- பள்ளிக் கல்வித்துறை

    • அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
    • முழு ஆண்டு தேர்வுக்குப் பிறகு ஏப்ரல் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

    அதில், 2025-26ம் கல்வியாண்டின் மொத்தம் 210 நாட்கள் வேலை நாட்கள்; அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

    மேலும், அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

    காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளுக்கு 2026ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி முழு ஆண்டு தேர்வுகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    பள்ளி வேலை நாட்கள் 2026 ஏப்ரல் 24ம் தேதியுடன் நிறைவுபெறும் என்றும் ஏப்ரல் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×