என் மலர்
நீங்கள் தேடியது "பேரறிஞர் அண்ணா"
- இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்
- யுபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்படுவது, ரெயில்வே நேர்காணலுக்கு மொழி வல்லமை தேவை ஆகியவற்றைக் காட்டும் இடங்களில் புனைவு என்று குறிப்பிடப்பட வேண்டும்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'பராசக்தி'.
டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது இவரின் 100வது படம். சிவகார்த்திகேயனின் 25வது படம்.
இப்படம் இன்று தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் உலகமெங்கும் வெளியானது. இப்படம் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
'டெல்லி தான் இந்தியாவா.. நாங்க இந்தி திணிப்புக்கு தான் எதிரானவங்க, இந்திக்கோ இந்திக்காரங்களுக்கோ இல்ல.. என் செந்தமிழை காக்க பெரும் சேனை ஒன்று உண்டு' உள்ளிட்ட வசனங்கள், பேரறிஞர் அண்ணா ஒரு கதாபாத்திரமாக தோன்றியது கூடுதல் சிறப்பாக அமைந்தது.
இந்த படதிற்கு ரிலீசுக்கு ஒரு நாள் முன்பு அதாவது நேற்று தான் யு/ஏ 16+ தணிக்கைச் சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியது.
படத்தில் 'தீ பரவட்டும்' என்ற டேக் லைன் பயன்படுத்தப்பட்டிருக்கும் காட்சிகளில் 'நீதி பரவட்டும்' என மாற்ற பரிந்துரைத்திருக்கிறது தணிக்கை வாரியம்.
சென்சார் வாரிய பரிந்துரைகளின்படி மொத்தம் 25 வெட்டுகள், மியூட்கள் செய்த பின்னரே இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தில் அண்ணாவின் 'தீ பரவட்டும்' உட்பட பல்வேறு வசனங்களுக்கு சென்சார் வெட்டு போட்டுள்ளது.
"தீ பரவட்டும்" என்ற வார்த்தையை "நீதி பரவட்டும்" என்று மாற்றுமாறு வாரியம் பரிந்துரைத்துள்ளது. படத்தின் அவ்வாசகம் பேசப்படும் அல்லது திரையில் தோன்றும் அனைத்து இடங்களில் இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.
இதோடு 'இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்' என்ற வசனம் நீக்கப்பட்டுள்ளது.
படத்தின் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கும் 'இந்தி என் கனவை அழித்தது' என்ற வாசகத்திற்குப் பதிலாக 'என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது' என மாற்ற சென்சார் வாரியம் கூறியுள்ளது. அதன்படி மாற்றப்பட்டது.
அதோடு, 'இந்தி கத்துக்கிட்டு' என்ற வாசகத்தை மியூட் செய்ய வேண்டுமெனவும், "இந்தி அரக்கி" என்ற வாசகத்தை, அது எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் "அரக்கி" என்பதை வேறு விதமாக மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
"இந்தி அரக்கி" என்ற வாசகங்களைக் கொண்ட உருவபொம்மை எரிக்கப்படும் காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.
டிரெய்லரில் ரவி மோகன் கூறும் 'Anti national' என்ற வார்த்தை தணிக்கை வாரியத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
மேலும், திரைப்படத்தில் தீக்குளிப்பது தொடர்பான காட்சிகள் 50% அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்படுவது, ரெயில்வே நேர்காணலுக்கு மொழி வல்லமை தேவை ஆகியவற்றைக் காட்டும் இடங்களில் புனைவு என்று குறிப்பிடப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் நீக்கி படத்தின் நீளம் 2 மணி நேரம் 43 நிமிடங்களாக அமைந்துள்ளது.
- திமுக எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா
- தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட அண்ணாவின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில்,
தமிழன்னை தந்திட்ட தலைமகன்!
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா ?♥
தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!
என்று தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டைத் தலைநிமிரவைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல, தமிழர் பெற்ற உணர்வு.
- பேரறிஞர் பெருந்தகையின் லட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:
நாம் செல்லுகின்ற திராவிட மாடல் பாதைக்கு பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று.
"ஏ தாழ்ந்த தமிழகமே" எனத் தட்டியெழுப்பி, தமிழ்நாட்டைத் தலைநிமிரவைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல, தமிழர் பெற்ற உணர்வு. பேரறிஞர் பெருந்தகையின் லட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

- அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை.
- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கவிஞர் வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு.
சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முன்னதாக, பேரறிஞர் அண்ணாவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பின்னர், கருணாநிதி நினைவிடம் முன்பு நிறுவப்பட்டுள்ள சிலையை முதல்வர் திறந்து வைத்தார். பின்னர், கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திறப்பு விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, ஏ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கவிஞர் வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
கருணாநிதியின் நினைவிடத்தை சுற்றிலும் அவரது பொன்மொழி வாசகங்களை கல்வெட்டுகள் தாங்கி நிற்கும். அங்கு, கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களை பொன்னாடை போர்த்தி முதல்வர் ஸ்டாலின் சிறப்பித்தார்.
- அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம் என்றார்.
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது. மதராஸ் மாநிலம் என்ற பெயரைத் தமிழ்நாடு' என மாற்றியது. தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில், அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
- பேரறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாகக் கேட்டதும் இல்லை.
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பல முதல்வர்களோடு பழகியிருக்கிறேன்; பார்த்திருக்கிறேன்.
இந்த வகையில் என் மனதோரம் ஒரு குறை இருந்தது. பேரறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாகக் கேட்டதும் இல்லை என்கிற குறை.
அவருடனான என் தொடர்பெல்லாம் அவரின் எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாகத்தான் அமைந்தது.
இன்றைய அவரது பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் நேரத்தில் முன்பொரு நிகழ்ச்சியில் என் அக்கா சொன்ன இந்த இனிய சம்பவம் நினைவுக்கு வந்தது.
பேரறிஞர் அண்ணா புகழ் ஓங்குக.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்!
- வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்!
சென்னை:
1967-ம் ஆண்டு மார்ச் 6-ந்தேதியன்று பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாளை சுட்டிக்காட்டி, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
1967: அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது!
தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்! என்று கூறியுள்ளார்.






