என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்சார் வாரியம்"

    • இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்
    • யுபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்படுவது, ரெயில்வே நேர்காணலுக்கு மொழி வல்லமை தேவை ஆகியவற்றைக் காட்டும் இடங்களில் புனைவு என்று குறிப்பிடப்பட வேண்டும்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'பராசக்தி'.

    டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது இவரின் 100வது படம். சிவகார்த்திகேயனின் 25வது படம்.

    இப்படம் இன்று தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் உலகமெங்கும் வெளியானது. இப்படம் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    'டெல்லி தான் இந்தியாவா.. நாங்க இந்தி திணிப்புக்கு தான் எதிரானவங்க, இந்திக்கோ இந்திக்காரங்களுக்கோ இல்ல.. என் செந்தமிழை காக்க பெரும் சேனை ஒன்று உண்டு' உள்ளிட்ட வசனங்கள், பேரறிஞர் அண்ணா ஒரு கதாபாத்திரமாக தோன்றியது கூடுதல் சிறப்பாக அமைந்தது.

    இந்த படதிற்கு ரிலீசுக்கு ஒரு நாள் முன்பு அதாவது நேற்று தான் யு/ஏ 16+ தணிக்கைச் சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியது.

    படத்தில் 'தீ பரவட்டும்' என்ற டேக் லைன் பயன்படுத்தப்பட்டிருக்கும் காட்சிகளில் 'நீதி பரவட்டும்' என மாற்ற பரிந்துரைத்திருக்கிறது தணிக்கை வாரியம்.

    சென்சார் வாரிய பரிந்துரைகளின்படி மொத்தம் 25 வெட்டுகள், மியூட்கள் செய்த பின்னரே இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தில் அண்ணாவின் 'தீ பரவட்டும்' உட்பட பல்வேறு வசனங்களுக்கு சென்சார் வெட்டு போட்டுள்ளது.

    "தீ பரவட்டும்" என்ற வார்த்தையை "நீதி பரவட்டும்" என்று மாற்றுமாறு வாரியம் பரிந்துரைத்துள்ளது. படத்தின் அவ்வாசகம் பேசப்படும் அல்லது திரையில் தோன்றும் அனைத்து இடங்களில் இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

    இதோடு 'இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்' என்ற வசனம் நீக்கப்பட்டுள்ளது.

    படத்தின் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கும் 'இந்தி என் கனவை அழித்தது' என்ற வாசகத்திற்குப் பதிலாக 'என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது' என மாற்ற சென்சார் வாரியம் கூறியுள்ளது. அதன்படி மாற்றப்பட்டது.

    அதோடு, 'இந்தி கத்துக்கிட்டு' என்ற வாசகத்தை மியூட் செய்ய வேண்டுமெனவும், "இந்தி அரக்கி" என்ற வாசகத்தை, அது எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் "அரக்கி" என்பதை வேறு விதமாக மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    "இந்தி அரக்கி" என்ற வாசகங்களைக் கொண்ட உருவபொம்மை எரிக்கப்படும் காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

    டிரெய்லரில் ரவி மோகன் கூறும் 'Anti national' என்ற வார்த்தை தணிக்கை வாரியத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    மேலும், திரைப்படத்தில் தீக்குளிப்பது தொடர்பான காட்சிகள் 50% அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.

    யுபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்படுவது, ரெயில்வே நேர்காணலுக்கு மொழி வல்லமை தேவை ஆகியவற்றைக் காட்டும் இடங்களில் புனைவு என்று குறிப்பிடப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இவை அனைத்தையும் நீக்கி படத்தின் நீளம் 2 மணி நேரம் 43 நிமிடங்களாக அமைந்துள்ளது.   

    விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ, விஜய்க்கு சம்மன் அனுப்பியது.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ஜன நாயகன். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கேவிஎன் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

    தவெக மூலம் அரசியல் பிரவேசம் செய்துள்ள விஜய் இது தனது கடைசி படம் என்று தெரிவித்துள்ளார்.

    இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதல் வழங்கப்படவில்லை.

    எனவே தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுகியது. படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் காட்சிகள் உள்ளதாவும், அதை நீக்கிய பின்னரே சான்றிதழ் அளிப்போம் எனவும் சென்சார் வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    இதனால் இதுவரை சான்றிதழ் கிடைக்காததால் நாளை படத்தை ரிலீஸ் செய்வது முடியாத காரியம் என்பதால் படத்தின் ரிலீசை ஒத்தி வைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதனால் விஜய் ரசிகர்கள் ஒரு புறம் சோகத்தின் இருக்க மறுபுறம் விஜய்யின் படத்தை சென்சார் வாரியம் மூலம் மத்திய அரசு குறிவைத்து அரசியல் அழுத்தம் தருவதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அமலாக்கத்துறை, சிபிஐ போல சென்சார் வாரியாதையும் மிரட்டல் கருவியாக மோடி அரசு மாற்றி உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    ஜனநாயன் சர்ச்சை குறித்து திரைபிரபலங்கள் குரல் எழுப்பினாலும், தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் உள்ளிட்ட எவையும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

    இதற்கு ஒரு படி மேல் ஜனநாயன் ஹீரோ விஜய் இந்த விவகாரத்தில் எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்காதது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சென்சார் வாரியம் மத்திய அரசின் கீழ் வருவதால் அரசியலில் பாஜகவுக்கு Soft corner உடன் செயல்படும் விஜய், சினிமா விஷயத்திலும் எதற்கு வம்பு என இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    மலேசியாவில் நடந்த ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில், தனது படம் என்றாலே பிரச்சனை வரும் என விஜய் பேசியிருந்தார். அது மாநில அரசை குறிவைத்தே அவர் கூறியதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் தற்போதைய பிரச்சனை மத்திய வளையத்துக்குள் வருகிறது.

    இதே இடத்தில் மாநிலத்தில் ஆளும் திமுக இருந்திருந்தால் விஜய் வேறுமாதிரி ஹேண்டில் செய்திருப்பாரோ என்று தோன்றுவது இயல்பே. ஆனாலும் சில தீவிர விஜய் ரசிகர்கள் cum ஆதரவாளர்கள் இந்த விஷயத்தில் பாஜகவும் - திமுகவும் கூட்டு என கருத்து சொல்லி வருகின்றனர்.

    எதுவாக இருந்தாலும் விஜயின் மௌனம் இது மத்திய விவகாரம் என்பதாலேயே இருக்கும் என ஊகிக்கலாம். அண்மையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ, விஜய்க்கு சம்மன் அனுப்பியது.

    சிபிஐ சம்மன், ஜனநாயகன் சென்சார் என இரண்டையும் வைத்து விஜய்க்கு 2026 சட்டமன்றத் தேர்தல் ஆதாயத்துக்கு விஜய்க்கு அழுத்தம் தரப்படுகிறதா என்றும் யோசிக்க வேண்டி உள்ளது. காங்கிரஸ் ஏற்கனவே இந்த Theory -ஐ முன்வைத்து வருகிறது. மேலும் பல Theoryகள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. அவை பின்வருமாறு,

    Theory 1 : அதிமுக பாஜக கூட்டணிக்கு வர தவெகவுக்கு அழுத்தம் தரப்படுகிறது.

    Theory 2: விஜய் தனித்தே போட்டியிடட்டும், ஆனால் பிரசாரத்தில் திமுகவை மட்டுமே டார்கெட் செய்ய வேண்டும், எந்த காரணம் கொண்டும் மத்திய பாஜகவை விமர்சிக்க கூடாது. 

     Theory 3: விஜயே அனுதாபத்துக்காக இப்படி எல்லாம் செய்கிறார்.

    எதுவாக இருந்தாலும் விஜய் வாய் திறந்த பேசினால் தீர்வு கிடைக்கும் அல்லது குறைந்தபட்சம் ரசிகர்கள் cum ஆதரவாளர்களுக்கு தெளிவு பிறக்கும். எது எப்படியோ ஜனநாயகன் பொங்கலுக்கு சென்சார் வாரியம் பொங்க வைத்திவிட்டதே நிதர்சனம்.

    பின் குறிப்பு: இதேபோல சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்திற்கும் இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இப்படம் ஜனவரி 10 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்திற்கான முன்பதிவை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. 

    அதை நீக்கிய பின்னரே சான்றிதழ் அளிப்போம் எனவும் சென்சார் வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ஜன நாயகன். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கேவிஎன் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

    தவெக மூலம் அரசியல் பிரவேசம் செய்துள்ள விஜய் இது தனது கடைசி படம் என்று தெரிவித்துள்ளார்.

    இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதல் வழங்கப்படவில்லை.

    எனவே தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுகியது. படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் காட்சிகள் உள்ளதாவும், அதை நீக்கிய பின்னரே சான்றிதழ் அளிப்போம் எனவும் சென்சார் வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    இதனால் இதுவரை சான்றிதழ் கிடைக்காததால் நாளை படத்தை ரிலீஸ் செய்வது முடியாத காரியம்ம் என்பதால் படத்தின் ரிலீசை ஒத்தி வைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதனால் விஜய் ரசிகர்கள் ஒரு புறம் சோகத்தின் இருக்க மறுபுறம் விஜய்யின் படத்தை சென்சார் வாரியம் மூலம் மத்திய அரசு குறிவைத்து அரசியல் அழுத்தம் தருவதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அமலாக்கத்துறை, சிபிஐ போல சென்சார் வாரியாதையும் மிரட்டல் கருவியாக மோடி அரசு மாற்றி உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதேபோல சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகியுள்ள 'பராசக்தி' படத்திற்கும் இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை.

    இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    இப்படம் ஜனவரி 10 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்திற்கான முன்பதிவை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்த வருட பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த 2 முக்கிய படங்களுமே சென்சார் வாரியத்தின் இழுத்தடிப்பால் சிக்கலில் மாட்டி உள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பராசக்தி படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரவி மோகன் ஜனநாயகன் படம் வெளியாகாதது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

    அதேபோல ஜனநாயகன், பராசக்தி படங்களுக்கு நேரும் இத்தகு சிக்கல் சினிமாவை திட்டமிட்டுக் கொலை செய்யும் செயல் என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

    கடந்த சில மாதங்களாக பெரிய படங்கள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது. தமிழ் திரையுலகம் பெரும் ஆபத்தில் உள்ளது என இயக்குநர் ரத்ன குமார் கூறியுள்ளார்.

    இதேபோல ஜனநாயகனுக்கு ஆதரவாக பல திரைபிரபலங்கள் தங்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    ஆனால் இது எதையும் குறித்து தயாரிப்பு நிறுவனங்களோ, தயாரிப்பாளர்களோ, அல்லது தயாரிப்பாளர் சங்கமோ இதுவரை வாய் திறக்கவில்லை.

    ஒரு படம் குறித்த நேரத்தில் வெளியாகாதது தயாரிப்பாளர்களுக்கே பெரும் பின்னடைவாகவும் நஷ்டமாகவும் அமையும்.

    அப்படியிருக்க தமிழ் சினிமாவில் இரு பெரும் படங்கள் குறிவைக்கப்படுவது குறித்து ஏன் ஒரு கண்டனம் கூட தயாரிப்பு வட்டாரங்களில் இருந்து வரவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

    பேசினால் மத்திய அரசை விமர்சிப்பதாகிவிடும் என மௌனம் சாதிக்கின்றனரா அல்லது விஜய் அரசியல் வருகையால் அவருக்கு நேரும் பிரச்சனை குறித்து பேசாமல் இருந்து தமிழகத்தில் ஆளும் திமுகவை திருப்திப்படுத்த முயற்சிக்கின்றனரா என்று கருத வேண்டி உள்ளது.

    அதேபோல இந்த பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றும் சினிமா விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த விவகாரம் குறித்து ஏதும் பேசாதிருப்பதும் மேற்கூறிய ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

    சினிமாவில் அரசியல் சண்டை, அரசியலில் சினிமா கூத்து என்பதற்கிணங்க இந்த பொங்கல் தமிழ் சினிமாவுக்கு பேரடியாக அமைந்துள்ளது.   

    • படம் 3 மணி நேரம் 4 நொடிகள் நீளம் கொண்ட இந்தியன் 2 படத்துக்கு சென்சார் வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
    • காட்சியில் வரும் ஊழல் சந்தை என்ற லேபிளை அகற்ற வேண்டும்.

    சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் வரும் 12 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்தியன் படத்தில் லஞ்சத்தை எதிர்த்து போராடிய சேனாபதி இந்தியன் 2 படத்தின் மூலம் மீண்டும் திரைகளை மிரட்ட வருகிறார்.

     

    3 மணி நேரம் 4 நொடிகள் நீளம் கொண்ட இந்தியன் 2 படத்துக்கு சென்சார் வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. குறிப்பாக படத்தில் 5 முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. புகைப்பிடித்தல் தொடர்பான எச்சரிக்கை வாசகங்களை கருப்பு நிறத்தில் மிகவும் பெரியதாக வெள்ளை நிற பின்னணியில் வைக்க வேண்டும், காட்சியில் வரும் ஊழல் சந்தை என்ற லேபிளை அகற்ற வேண்டும்.

     

    குறைந்த ஆடைகள் கொண்ட அல்லது ஆடையில்லாது நடிகர்கள் தோன்றும் காட்சியில் மாற்றம் செய்ய வேண்டும். 'டர்ட்டி இந்தியன்' [Dirty indian], 'F**k' உள்ளிட்ட வசனங்களை நீக்க வேண்டும். படத்தில் வரும் காப்புரிமை பெற்ற விஷயங்களுக்கு NOC - தடையின்மை சான்றிதழ் வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×