என் மலர்
நீங்கள் தேடியது "தயாரிப்பாளர்கள் சங்கம்"
- படப்பிடிப்பு, பட தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கு
- சங்கங்களின் ஒத்துழையாமை முடிவால் சினிமா தயாரிப்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
படப்பிடிப்பு, பட தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கால்
"ஃபெப்சி உள்ளிட்ட சங்கங்களின் ஒத்துழையாமை முடிவால் சினிமா தயாரிப்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இரு சங்கங்கள் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2025 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது.ஒப்பந்தம் நிறைவடைந்து விட்டதால் தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பணியாற்றுமாறு எங்களை கட்டாயப்படுத்த முடியாது என ஃபெப்சி தரப்பினர் விளக்கம் வழங்கியுள்ளனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஃபெப்சி இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தரை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
- இனி விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் ஆலோசிக்க வேண்டும்.
- தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது முறைகேடு.
தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது சங்கத்தின் பணத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த விவகாரத்தில் நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இனி விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என சங்கம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சங்கத்தில் இருந்து முறைகேடாக ரூ.12 கோடி செலவழித்த தொகையை திரும்ப அளிக்குமாறு பலமுறை கூறியும் விஷால் பதில் அளிக்கவில்லை.
இதனால், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் விஷால் நடிக்கும் புதியப் படங்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது.






