என் மலர்

  நீங்கள் தேடியது "Producer Council"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரி நியமித்த பாரதிராஜா உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவுக்கு தடை கேட்டு வி‌ஷால் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். #ProducerCouncil #Vishal
  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் நிர்வகித்து வந்தனர்.

  விஷால் தலைமையிலான நிர்வாகத்தின் மீது சங்க உறுப்பினர்கள் பல்வேறு குற்றசாட்டுகளை கூறி போர்க்கொடி தூக்கினார்கள். இதற்கிடையே விஷால் அணியின் பதவி காலம் கடந்த 30-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி என்.சேகர் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த நியமனத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.

  விஷால் அணி செயலாளரான எஸ்.கதிரேசன் தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்க நடவடிக்கைகளில் எந்த விதமான முறைகேடும் நடைபெறாத நிலையில், தனி அதிகாரியை நியமித்தது சட்ட விரோதமாகும். எனவே, இந்த நியமனத்தை ரத்து செய்யவேண்டும். நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

  இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோதே தமிழக அரசு இயக்குனர் பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர் உள்பட 9 பேர் அடங்கிய ஆலோசனைக் குழுவை 2 நாட்களுக்கு முன்னர் நியமித்தது. இதற்கும் விஷால் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

  வழக்கை விசாரித்த நீதிபதி தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரிக்கு உதவியாக நியமிக்கப்பட்ட தற்காலிக குழுவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். தமிழக அரசு தரப்பில் இருந்து தரப்பட்ட இந்த குழு ஆலோசனை வழங்க மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளது என்ற விளக்கத்தை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று இந்த வழக்கு அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிபதி தனது உத்தரவில், ‘ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது தற்காலிகமாகவே. இந்த குழு தனிப்பட்ட முறையில் செயல்படக்கூடாது. நிர்வாக பிரச்சினையில் தலையீடு இருக்கக்கூடாது’. என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். #ProducerCouncil #Vishal #ChennaiHighCourt

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனி அதிகாரிக்கு உதவ பட அதிபர்கள் சங்கத்துக்கு 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #ProducerCouncil
  தனி அதிகாரிக்கு உதவ பட அதிபர்கள் சங்கத்துக்கு 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

  இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தனி அதிகாரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பதிவுத்துறை தலைவரின் கடிதத்தில், ‘அரசாணையின்படி சங்கத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்தும் வகையில், விரைந்து செயல்பட ஏதுவாக தனி அதிகாரியின் நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில் தற்காலிக குழு ஒன்றை அமைத்து அதன் விவரத்தை தெரிவிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி 9 நபர்கள் கொண்ட தற்காலிக குழு அமைக்கப்படுகிறது. அந்த குழுவில் இடம்பெற்றோர் பெயர்கள் வருமாறு:-  பாரதிராஜா, டி.ஜி.தியாகராஜன், கே.ராஜன், டி.சிவா, சிவசக்தி பாண்டியன், எஸ்.வி.சேகர், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், எஸ்.எஸ்.துரைராஜ், ஆர்.ராதாகிருஷ்ணன்.

  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. #ProducerCouncil
   
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்கும் புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. #Piracy #PiracyBill
  புதுடெல்லி:

  இந்திய சினிமாவை பொறுத்த வரை பைரசி எனப்படும் திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடுவது வழக்கமாக நடந்து வரும் ஒன்று. இத்தகைய பைரசி இணையதளங்களை முடக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கோரி வரும் நிலையில், அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

  இருந்தாலும், இணையதளங்களில் புதுப் படங்கள் வெளியாவது மட்டும் நின்றபாடில்லை. தொடர்ந்து புதிய படங்கள் வெளியான முதல் நாளே இணையதளங்களிலும் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. பட அதிபர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

   

  இதை தடுக்க திரைப்பட சட்டம்-1952-ன் 7-வது பிரிவு, அபராதம் விதிக்க வகை செய்கிறது. இந்நிலையில், தண்டனையை கடுமையாக்குவதற்காக, இச்சட்டத்தில் புதிய உட்பிரிவை சேர்க்க மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், திரைப்பட சட்ட திருத்த வரைவு மசோதாவை உருவாக்கி உள்ளது.

  இதன்படி, எழுத்து மூலமான அனுமதியின்றி திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும். இந்த வரைவு மசோதா குறித்து 14-ந் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. #Piracy #PiracyBill

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையை தமிழ்நாடு பலூன் திருவிழாவில் வைத்து இளையராஜா, விஷால் தொடங்கி வைக்கிறார்கள். #Ilayaraja75 #Vishal #ProducerCouncil
  இசை அமைப்பாளர் இளையராஜாவை பெருமைப்படுத்தும் விதமாக இளையராஜா 75 என்ற இசை நிகழ்ச்சியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடத்த இருக்கிறது.

  இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பெருமையுடன் வழங்கும் ‘இளையராஜா-75 நிகழ்ச்சி வரும் பிப்ரவரி மாதம் 2, 3-ந் தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடக்க நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற இருக்கிறது.  வரும் 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு, செங்கல்பட்டு அருகே ‘மகேந்திரா வேர்ல்டு சிட்டி‘யில் நடைபெறும் 5-வது தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவில் இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது.

  இங்கு ‘இளையராஜா-75 என்ற பெயரில் பலூன்கள் பறக்கவிடப்படும். அதில் ஒரு ராட்சச பலூனில் இளையராஜா பயணம் செய்வார். மற்றொரு பலூனில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பயணம் செய்கிறார்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Ilayaraja75 #Vishal #ProducerCouncil

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஷாலுக்கு எதிராக போராடி, தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டிய தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #Vishal #ProducerCouncil
  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் உள்ளார். விஷாலுக்கும் தயாரிப்பாளர் சங்கத்தில் அவரது எதிர்தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

  விஷால் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டை முன்வைத்து ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்தீஷ், எஸ்.வி.சேகர், டி.சிவா உள்ளிட்ட உறுப்பினர்கள் டிசம்பர் 19-ந்தேதி தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்கு வந்து போராட்டம் நடத்தியதோடு சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர்.

  20-ந்தேதி காலையில் விஷால் தனது ஆதரவாளர்களுடன் வந்து பூட்டை உடைத்து அலுவலகத்துக்கு உள்ளே செல்ல முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாருக்கும் விஷாலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

  விஷால், மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள் சங்க அலுவலகத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷால் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அரசு கட்டுப்பாட்டில் தயாரிப்பாளர் சங்கத்தைக் கொண்டு வந்ததற்கு கண்டனம் தெரிவித்து சீலை அகற்ற உத்தரவிட்டது.

  தயாரிப்பாளர் சங்கத்துக்கு அரசு வைத்த சீல் அகற்றப்பட்ட பின்னர் கடந்த 24-ந்தேதி மாலை தயாரிப்பாளர் சங்கத் தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் நிருபர்களிடம் பேசிய விஷால் ‘தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பூட்டு போட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உள்ளோம்.  பூட்டு போடும் வீடியோவில் உள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புவதோடு, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்கள் இல்லாத யாராவது வீடியோவில் இருந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

  விஷால் கூறியதை போலவே பூட்டு போட்ட உறுப்பினர்களுக்கு சங்கம் சார்பில் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் ராதா கிருஷ்ணன், ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர், டி.சிவா, ஐங்கரன் விஜயகுமார், கே.ராஜன், தனஞ்ஜெயன், சுரேஷ் காமாட்சி, சவுந்தர பாண்டியன், பழனிவேல், ஜான் மேக்ஸ், வடிவேல், பஞ்சு பரத், திருமலை, பிஜி பாலாஜி, ஜோதி நளினி, சுப்பையா, சாலை சகாதேவன், சக்தி சிதம்பரம், பாபு கணேஷ், அடிதடி முருகன், குண்டு முருகன், ஆர்.எச்.அசோக், கணபதி, விடியல் ராஜு, சீனிவாசன், மீரா கதிரவன், கோயம்பேடு தமிழரசு, அஸ்ஸலாம் உள்ளிட்ட 29 தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

  ஷோகாஸ் நோட்டீஸ் என்பது ‘சங்கத்துக்கு விரோதமாக செயல்படுகிறீர்கள். தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?’ என்று எச்சரிக்கை விடுக்கும் நோட்டீஸ் ஆகும்.

  இந்த நோட்டீசுக்கு எதிர் தரப்பினர் தரும் பதிலை பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை அமையும் என தயாரிப்பாளர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  படங்களை ரிலீஸ் செய்வதில் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் நடப்பதாக விஷ்ணு விஷால் குற்றம்சாட்டியுள்ளார். #VishnuVishal #SilukkuvarpattiSingam #TFPC #Vishal
  படங்களின் வெளியீட்டை ஒழுங்குபடுத்த தயாரிப்பாளர் சங்கம் ஒரு கமிட்டி அமைத்து தேதிகளை ஒதுக்கி கொடுத்து வருகிறது. சில தயாரிப்பாளர்கள் இந்த கமிட்டியை மதிக்காதது தமிழ் சினிமாவில் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. 

  டிசம்பர் 21-ம் தேதி வெளியீடாக வரும் ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்க மறு’, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’, விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய படங்களை உறுதிப்படுத்தியது தயாரிப்பாளர் சங்கம். அதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்து தயாரித்துள்ள ‘மாரி 2’ மற்றும் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’ ஆகியவை இப்போட்டியில் இணைந்தன. 

  இதனால் மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள். தொடர்ச்சியாகக் குழப்பம் நீடித்ததால் டிசம்பர் 21-ம் தேதி யார் வேண்டுமானாலும் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து விலகிக் கொண்டது. டிசம்பர் 21-ம் தேதி வெளியீட்டு சர்ச்சையில் தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் உள்குத்து அரசியலே காரணம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார் விஷ்ணு விஷால். 

  இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: விதிமுறைகள்... விதிகள் இன்மை... விதிமுறைகளை சரியாக கடைப்பிடிப்பவர்களுக்கு இப்படித்தான் நீதி வழங்கப்படுமா? இது முதன்முறையல்ல. இரண்டாவது முறையாக இது எனக்கு நடக்கிறது. அப்புறம் எதற்கு விதிகள்? சிஸ்டம் தோற்றுவிட்டது. உள்குத்து அரசியல். இருக்கட்டும்... வெளிப்படையான அறிக்கை என்றால் என்னவென்று பிறருக்குத் தெரிவிக்கவே இதை சொல்கிறேன்.   டிசம்பர் 21-ல் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்‘ வெளியாகிறது. கடந்த ஒரு மாதத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் அனைத்துக் கூட்டங்களிலும் கலந்து கொண்ட வகையில் சொல்கிறேன். இத்தகைய நிலைமைக்கெல்லாம் நிச்சயமாக விஷால் காரணமல்ல. நான் ஏற்கனவே சொன்னதுபோல் எல்லாம் உள்குத்து அரசியல். விதிமுறைகள் எல்லாம் அதைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே’. இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். #VishnuVishal #SilukkuvarpattiSingam #TFPC #Vishal #ProducerCouncil

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெப்சி தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தால் சென்னையில் நேற்று சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. #FefsiStrike #ProducerCouncil
  சென்னை வடபழனியில் உள்ள பாலுமகேந்திரா ஸ்டுடியோவில் ஒரு விளம்பர படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் பெப்சியில் உள்ள அவுட்டோர் யூனியனை சேர்ந்தவர்கள் கேமராவை வாடகை காரில் ஏற்றி விட்டனர். இதற்கு பெப்சியில் அங்கம் வகிக்கும் படப்பிடிப்பு தளவாடங்களை ஏற்றிச்செல்லும் பெட்போர்டு யூனியனை சேர்ந்த டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  படப்பிடிப்பு சாதனங்களை எங்கள் யூனியன் வாகனங்களில்தான் ஏற்றிச்செல்ல வேண்டும் என்பது நடைமுறை. அதை மீறி வாடகை காரில் ஏற்றியது தவறு என்று கண்டித்தனர். அத்துடன் சென்னையில் நேற்று நடந்த சினிமா படப்பிடிப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

  இதனால் படப்பிடிப்பு சாதனங்களை ஏற்றிச்செல்ல வாகனம் இல்லாமல் படக்குழுவினர் தவித்தனர். வேறு வழியில்லாமல் சென்னையில் நடந்த அனைத்து சினிமா படப்பிடிப்புகளையும் ரத்து செய்துவிட்டனர். விஷால் நடித்த ‘அயோக்கியா’, லாரன்ஸ் நடிக்கும் ‘காஞ்சனா-3’, அதர்வா நடிக்கும் ‘குருதி ஆட்டம்’, விமல் நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’, விக்ரம் பிரபுமகிமா நடிக்கும் ‘அசரகுரு’ உள்பட 20 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக தயாரிப்பாளர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.  இந்த பிரச்சினை குறித்து ஆலோசிக்க தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்சி நிர்வாகிகள் அவசர கூட்டம் சென்னையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று இரவு நடந்தது. #FefsiStrike #ProducerCouncil

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுடன் இணைந்து இசை ராஜா 75 என்று இசை திருவிழா நடத்த இருக்கிறார்கள். #ILayaraja
  இசைஞானி என்று பலராலும் போற்றப்படும் இசை அமைப்பாளர் இளையராஜா. இவர் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார். இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்கு இவரது இசைக்கு பலரும் அடிமையாகி இருக்கிறார்கள்.

  இந்நிலையில், இளையராஜாவை வைத்து ‘இசைராஜா - 75’ என்ற இசை திருவிழா நடத்த தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. தயாரிப்பாளர்கள் நலனுக்காக நடத்தும் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சிக்காக இளையராஜாவுடன் தயாரிப்பாளர் சங்கம் இன்று ஒப்பந்தம் செய்துள்ளது.  இந்த பிரமாண்டமான இசை திருவிழா அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடக்க இருக்கிறது. #TFPC
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் விலகியுள்ளார். #ProducerCouncil #Vishal
  தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் விலகியுள்ளார். பதவியில் இருந்து விலகியதுடன் தலைவரான விஷால் மீதும் நிர்வாகம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் விஷாலுக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

  நான் இதுவரை தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராக ஒரு முறையும், துணைத் தலைவராக ஒரு முறையும், பல முறை செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளேன். இப்பொழுது இருக்கும் நிர்வாகத்தில் எதிர்க்கட்சி அணியிலிருந்து செயற்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வெகு சில உறுப்பினர்களில் நானும் ஒருவன்.

  இதுவரை என்னால் முடிந்த அளவிற்கு இந்த நிர்வாகத்திற்கு என்னுடைய ஒத்துழைப்பை அளிக்கத் தவறியதில்லை. இப்போது நான் தற்போதைய நிர்வாகத்தின் கீழ் செயற்குழு உறுப்பினராகத் தொடர விரும்பாததால் அப்பதவியை ராஜினாமா செய்ய முடி வெடுத்துள்ளேன்.

  முதலில் தி.நகர் அலுவலகம் தனியாக அமைக்கப்பட்டு அதற்கு தனியாக ஊழியர்களை நியமித்து பெரும் பண விரயம் செய்யப்படுவதில் எனக்கு உடன் பாடில்லை.

  சில மூத்த வயதான தயாரிப்பாளர்களுக்கான பென்சன் பணத்தை தராமல் நிறுத்தி அவர்களை கஷ்டப்படுத்துகிறார்கள்.

  சமீபத்தில் நடந்த வேலை நிறுத்தத்தின்போது சிலருக்கு மட்டும் சலுகைகள் வழங்கப்பட்டு அவர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படாததில் எனக்கு உடன்பாடில்லை.

  செயற்குழுவின் ஒப்புதல் இல்லாமலேயே இன்சூரன்ஸ் காப்பீட்டுத் தொகை 4 லட்சத்திலிருந்து 2 லட்சமாக குறைக்கப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை.

  வேலை நிறுத்தம் எந்தக் காரணத்திற்காக நடத்தப்பட்டதோ அவை நிறைவேறாமலேயே வேலை நிறுத்தம் தன்னிச்சையாக வாபஸ் பெறப்பட்டு 48 நாட்கள் தேவையில்லாமல் தயாரிப்பாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுத்தப்பட்டது.

  வேலை நிறுத்தத்தினால் கியூப் கட்டணம் குறைக்கப்பட்டதாக சொன்னாலும் முன்பு இருந்த கட்டண முறையை மாற்றி வாரம் ரூ.5000 முறையில் வசூலிக்கப்படுகிறது. 4 வாரங்கள் ஓடும் படங்களுக்கு மொத்த கட்டண அடிப்படையில் கணக்கிடும் பொழுது, இவை முன்பு இருந்த கட்டணத்தை விடவும் அதிகம்.

  நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்த மூத்தத் தயாரிப்பாளர்களை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்படுவதால் எனக்கு ஓட்டளித்த தயாரிப்பாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த நிர்வாகத்தின் அங்கமாக நான் தொடர விரும்பவில்லை. எனவே என் செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ.7 கோடி முறைகேடு செய்துள்ளதாக விஷால் மீது புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், ‘மடியில் கனம் இல்லை; யாருக்கும் பயப்படமாட்டேன்’ என்று நடிகர் விஷால் ஆவேசமாக கூறியுள்ளார். #Vishal #ProducerCouncil
  நடிகர் சங்கம் பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருக்கும் நடிகர் விஷால் அளித்த பேட்டி வருமாறு:-

  கேள்வி:- இணைய வழி குற்றங்களை அலசுகிறது உங்கள் படம். உங்களுக்கு அப்படி ஏதும் அனுபவம் நேர்ந்ததா?

  பதில்:- ஆமாம். ஒருமுறை வெளிநாட்டில் இருந்தபோது எனது வங்கிக்கணக்கில் இருந்து 80 ஆயிரம் ரூபாய் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது. என்னால் அதனை மீட்கவே முடியவில்லை.

  ஒரே ஒரு முறை தவறான ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் மொத்த பணத்தையே இழக்கும் சூழ்நிலை இன்று நிலவுகிறது. சமூக வலைதளங்களில் நாம் பகிரும் தனிப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் கூட நமக்கு பெரிய ஆபத்தை விளைவிப்பவைதான். முக்கியமாக சமூக வலைதளங்களில் பிரபலங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

  கே:- தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க பொதுச்செயலாளர், நடிகர், தயாரிப்பாளர் எப்படி முடிகிறது இத்தனை பொறுப்புகளை கவனித்துக் கொள்ள?

  ப:- நேர மேலாண்மை தான் காரணம். ஆறு மணி நேரம் மட்டும்தான் தூக்கத்துக்கு ஒதுக்குகிறேன். மீதி 18 மணி நேரத்தை ஒவ்வொரு வேலைக்கும் பிரித்துக் கொள்கிறேன். ஒரு வேலையில் இருக்கும்போது இன்னொரு வேலை பற்றி நினைக்கவே மாட்டேன். இத்தனையையும் நான் கவனிப்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. தயாரிப்பாளர் சங்க தலைவரான பிறகு என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்கவே முடியவில்லை. பரவாயில்லை. ஒரு நல்ல செயலுக்காக நமது சந்தோ‌ஷத்தை இழப்பதில் தவறு இல்லை.  கே:- சண்டக்கோழி 2 படம் எப்படி வந்திருக்கிறது?

  ப:- முந்தைய படத்தை விட பல மடங்கு நன்றாக வந்திருக்கிறது. இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. செப்டம்பர் 18 அன்று விநாயகர் சதுர்த்தியில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். சங்கத்திலும் அனுமதி கேட்க இருக்கிறோம்.

  கே:- உங்களது அடுத்த கட்ட நடவடிக்கை?

  ப:- ஒவ்வொரு ஆண்டும் படம் இயக்க திட்டமிடுகிறேன். ஆனால் முடியாமல் போகிறது. இந்த ஆண்டு நடிகர் சங்க கட்டிட வேலையை முதலில் முடிக்க வேண்டும். அதன் பின்னர்தான் அடுத்தகட்ட நடவடிக்கை.

  கே:- லைக்காவுடன் நீங்கள் இணைந்ததன் பின்னணி என்று ஒரு கட்டுரை வந்திருக்கிறதே...?

  ப:- இது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு. அந்த இணையதளம் இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டவேண்டும். நான் தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பதால் எனது படங்களை யாருமே தயாரிக்க கூடாதா? அல்லது எனது படங்களுக்கு நிதி உதவியே செய்யக்கூடாதா? கேரள காவல்துறையினர் தமிழ்ராக்கர்ஸ் அட்மினை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். பைரசி இணையதளங்களுக்கு படங்கள் செல்லும் வழிகளை அடைத்து வருகிறோம்.  கே:- வெளியீட்டில் உங்கள் படத்துக்கு முன்னுரிமை கொடுத்ததாக குற்றம் சாட்டப்படுகிறதே?

  ப:- சென்சார் செய்யப்பட்ட தேதியை வைத்து தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மற்ற தயாரிப்பாளர்களை கேட்டு பாருங்கள். என் படத்துக்கு எந்த முன்னுரிமையும் தரப்படவில்லை. யார் வேண்டுமானாலும் வந்து உறுதி செய்து கொள்ளலாம்.

  கே:- உங்கள் மீதான ரூ.7 கோடி முறைகேடு புகார் குறித்து பதில் என்ன?

  ப:- எனது தனிப்பட்ட கணக்கு வழக்குகளோ, சங்கம் தொடர்பானதோ எல்லாம் சரியாக முறையாக பராமரிக்கப்பட்டுவருகிறது. எனது மடியில் கனமில்லை. எனவே யாருக்காகவும் எந்த குற்றசாட்டுக்காகவும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

  இவ்வாறு அவர் கூறினார். #Vishal #ProducerCouncil
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நேற்று நடந்த தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் டி.ராஜேந்தர் கூறிய புகாருக்கு ஆதாரம் இருக்கிறதா என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார். #Vishal #TRajendar
  என் மீது எதிரணியினர் சுமத்தியுள்ள குற்றசாட்டுகளுக்கு தகுந்த ஆதாரம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் விஷால்.

  நேற்று பாரதிராஜா தலைமையில் டி.ராஜேந்தர், கே.ராஜன், ராதாகிருஷ்ணன், ஜே.கே.ரித்திஷ், விடியல் ராஜு, கலைப்புலி சேகரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலர் கூடி பேசினார்கள். 

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘தயாரிப்பாளர் சங்கத்தில் வைப்பு நிதியாக இருந்த 7 கோடி ரூபாய் என்ன ஆனது என்று கணக்கு காட்டவில்லை’ என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்துள்ள விஷால், தயாரிப்பாளர் சங்க பணத்தை யாரும் கையாடல் செய்யவில்லை. எல்லாக் கணக்குகளும் முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

  பைரசி இணையதளங்களை வேரோடு அழிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஆதாரம் இருந்தால் நிரூபிக்கலாம். வார்த்தைகளை விட செயல் மூலம் பேசுவதே சரியாக இருக்கும்’ இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print