என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » silukkuvarpatti singam
நீங்கள் தேடியது "Silukkuvarpatti Singam"
செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் - ரெஜினா கசாண்ட்ரா - ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தின் விமர்சனம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal
தனது பாட்டியுடன் வாழ்ந்து வரும் விஷ்ணு விஷாலுக்கு சிபாரிசில் கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது. சிலுக்குவார்பட்டி காவல் நிலையத்தில் சேர்கிறார். எந்த பிரச்சனைக்கும் போகாமல், எந்த வழக்கையும் பார்க்காமல் பயம்கொள்ளியாக இருக்கும் விஷ்ணு விஷால், சின்ன எடுபிடி வேலைகளை மட்டுமே செய்துவிட்டு சந்தோஷமாக காலத்தை ஓட்ட எண்ணுகிறார்.
இதற்கிடையே விஷ்ணு விஷாலும், அவரது மாமா பெண்ணான ரெஜினாவும் காதலிக்கிறார்கள். ஆனால் மாமா மாரிமுத்து, விஷ்ணுவின் கோழைத்தனத்தை சுட்டிக்காட்டி பெண் தர மறுக்கிறார்.
மறுபக்கம் சென்னையையே கலக்கிக் கொண்டிருந்த தாதாவான சாய் ரவியை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு போலீசார் அவரைத் தேடுகிறார்கள். தன்னை என்கவுண்டர் செய்ய வந்த போலீசை கொன்றுவிட்டு தலைமறைவாகும் சாய் ரவி, விஷ்ணு விஷாலிடம் சிக்கிக் கொள்கிறார்.
எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு, சாய் ரவி பெரிய ரவுடி என்பது தெரியாமல் ஓட்டலில் நடக்கும் ஒரு பிரச்சனையால், சாய் ரவியை அடித்து சிறையில் அடைத்துவிடுகிறார். இதையடுத்து சாய் ரவியின் ஆட்களான அவரை சிறையை உடைத்து வெளியே அழைத்துச் செல்கின்றனர். தன்னை கைது செய்து சிறையில் அடைத்த விஷ்ணுவை கொல்லாமல், இந்த ஊரை விட்டு போகமாட்டேன் என்று சாய் ரவி சபதமிடுகிறார். சாய்யிடம் இருந்து தப்பிக்க, வித்தியாசமான கெட்அப்புகளை போட்டுக் கொண்டு ஊரை சுற்றிவருகிறார் விஷ்ணு விஷால்.
கடைசியில், சாய் ரவியிடம் இருந்து விஷ்ணு எப்படி தப்பித்தார்? ரெஜினாவாவை கரம்பிடித்தாரா? எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு விஷால் சாய் ரவியை அடித்தது ஏன்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே நகைச்சுவையான மீதிக்கதை.
ராட்சசன் படத்தில் ஒருவித பயம், தயக்கம் என பரபரப்பாக இயங்கிய விஷ்ணு விஷால் இந்த படத்தில் முற்றிலுமாக மாறி காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கிறார். சாய்ரவிக்கு பயந்து அவர் போடும் கெட்டப்கள் வயிற்றை பதம் பார்க்கின்றன. படத்தின் கலர்புல்லுக்கு ரெஜினா உத்தரவாதம் தருகிறார். காதலன் என்ன சொன்னாலும், அப்படியே நம்பிவிடும் ரெஜினா போன்ற பெண் கிடைத்தால் இந்த காலத்து இளைஞர்களுக்கு பிரச்சினையே இருக்காது. அழகாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.
சாய்ரவி வில்லனாக இருந்தாலும் தன்னை வைத்து சுற்றி இருப்பவர்கள் செய்யும் காமெடிகளை விட்டுக்கொடுத்து படத்துக்கு துணை நின்று இருக்கிறார். ஓவியா சில காட்சிகளே வந்தாலும் சிறப்பு. கருணாகரனுக்கு படம் முழுக்க வந்து சிரிக்க வைக்கும் வேடம். நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார்.
டோனியாக வரும் யோகி பாபுயும் நம்மை சிரிக்க வைக்கிறார். லொள்ளு சபா மனோகரின் ஐபோன் விளையாட்டு, ஆனந்த்ராஜின் ஷேர் ஆட்டோ காமெடி, மன்சூர் அலிகானின் மூட்டை, சினேகா பிரதர்சின் பாத்ரூம் காமெடி, சிங்கமுத்துவின் லாக்கெப் காமெடி என்று படம் முழுக்க சிரிக்கும்படியாக இருக்கிறது.
லிவிங்ஸ்டன், வடிவுக்கரசி வழக்கமான நடிப்பின் மூலம் கவர்கின்றனர். கிளைமாக்சுக்கு பின்னும் கூட ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகானின் பழைய படங்களை பயன்படுத்தியது சிறப்பு.
இயக்குனர் செல்லா அய்யாவுக்கு படத்தை சீரியசாக்க பல வாய்ப்புகள் இருந்தும் பாதை மாறாமல் சிரிக்க வைக்கும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில் மட்டும் தேவையில்லாத காட்சிகள் இடம்பெறுகின்றன. அதுவும் அடுத்த காட்சிக்கான இடைவேளையாக இருப்பதால் ஏற்றுக் கொள்ளமுடிகிறது.
லியோன் ஜேம்சின் இசையில் டியோ ரியோ பாடல் சிறப்பாக உள்ளது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஜே.லெக்ஷ்மணின் ஒளிப்பதிவு படத்தை கமர்ஷியலாக காட்டியிருக்கிறது.
மொத்தத்தில் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' சிரிப்புக்கு உத்தரவாதம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal #ReginaCassandra
Silukkuvarpatti Singam Review Silukkuvarpatti Singam Chella Ayyavu Vishnu Vishal Regina Cassandra Oviyaa Anandaraj Marimuthu KarunaKaran Livingston Mansoor Ali Khan Singamuthu Vadivukkarasi Yogi Babu சிலுக்குவார்பட்டி சிங்கம் சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம் விஷ்ணு விஷால் ரெஜினிகா கசாண்ட்ரா ஓவியா செல்லா அய்யாவு ஆனந்த்ராஜ் மாரிமுத்து கருணாகரன் லிவிங்ஸ்டன் மன்சூர் அலி கான் சிங்கமுத்து வடிவுக்கரசி யோகி பாபு
ராட்சசன் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் வருகிற வாரத்தில் வெளியாக இருக்கிறது. #SilukkuvarpattiSingam #VishnuVishal
விஷ்ணு விஷால் ராட்சசன் படம் வெற்றி பெற்ற உற்சாகத்தில் அடுத்து சிலுக்குவார்பட்டி சிங்கமாக களம் இறங்குகிறார். அவர் அளித்த பேட்டி:
திரும்ப காமெடி பக்கமே வந்து விட்டீர்களா?
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படப்பிடிப்பின் போதே, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ கதையை இயக்குனர் செல்லா அய்யாவு சொன்னார். ஜாலியா இருக்கே. நம்ம பேனர்லயே தயாரிக்கலாம் என்று திட்டமிட்டு தொடங்கிய படம். ‘ராட்சசன்’ சீரியஸ் போலீஸ், இது காமெடி போலீஸ். ரெஜினா, ஓவியா, யோகிபாபுன்னு ஒரு பெரிய பட்டாளமே வர்றாங்க. இது என் சொந்த படம். சீரியஸ் போலீஸையும், காமெடி போலீசையும் அடுத்தடுத்து விடவேண்டாம் என்று தான் காத்திருந்தேன்.
காமெடி படங்களையே தொடர்ந்து தயாரிப்பது ஏன்?
ஜாலியான படங்களை தயாரிப்பது எளிது. சீரியசான படங்களை தயாரித்தால் நமக்கு பிரஷர் அதிகமாகி விடும். இனி என் தயாரிப்பில் எல்லா விதமான படங்களும் வரும். ராட்சசன், நீர்ப்பறவை போன்ற சீரியஸ் படங்கள் எனக்கு எளிது. காமெடி படங்கள் தான் கஷ்டம். காமெடியை தாண்டி இந்த படத்தில் சின்ன கதையும் இருக்கும்.
ஓவியா கவுரவ வேடத்தில் நடித்தது எப்படி?
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே அவர் நடித்த படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் அவர் பிக்பாசில் கலந்துகொள்ள போவதாக கூறினார். இதில் கனகா என்னும் வேடத்தில் வருகிறார். கதையை நகர்த்தும் முக்கிய வேடம்.
காடன் எந்த மாதிரியான படம்?
பிரபு சாலமன் படம். தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழிகளில் வளரும் படம். முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டோம். இதில் யானைப் பாகனாக நடிக்கிறேன். மூணாறு உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துறோம். உடனே ‘கும்கி 2’ என்ற முடிவுக்கு வரவேண்டாம். அதில் இருந்து முற்றிலும் வித்தியாசமா இருக்கும். இதில் ராணா 50 வயது நபரா நடிக்கிறார்.
ஒரு தயாரிப்பாளராக கதாநாயகன் தோல்வியில் இருந்து மீண்டு விட்டீர்களா?
அதுக்கு பின்னாடி பெரிய கதை இருக்கு. முதலில் ‘வீர தீர சூரன்’ என்று ஒரு படம் ஒப்பந்தமாகி நடிக்க ஆரம்பிச்சேன். சில பிரச்சினைகளால் நடுவிலயே அது நின்றுவிட்டது. அந்த படத்தின் கதையை மாற்றி எடுக்கப்பட்ட படம்தான் ‘கதாநாயகன்’. படம் சரியாக போகவில்லை. ஆனால் எனக்கு நடிப்பு, அனுபவம்னு சில விஷயங்களை அந்த படம் கற்றுத் தந்தது.
ராட்சசன் வெற்றி பொறுப்பை அதிகமாக்கி விட்டதா?
ஆமாம். ‘ராட்சசன்’ படத்துக்கு பிறகு நிறைய கதை கேட்டிருக்கிறேன். இன்னும் எதையும் ஓ.கே. பண்ணல. என்னுடைய பலம் என்ன என்று இப்போதுதான் புரிந்து இருக்கிறது. வித்தியாசமான படங்கள் தான் என் கேரியரில் என்னை தூக்கி விட்டிருக்கின்றன. எனவே இனி 4 படங்கள் சீரியஸ் படங்கள் என்றால் ஒரு படமாவது காமெடி படம் என்று திட்டமிட்டு இருக்கிறேன். இப்போ கிடைத்திருக்கிற இந்த இடத்துக்கு வர 6 வருஷங்களுக்கு மேல போராடியிருக்கேன். அதே வேகத்தில் அப்படியே ஏறுமுகமா இருக்கணும். #SilukkuvarpattiSingam #VishnuVishal
விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் ரிலீஸ் பிரச்சனையில் நான் நியாயத்துக்காக போராடுகிறேன் என்று அவர் கூறியிருக்கிறார். #VishnuVishal #SilukkuvarpattiSingam
விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வரும் 21 -ம் தேதி வெளியாக இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தின் பட வெளியீட்டு கமிட்டியை மதிக்காமல் இன்னும் சில பெரிய படங்கள் வருவதால் விஷ்ணு விஷால் பாதிக்கப்பட்டார்.
இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு சர்ச்சையானது. என்ன பிரச்சினை என்று கேட்டோம். ‘திடீர் என்று கடைசி நேரத்தில் சங்கம் பின்வாங்கி விட்டது. இது எனக்கு 2வது முறை. ராட்சசன் பட வெளியீட்டின் போதே இதுபோல் நடந்தது. ஒழுங்கு கமிட்டியை சிலர் மதிப்பதில்லை. இதனால் மதித்து நடப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
பழைய முறையே பரவாயில்லை என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். இந்த முறை எங்களுக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. பலவீனமானவன் வெளியே போய்விடுவான் என்று நினைக்கிறார்கள். அது தவறு. சங்கம் என்பதே சின்ன, நடுத்தர பட்ஜெட் படங்களை காப்பாற்றத் தான் உருவாக்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. நான் எனக்காக மட்டும் பேசவில்லை. பாதிக்கப்படும் சின்ன படங்களுக்காகவும் தான் பேசுகிறேன். நான் நியாயத்துக்காக தான் போராடுகிறேன்’ என்றார்.
ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடித்திருக்கும் விஷ்ணு விஷாலுக்கு, நடிகர் உதயநிதி ஸ்டாலின் கைகொடுத்திருக்கிறார். #SilukkuvarpattiSingam
ராட்சசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’. இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ரெஜினா, ஓவியா நடித்துள்ளார்கள். மேலும் யோகி பாபு, ஆனந்த் ராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 21ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் பெற்றிருக்கிறார்.
@RedGiant_Movies next release#SilukkuvarpattiSingam#SpSfromDec21@vishnuuvishal@ReginaCassandra@ChellaAyyavu@leon_james@iYogiBabu@actorkaruna@AntonyLRuben@VVStudioz@thanga18@onlynikilpic.twitter.com/VZuttrjkv5
— Udhay (@Udhaystalin) December 10, 2018
அன்றைய தினத்தில் ‘அடங்க மறு’, ‘சீதக்காதி’, ‘மாரி 2’, ‘கனா’ உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #SilukkuvarpattiSingam
படங்களை ரிலீஸ் செய்வதில் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் நடப்பதாக விஷ்ணு விஷால் குற்றம்சாட்டியுள்ளார். #VishnuVishal #SilukkuvarpattiSingam #TFPC #Vishal
படங்களின் வெளியீட்டை ஒழுங்குபடுத்த தயாரிப்பாளர் சங்கம் ஒரு கமிட்டி அமைத்து தேதிகளை ஒதுக்கி கொடுத்து வருகிறது. சில தயாரிப்பாளர்கள் இந்த கமிட்டியை மதிக்காதது தமிழ் சினிமாவில் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.
டிசம்பர் 21-ம் தேதி வெளியீடாக வரும் ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்க மறு’, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’, விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய படங்களை உறுதிப்படுத்தியது தயாரிப்பாளர் சங்கம். அதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்து தயாரித்துள்ள ‘மாரி 2’ மற்றும் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’ ஆகியவை இப்போட்டியில் இணைந்தன.
இதனால் மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள். தொடர்ச்சியாகக் குழப்பம் நீடித்ததால் டிசம்பர் 21-ம் தேதி யார் வேண்டுமானாலும் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து விலகிக் கொண்டது. டிசம்பர் 21-ம் தேதி வெளியீட்டு சர்ச்சையில் தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் உள்குத்து அரசியலே காரணம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார் விஷ்ணு விஷால்.
Aftr attending all d TFPC meetings in d last 1 month im pretty sure @VishalKOfficial isn responsible for this situation...like is said #politicswithin :) RULES R ONLY FOR PEOPLE WHO FOLLOW :) https://t.co/tdDH7mGvWm
— VISHNUU VISHAL - VV (@vishnuuvishal) December 7, 2018
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: விதிமுறைகள்... விதிகள் இன்மை... விதிமுறைகளை சரியாக கடைப்பிடிப்பவர்களுக்கு இப்படித்தான் நீதி வழங்கப்படுமா? இது முதன்முறையல்ல. இரண்டாவது முறையாக இது எனக்கு நடக்கிறது. அப்புறம் எதற்கு விதிகள்? சிஸ்டம் தோற்றுவிட்டது. உள்குத்து அரசியல். இருக்கட்டும்... வெளிப்படையான அறிக்கை என்றால் என்னவென்று பிறருக்குத் தெரிவிக்கவே இதை சொல்கிறேன்.
டிசம்பர் 21-ல் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்‘ வெளியாகிறது. கடந்த ஒரு மாதத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் அனைத்துக் கூட்டங்களிலும் கலந்து கொண்ட வகையில் சொல்கிறேன். இத்தகைய நிலைமைக்கெல்லாம் நிச்சயமாக விஷால் காரணமல்ல. நான் ஏற்கனவே சொன்னதுபோல் எல்லாம் உள்குத்து அரசியல். விதிமுறைகள் எல்லாம் அதைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே’. இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். #VishnuVishal #SilukkuvarpattiSingam #TFPC #Vishal #ProducerCouncil
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X