என் மலர்
நீங்கள் தேடியது "Karunakaran"
திரை ஜோடியான ஆர்யா - சாயிஷா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு நிஜத்தில் ஜோடியான பின்னர், சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
`கஜினிகாந்த்', `காப்பான்' படங்களில் இணைந்து நடித்த ஆர்யா - சாயிஷாவுக்கு காதல் மலர்ந்தது. இருவீட்டாரது சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். நிஜத்தில் ஜோடியான இவர்கள் தற்போது, மீண்டும் திரையில் இணைந்து நடிக்கின்றனர்.
`டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கவிருக்கும் `டெடி' என்ற படத்தில் ஆர்யா நாயகனாக நடிப்பதாக அறிவித்த நிலையில், தற்போது அவருக்கு ஜோடியாக அவரது மனைவி சாயிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார். சதீஷ், கருணாகரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்ய, சக்தி சரவணன் சண்டைக்காட்சிகளையும், சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.
Star couple @arya_offl- @sayyeshaa starring in #TeddyTheFilm🐻! Project starts with a pooja today! #TeddyKickStarts🐻
— Studio Green (@StudioGreen2) May 23, 2019
Directed by @ShaktiRajan &
Produced by @StudioGreen2@kegvraja
A @immancomposer musical@proyuvraaj@UVCommunicationpic.twitter.com/TGJ20iadaT
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `மான்ஸ்டர்' படத்தின் விமர்சனம்.
இந்த உலகத்தில் வாழும் எந்த உயிரையுமே கொல்லக்கூடாது என்ற எண்ணத்துடன் வளர்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இவரும், கருணாகரனும் சென்னையில் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது வீட்டில் பெண் பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனது சொந்த ஊரில் இருக்கும் பிரியா பவானி சங்கரை பெண் பார்க்க செல்கின்றனர். ஆனால் ஏதோ காரணத்தால் பெண்ணை பார்க்க முடியவில்லை. ஒருகட்டத்தில் சொந்த வீடு இருந்தால் தான் பெண் தருவார்களோ என்று நினைத்து வீடு ஒன்றை வாங்க முடிவு செய்கிறார். இப்படி இருக்க பிரியா பவானி சங்கரிடம் இருந்து போன் வர சொந்தமாக வீடு ஒன்றையும் வாங்கிவிடுகிறார்.

பின்னர் அந்த வீட்டில் தங்கும் அவருக்கு எலி ஒன்று பெரும் தொல்லை கொடுக்கிறது. வீட்டில் எது வாங்கி வைத்தாலும் அதனை கடித்து துண்டு துண்டாக்கி தொல்லை கொடுக்கிறது. தினமும் இந்த நிலையே தொடர அதனை கொல்ல விருப்பமில்லாமல், அதை எங்கேயாவது கொண்டு சென்று விட்டுவிட எண்ணுகிறார்.
இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யாவுக்கும், பிரியா பவானி சங்கருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த நிலையில், பிரியா ஆசைப்பட்டு கேட்கும் ஷோபா ஒன்றை அதிக விலை கொடுத்து வாங்குகிறார். அந்த ஷோபாவையும் எலி கடித்து நாசம் செய்ய, கடுப்பாகும் எஸ்.ஜே.சூர்யா அதை கொன்று விட முடிவு செய்கிறார்.

கடைசியில், எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற எண்ணத்துடன் வளர்ந்த எஸ்.ஜே.சூர்யா அந்த எலியை கொன்றாரா? பிரியா பவானி சங்கரை கரம் பிடித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே மான்ஸ்ட்ரான எலியின் மீதிக்கதை.
எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் தனது வழக்கமான நடிப்பு இல்லாமல் ஒரு சாதாரண இளைஞராக சிறப்பாக நடித்திருக்கிறார். எலியால் படும் தொல்லைகள், எலிலை கொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகளில் அவரது நடிப்பு அபாரம். பிரியா பவானி சங்கர் படம் முழுக்க அழகான குடும்ப பெண்ணாக வந்து கவர்கிறார். கருணாகரன் காமெடி கதாபாத்திரமாக இல்லாமல், குணச்சித்திர வேடத்தில் வருகிறது. பெரிதாக காமெடி செய்யவில்லை.

ஒரு நாள் கூத்து படத்தில் யதார்த்தமான வாழ்க்கை முறையை படமாக்கிய நெல்சன் வெங்கடேசன், இந்த படத்தில் எலியால் ஏற்படும் தொல்லைகளை மையப்படுத்தி கதையை உருவாக்கியிருக்கிறார். படத்தின் திரைக்கதை ஒட்டாமல் இருப்பது போல தோன்றுகிறது. பெரும்பாலான இடங்களில் எலியை கிராபிக்ஸ் மூலம் காட்டி இருக்கிறார்கள். எலியே பாதி படத்தை ஆக்கிரமித்திருக்கிறது. இந்த உலகில் வாழும் எந்த உயிர்களையும் கொல்லக் கூடாது என்ற கருத்தை இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. கோகுல் பினேயின் ஒளிப்பதிவில் காட்சிகளும் அபாரம்.
மொத்தத்தில் `மான்ஸ்டர்' சுவாரஸ்யம் குறைவு.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் `மான்ஸ்டர்' படத்தின் முன்னோட்டம்.
பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் எல்.எல்.பி. சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் ஆர்.தங்க பிரபாகரன் இணைந்து தயாரித்துள்ள படம் `மான்ஸ்டர்'.
எஸ்.ஜே.சூர்யா நாயகனாகவும், பிரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடித்துள்ளனர். கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு - கோகுல் பினோய், இசை - ஐஸ்டின் பிரபாகரன், படத்தொகுப்பு - வி.ஜே.சாபு ஜோசப், கலை இயக்கம் - சிவ சங்கர், இணை எழுத்து - சங்கர் தாஸ், சண்டைப்பயிற்சி - சுதேஷ், நடனம் - சந்தோஷ், பாடல்கள் - யுகபாரதி, கார்த்திக் நேத்தா, சங்கர் தாஸ், தயாரிப்பு மேற்பார்வை - டி.நிர்மல் கண்ணன், தயாரிப்பு நிர்வாகம் - டி.பி.சசிகுமார், ஒலி வடிவமைப்பு - சின்க் சினிமாஸ், ஒலிக்கலவை - கண்ணன் கண்பத், ஆடை வடிவமைப்பு - பி.செல்வம், ஒப்பனை - ஏ.ஜி.மொய்தின், எழுத்து, இயக்கம் - நெல்சன் வெங்கடேசன்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது,
குழந்தைகளுக்கும், செல்ல பிராணிகளுக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய உறவு இருக்கும். இப்படத்தில் எலியை வைத்து எடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். பிரியா பவானி ஷங்கர் அழகான, திறமையான மற்றும் தனித்துவமான நடிகை. நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்.
சில காட்சிகள் எலிக்குத் தகுந்தாற்போல் முகபாவனை வரவில்லை என்று மீண்டும் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குநர் ஒவ்வொரு காட்சி கண் இப்படி இருக்க வேண்டும், கன்னம் இப்படி இருக்க வேண்டும் என்று நுட்பமாக நடிக்க வைத்தார். அதிலும் காதும் நடிக்க வேண்டும் என்று கூறுவார். வாழ்க்கையில் மற்றவர்களுக்கு கதாநாயகனாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால், எனக்குள் நான் கதாநாயகனாகத்தான் இருக்கிறேன். இப்படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை’ என்றார்.
`மான்ஸ்டர்' வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
மான்ஸ்டர் டீசர்:
பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கருணாகரன் - யோகிபாபு இருவரும், பன்னிகுட்டியை பிடிக்க ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். #PanniKutty
பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் கருணாகரன், யோகிபாபு இருவரும் புதிய படத்தின் மூலம் ஒன்றிணைந்திருக்கிறார்கள். ‘பன்னிகுட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அனுசரண் முருகையா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கருணாகரன், யோகிபாபுவுடன் சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, டிபி.கஜேந்திரன், லட்சுமி ப்ரியா, ராமர், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
Here’s the first look of #PanniKutty directed by Anucharan (kirumi fame) *ing Karunakaran and @yogibabu_offl , a BIG thanks to @LycaProductions for believing in us and giving us the opportunity to make this film. pic.twitter.com/gGbq36Jhs0
— Supertalkies (@supertalkies) February 28, 2019
ஆண்டவன் கட்டளை, 49-0, கிருமி ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே என்கிற கிருஷ்ணகுமார்
இப்படத்திற்கு இசையமைக்கிறார். #PanniKutty #YogiBabu
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகும் அறிவியல் சார்ந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்கியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். #SK14 #Sivakarthikeyan #Ravikumar
`மிஸ்டர்.லோக்கல்' படத்தில் பிசியாக நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது எஸ்.கே.14 படக்குழுவில் மீண்டும் இணைந்திருக்கிறார்.
ரவிக்குமார் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று துவங்கியது. படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் ரவிக்குமார், ரகுலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் இதில் விவசாயியாக நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார்கள். அறிவியல் சார்ந்த படமாக உருவாகும் இதில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக உள்ளன. இதற்காக 100-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, இரவு பகலாக பணிபுரிந்து வருகிறார்கள்.
Back to the sets of #SK14 👍😊@Ravikumar_Dir@Rakulpreet@24AMSTUDIOSpic.twitter.com/w6YEN2thXH
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 18, 2019
ஹாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட `அலெக்சா எல்.எப்.' என்ற கேமரா, இந்த படத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அதி நவீன கேமரா பயன்படுத்தப்படும் முதல் தமிழ் படம், இதுதான். படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், அரக்குவேலி ஆகிய இடங்களில் நடக்கிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். #SK14 #Sivakarthikeyan #Ravikumar #RakulPreetSingh
கந்துவட்டி கும்பலுக்கும் எனக்கும் தொடர்புள்ளது என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்று நடிகர் கருணாகரன் விளக்கம் அளித்துள்ளார். #Karunakaran
கடந்த பிப்ரவரி 7-ம் தேதி 'பொதுநலன் கருதி' என்ற திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தை சீயோன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நடிகர் சந்தோஷ், அருண் ஆதித், கருணாகரன், அனுசித்தாரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்திற்கு கருணாகரன் தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, இயக்குனர் சீயோன், படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கருணாகரன் மீது புகார் அளித்துள்ளனர்.
அதில், கருணாகரனுக்கு படத்தில் நடிக்க 25 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்தபோது கருணாகரன் வரவில்லை. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சீயோன், ஏற்கனவே கந்துவட்டிக்காரர்களால் படத்தை வெளியிடும் பிரச்சினைகளை சந்தித்தோம். இப்போது கந்து வட்டிக்காரர்கள் மிரட்டும் தொனியிலேயே கருணாகரன் மிரட்டுகிறார் என்றார்.
இது குறித்து நடிகர் கருணாகரன் தற்போது விளக்கம் அளித்துள்ளார் அதில்,
'பொது நலன் கருதி' திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் இணை தயாரிப்பாளரின் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. 'பொது நலன் கருதி' திரைப்படத்தில் உயிரைப் பணயம் வைத்து சில காட்சிகளில் நடித்துள்ளேன். கந்து வட்டி கும்பலுக்கும் எனக்கும் தொடர்புள்ளது என்று கூறப்படுவதில் உண்மையில்லை, நான் அப்படி வளரவும் இல்லை. நான் வேண்டுமென்றே படத்தின் ஆடியோ வெளியீட்டிற்கு வரவில்லை என்கிறார்கள், அதிலும் உண்மையில்லை.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
சீயோன் இயக்கத்தில் கருணாகரன் - சந்தோஷ் பிரதாப் - அருண் ஆதித் - அனுசித்தாரா, சுபிக்ஷா, லிசா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பொது நலன் கருதி' படத்தின் விமர்சனம். #PodhuNalanKaruthi #PodhuNalanKaruthiReview #Karunakaran
டாக்சி டிரைவராக இருக்கும் கருணாகரனின் அண்ணன் காணாமல் போகிறார். அவரைத் தேடிக்கொண்டே டாக்சி ஓட்டி வருகிறார் கருணாகரன். கந்துவட்டி கொடுக்கும் யோக் ஜேபி கும்பலிடம் அடியாளாக வேலை பார்ப்பவர் சந்தோஷ். மெக்கானிக்காக இருக்கும் அருண் ஆதித் தனது காதலி சுபிக்ஷாவுக்காக பைனான்ஸ் மூலம் வண்டி வாங்கி கொடுக்கிறார்.
இந்த 3 பேரின் வாழ்க்கையும் கந்துவட்டியால் இணைகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது? அவர்களின் வாழ்க்கைப் பாதை எப்படி மாறுகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

அண்ணனை தேடுவது, காதலியிடம் கெஞ்சுவது, கந்துவட்டி கும்பலின் பின்னணி தெரிந்ததும் தப்பி ஓடுவது என்று கருணாகரன் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மிரட்டி வசூல் செய்யும் அடியாள் வேடத்தில் சந்தோஷ். ஒரு கட்டத்தில் நிதர்சனம் புரிந்து அவர் சாந்தமாவது, இறுதிக்காட்சியில் வஞ்சத்தால் வீழ்த்தப்படுதல் என அவருக்கும் இது முக்கியமான படம். யோக் ஜேபி வில்லனாக மிரட்டி இருக்கிறார். அருண் ஆதித் சாதாரண இளைஞனாகவும், காதல் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இமான் அண்ணாச்சி ஒரு சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.
அனுசித்தாரா, சுபிக்ஷா, லிசா என 3 கதாநாயகிகள். மூவரில் சுபிக்ஷா கவனிக்க வைக்கிறார். அவரது கதாபாத்திரம் படத்தில் திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

கந்துவட்டி என்று சாதாரணமாக சொல்லிவிடக்கூடிய விஷயத்தின் பின்னணியில் இருக்கும் தாதா கும்பல், போலீஸ் பின்னணி, அரசியல் ஆதரவு அனைத்தையும் திரில்லர் கதையாக கூறி இருக்கிறார் அறிமுக இயக்குனர் சீயோன். அன்றாடம் நடக்கும் பகீர் சம்பவங்களை கதையில் கோர்த்த விதத்தில் நம்பிக்கை இயக்குனராக தெரிகிறார்.
5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையையும் கந்து வட்டி கொடுமைகளையும் கந்துவட்டி கும்பல்களால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை பற்றியும் பேசியதற்காக இயக்குனருக்கு பாராட்டுகள். எனினும் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். கந்துவட்டி பற்றி அனைவரும் ரசிக்க விதத்தில் திகில் படமாக கொடுத்த விதத்தில் பொது நலன் கருதி தலைப்புக்கு நியாயம் செய்து இருக்கிறது.
ஹரி கணேஷ் இசை, சுவாமிநாதன் ஒளிப்பதிவு இரண்டும் கச்சிதம். கிரைசின் படத்தொகுப்பில் சில காட்சிகளை கத்தரித்து இருக்கலாம்.
மொத்தத்தில் `பொது நலன் கருதி' பார்க்க வேண்டும். #PodhuNalanKaruthi #PodhuNalanKaruthiReview #Karunakaran #SanthoshPrathap #ArunAdith #AnuSithara #Subhiksha #Leesa #Zion
சீயோன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் - கருணாகரன் - அனு சித்தாரா, சுபிக்ஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `பொது நலன் கருதி' படத்தின் முன்னோட்டம். #PodhuNalanKaruthi #Karunakaran
ஏ.வி.ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.ஆர்.அன்புவேல்ராஜன் தயாரித்துள்ள படம் `பொது நலன் கருதி'.
கருணாகரன், சந்தோஷ் பிரதாப், அனு சித்தாரா, சுபிக்ஷா, லீசா, அருண்ஆதித், யோக்ஜாப்பி, இமான் அண்ணாச்சி, முத்துராம், சுப்பிரமணியபுரம் ராஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இசை - ஹரிகணேஷ், படத்தொகுப்பு - கிரேசன், கலை இயக்குநர் - கோபிஆனந்த், சண்டைப்பயிற்சி - ஓம்பிரகாஷ், தயாரிப்பு - ஏ.வி.ஆர். புரொடக்ஷன்ஸ், தயாரிப்பாளர் - வி.ஆர்.அன்புவேல்ராஜன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சீயோன்.

படம் பற்றி இயக்குநர் கூறும்போது,
தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படமாக ‘பொது நலன் கருதி’ உருவாகி இருக்கிறது. 5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையை அலசியிருப்பதாக கூறினார்.
படம் வருகிற பிப்ரவரி 8-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. #PodhuNalanKaruthi #Karunakaran #SanthoshPrathap
பொது நலன் கருதி டிரைலர்:
பொது நலன் கருதி டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் வசந்த பாலன், தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிக்கும் வரை தமிழ் சினிமாவை இழுத்து மூடும்படி ஆவேசமாக பேசினார். #PodhuNalanKaruthi #VasanthaBalan
தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படமாக ‘பொது நலன் கருதி’ உருவாகி இருக்கிறது.
5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையை அலசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சீயோன். பிப்ரவரி 7-ம் தேதி படம் வெளியாக உள்ள நுலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் இயக்குனர் மிஸ்கின், வசந்தபாலன், மீரா கதிரவன், திருமுருகன் காந்தி, கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குனர் வசந்த பாலன் பேசும் போது
சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும், தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. தற்போது வெளியாகியுள்ள பேரன்பு, சர்வம் தாளமயம் ஆகிய படங்கள் நன்றாக இருக்கிறது. காலையில் திரையரங்குக்கு சென்று பார்க்கலாம் என்றால் தியேட்டர்கள் இல்லை. இந்த இரண்டு படங்களும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் என்ன தான் செய்கிறது? இதையெல்லாம் ஒழிக்கிறோம் என கூறி தானே பதிவிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது என்ன செய்கிறார்கள்? சிறிய பட்ஜெட் படங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் பிரச்னையில்லாமல் வெளியாகிறது. திரையுலகமே மோசமான நிலைமையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிங்க இல்லனா தமிழ் திரையுலகத்தை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான் என உருக்கமாகவும் ஆவேசமாகவும் பேசினார். #PodhuNalanKaruthi #VasanthaBalan
வசந்த பாலன் பேசிய வீடியோவை பார்க்க:
ராஜேஷ் படத்தை தொடர்ந்து ரவிக்குமார் இயக்கும் அறிவியல் சார்ந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் விவசாயியாக நடிப்பதாக இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்தார். #SK14 #Sivakarthikeyan #Ravikumar
சிவகார்த்திகேயன் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்திலும், ரவிக்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதில் ராஜேஷ் இயக்கும் படத்திற்கு மிஸ்டர்.லோக்கல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரவிக்குமார் இயக்கும் படம் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது.
படம்குறித்து இயக்குநர் ரவிக்குமார் பேசும் போது,
``இது, அறிவியல் சார்ந்த படம். இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல்பிரீத்சிங் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.
அறிவியல் சார்ந்த படம் என்பதால், படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக உள்ளன. இதற்காக 100-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் இரவு பகலாக பணிபுரிந்து வருகிறார்கள்.

ஹாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட `அலெக்சா எல்.எப்.' என்ற கேமரா, இந்த படத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அதி நவீன கேமரா பயன்படுத்தப்படும் முதல் தமிழ் படம், இதுதான். படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், அரக்குவேலி ஆகிய இடங்களில் நடந்தது.
இது, சிவகார்த்திகேயனுக்கு முக்கியமான படமாக இருக்கும். படத்தில் அவர் விவசாயியாக நடிக்கிறார். ரகுல்பிரீத்சிங், வேலை பார்க்கும் பெண்ணாக வருகிறார். கருணாகரன், யோகி பாபு நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார்கள்.'' இவ்வாறு அவர் கூறினார். #SK14 #Sivakarthikeyan #Ravikumar #RakulPreetSingh