தொடர்ச்சியான அப்டேட்கள்.. சூர்யா 44-இல் இணையும் பிரபலங்கள்

சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
தொடர்ச்சியான அப்டேட்கள்.. சூர்யா 44-இல் இணையும் பிரபலங்கள்
Published on

நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. இத்துடன் படக்குழு வெளியிட்ட வீடியோவில் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சூர்யா 44 படத்தில் ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோரும் நடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com