என் மலர்

  நீங்கள் தேடியது "Sayyeshaa"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திரை ஜோடியான ஆர்யா - சாயிஷா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு நிஜத்தில் ஜோடியான பின்னர், சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
  `கஜினிகாந்த்', `காப்பான்' படங்களில் இணைந்து நடித்த ஆர்யா - சாயிஷாவுக்கு காதல் மலர்ந்தது. இருவீட்டாரது சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். நிஜத்தில் ஜோடியான இவர்கள் தற்போது, மீண்டும் திரையில் இணைந்து நடிக்கின்றனர்.

  `டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கவிருக்கும் `டெடி' என்ற படத்தில் ஆர்யா நாயகனாக நடிப்பதாக அறிவித்த நிலையில், தற்போது அவருக்கு ஜோடியாக அவரது மனைவி சாயிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார். சதீஷ், கருணாகரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்ய, சக்தி சரவணன் சண்டைக்காட்சிகளையும், சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.


  ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் பணிகள் முழுவீச்சில் நடப்பதாக மோகன் ராஜா கூறியிருக்கிறார்.
  கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகிய தனி ஒருவன் திரைப்படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு தனி ஒருவன் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் அறிவித்தனர்.

  இந்தப் படத்திலும் ஜெயம் ரவி எஸ்பியாக நடிக்க உள்ளார். தடயவியல் துறை நிபுணராக நயன்தாரா நடிக்கிறார்.

  தனி ஒருவன் திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரமே அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யுதான். இரண்டாம் பாகம் எனும்போது, முதல் படத்திலிருந்த மாஸ் வில்லன் இன்னும் பிரமிப்பூட்டும் வகையில் இருக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் மோகன் ராஜா உள்ளார்.  தனி ஒருவன் 2 படத்திற்கான வேலைகள் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. இந்த நிலையில், மீண்டும் தனி ஒருவன் படத்தை பார்த்த இயக்குநர் ராம், ராஜா மீண்டும் தனி ஒருவன் படத்தை பார்தேன், மிகப் பெரிய உழைப்பு, அடுத்த பாகத்தை ரொம்ப கவனத்துடன் எடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

  அதற்கு மோகன் ராஜா அளித்த பதிலில், தனி ஒருவன் 2 படத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தனது உதவி இயக்குநர்களிடம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விடலாமல்லவா? என்று கேட்டேன், 200% கண்டிப்பாக என்று கூறினார்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.


  ஜெயம் ரவி தற்போது கல்யாண் இயக்கத்தில் தனது 25-வது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்த பிறகு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் வெளியாகி இருக்கும் `வாட்ச்மேன்' படத்தின் விமர்சனம். #Watchman #WatchmanReview #GVPrakashKumar #SamyukthaHegde
  ஜி.வி.பிரகாஷ் ஸ்டன்ட் சில்வாவிடம் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கிறார். மறுபுறம் ஜி.வி.பிரகாஷ், சம்யுக்‌தா ஹெக்டே இருவரும் காதலிக்கிறார்கள். நாயகியின் பிடிவாதத்தால், சம்யுக்தாவை ஜி.வி.பிரகாஷுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்கிறார்கள்.

  அடுத்தநாள் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் நிலையில், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிடுவதாக கடன் கொடுத்தவர்கள் மிரட்டுகிறார்கள்.  இதையடுத்து வேறு வழி தெரியாமல் பங்களா ஒன்றில் திருட செல்கிறார் ஜி.வி.பிரகாஷ். அங்கு ஒரு நாயிடம் மாட்டிக் கொள்கிறார். நாய் அவரை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுக்கிறது. அதேநேரத்தில் அந்த வீட்டில் இருக்கும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான சுமனை கொல்வதற்காக மர்ம கும்பல் ஒன்று அந்த வீட்டிற்கு வருகிறது.

  கடைசியில், அந்த வீட்டில் இருந்து ஜி.வி.பிரகாஷ் தப்பித்தாரா? அவருக்கு தேவையான பணம் கிடைத்ததா? அவரது நிச்சயதார்த்தம் நடந்ததா? சுமனை கொல்ல வந்தவர்கள் யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே வாட்ச்மேனின் மீதிக்கதை.  ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார். இந்த படத்தில் நாய்க்கு பயந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். தமிழில் அறிமுகமாகும் சம்யுக்தா ஹெக்டேவுக்கு அதிகளவில் காட்சிகள் இல்லாவிட்டாலும் வரும் காட்சிகளில் அழுத்தமாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார்.

  யோகி பாபு காமெடி ஆங்காங்கு எடுபடுகிறது. சுமன் அனுபவ நடிப்பையும், ராஜ் அர்ஜூன், ரவி பிரகாஷ், சுவாமிநாதன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.  காமெடி கலந்த த்ரில்லர் கதையாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் விஜய். திரைக்கதை ஓரளவுக்கு விறுவிறுப்பாக நகர்ந்தாலும் ஆங்காங்கு தொய்வு இருப்பது போல் தோன்றுகிறது. அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். ஒரு வீட்டில் ஒருநாள் நடக்கும் சம்பவங்களை வைத்து கதையை நகர்த்துவது என்பது எளிதில்லை. அதனை சிறப்பாக கையாண்டிருக்கிறார் விஜய்.

  ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும், நிரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.

  மொத்தத்தில் `வாட்ச்மேன்' பரபரப்பு. #Watchman #WatchmanReview #GVPrakashKumar #SamyukthaHegde

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படம் குழந்தைகளும் ரசிக்கும்படியாக உருவாகி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. #Watchman #GVPrakashKumar
  தமிழ் சினிமாவில் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படங்கள் சமீபகாலத்தில் குறைந்துவிட்டன. ஜீவி.பிரகாஷ், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படம் அதை பூர்த்தி செய்யும் என்று படக்குழு கூறுகிறது.

  விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சாயிஷா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். நாய் ஒன்று முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. பழம்பெரும் நடிகை மனோரமா வாழ்ந்த வீட்டில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தின் தயாரிப்பாளர் அருண் மொழிவர்மன் படம் பற்றி கூறும்போது ‘நாயை பார்த்து பயப்படும் ஒரு இளைஞனுக்கு ஒரு நாயுடன் இரவு முழுக்க தங்க நேரிடுகிறது.  அந்த நாய் தன்னை காப்பாற்ற முயற்சிக்கிறது என்று தெரியாமல் அதை பார்த்து பயப்படுகிறான். இதுதான் கதை. படம் முழுக்க சிரிக்கவும் வைக்கும். திகில் அடையவும் வைக்கும். முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படமாக உருவாகி இருக்கிறது. கோடை விடுமுறையின் தொடக்கமான 12-ந் தேதி ரிலீசாகிறது’. இவ்வாறு அவர் கூறினார். #Watchman #GVPrakashKumar

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமா நட்சத்திரங்களான ஆர்யாவும், சாயிஷாவும் சமீபத்தில் திருமணம் கொண்டுள்ள நிலையில், திருமணத்திற்கு பிறகு சாயிஷா நடிப்பாரா என்ற கேள்விக்கு சாயிஷா ஆமாம் என்று பதில் அளித்துள்ளார். #Sayyeshaa #Arya
  வனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் பேத்தியான இவர், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். 

  சூர்யாவுடன் காப்பான் படத்தில் ஜோடி சேர்ந்த நிலையில் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த வாரம் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், சாயிஷா சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.  இதுபற்றி அவர் கூறுகையில் ‘ஆர்யாவை கரம் பிடித்ததில் மகிழ்ச்சி. எங்கள் குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கிறோம். தொடர்ந்து நடிப்பது பற்றி முடிவு எடுக்க ஆர்யா முழு உரிமை கொடுத்துவிட்டார். எனவே தொடர்ந்து நடிப்பேன். கதாநாயகர்கள் படம், தனி கதாநாயகி என வித்தியாசம் இல்லாமல் எப்போதும் போல எல்லா படங்களிலும் நடிப்பேன். சமந்தா, ஜோதிகா போன்றோரை இதில் எனக்கு முன்னுதாரணமாக கொண்டுள்ளேன்’. என்றார்.

  சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார். ‘டெடி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கரடி பொம்மை ஒன்று கிராபிக்ஸ் மூலம் நடிக்க உள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க சாயிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. #Arya #Sayyeshaa #AryawedsSayyeshaa #Teddy

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாயிஷாவை மனைவியாக பெற்றதில் மகிழ்ச்சி என்று நடிகர் ஆர்யா நேற்று நடந்த திருமண வரவேற்பில் கூறியுள்ளார். #Arya #Sayyeshaa #AryawedsSayyeshaa
  தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. 2005ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினி காந்த் என்று பல முக்கிய படங்களில் நடித்துள்ளார்.

  இந்த நிலையில் ஆர்யாவுக்கும், நடிகை சாயி‌ஷாவுக்கும் காதல் மலர்ந்தது. சாயி‌ஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தி ஆவார்.

  கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. காதலர் தினத்தன்று தாங்கள் திருமணம் செய்ய இருப்பதை ஒப்புக்கொண்டனர்.

  ஆர்யா, சாயிஷா திருமணம் கடந்த 10-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெற்றது. முன்னதாக நடந்த வரவேற்பு நிகழ்ச்சிகளில் இந்தி சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் கலந்துகொண்டனர். திருமணத்தில் நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஷாம் உள்ளிட்ட ஆர்யாவின் நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

  ஆர்யா-சாயிஷாவின் திருமண வரவேற்பு சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் இயக்குனர் விஜய், நடிகர்கள் பரத், சாந்தனு உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.  ஆர்யாவிடம் சாயிஷாவை திருமணம் செய்து கொண்டது பற்றி கேட்ட போது அவர் கூறியதாவது:-

  ‘சாயிஷாவை மனைவியாக பெற்றதில் மகிழ்ச்சி. கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே சின்ன ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் நண்பர்களாக மாறினோம். காப்பான் படத்தில் மீண்டும் நடிக்க தொடங்கியபோது எங்களுக்குள் இருந்த நட்பை பார்த்து, இருவரது பெற்றோரும் நிச்சயித்து திருமண ஏற்பாடுகள் செய்தார்கள்.

  வெகுகாலமாக என் பெற்றோர் என்னை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தி வந்தனர். அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றியதிலும் அவர்களுக்கு பிடித்த பெண்ணையே மனைவியாக அமைந்ததிலும் எனக்கு மகிழ்ச்சி. திருமணத்துக்கு பின்னர் நடிப்பது குறித்து சாயிஷாவின் முடிவுக்கே விடுகிறேன். அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டேன்’.

  இவ்வாறு அவர் கூறினார்.

  ஆர்யா நடிப்பில் மகாமுனி, டெடி என 2 படங்கள் தயாராகி வருகிறது. சாயிஷா காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கு நேற்று திருமணம் நடந்து முடிந்த நிலையில், வருகிற 14-ந் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. #AryawedsSayyeshaa #Arya #Sayyeshaa
  ‘அறிந்தும் அறியாமலும்‘ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆர்யா. ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்தபோது ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

  கடந்த பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று ட்விட்டர் பக்கத்தில் இருவரும் தங்கள் காதலை உறுதி செய்தனர். கடந்த 9-ந் தேதி மாலை ஐதராபாத்தில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் ஆர்யா - சாயிஷாவின் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது.

  இதில் இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான சஞ்சய் தத், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.  ஆர்யா-சாயிஷா திருமணம் நேற்று இஸ்லாமிய முறைப்படி நடந்தது. திருமண நிகழ்ச்சியிலும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

  நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஷாம், ராணா தயாரிப்பாளர்கள் ராஜசேகர பாண்டியன், ஞானவேல் ராஜா, தனஞ்செயன் உள்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். வருகிற 14-ந் தேதி சென்னையில் ஆர்யா - சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. #AryawedsSayyeshaa #Arya #Sayyeshaa

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் ஐதராபாத்தில் வைத்து இன்று திருமணம் நடந்து முடிந்தது. நடிகர்-நடிகைகள் பலரும் மணமக்களை வாழ்த்தி வருகின்றனர். #AryawedsSayyeshaa #Arya #Sayyeshaa
  நடிகர் ஆர்யா 2005-ம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு 38 வயது ஆகிறது.

  கடந்த வருடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் மணப்பெண் தேடல் நடந்தது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

  அதன்பிறகு பெற்றோரும் தீவிரமாக மணப்பெண் தேடிவந்தனர். இந்த நிலையில் ஆர்யாவுக்கும், நடிகை சாயி‌ஷாவுக்கும் காதல் மலர்ந்தது.

  சாயி‌ஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.  கடந்த பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று, சாயிஷாவையே திருமணம் செய்து கொள்ளப்போவதாக நடிகர் ஆர்யா ட்விட்டரில் பதிவிட்டார்.

  திரை பிரபலங்கள் பலரும் ஆர்யா - சாயிஷா ஜோடிக்கு திருமண வாழ்த்துகளை தெரிவிக்க ஆரம்பித்தனர். இதற்கிடையே மார்ச் 9 மற்றும் 10-ந் தேதிகளில் தங்களது திருமணம் நடைபெறும் என ஆர்யா-சாயிஷா ஜோடி தெரிவித்தது.

  திருமணத்தை முன்னிட்டு கடந்த 8-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தி நடிகர்-நடிகைகள் பலர் பங்கேற்று, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த நிகழ்ச்சியில் நடிகை சாயிஷா போட்ட ஆட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.  இந்நிலையில் இன்று காலை ஐதராபாத்தில் ஆர்யா-சாயிஷா திருமணம் நடைபெற்றது. நேற்று நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தி நடிகர்-நடிகைகள் மற்றும் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். #AryawedsSayyeshaa #Arya #Sayyeshaa

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆர்யா - சாயிஷா திருமணம் மார்ச்சில் நடைபெறவிருக்கும் நிலையில், தனது நண்பரும், நடிகருமான விஷாலுக்கு நடிகர் ஆர்யா நேரில் சென்று அழைப்பு விடுத்தார். #AryawedsSayyeshaa
  நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மார்ச்சில் திருமணம் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 10-ல் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  ஆர்யா - சாயிஷா திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நடிகர் ஆர்யா தனது நெருங்கிய நண்பர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில், தனது நண்பரும், நடிகருமான விஷாலை நேரில் சென்று அழைத்திருக்கிறார். இதுகுறித்த தகவலை நடிகர் விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


  அதில், எனக்கு நெருக்கமான புகைப்படமாக இது மாறிவிட்டது. என் நண்பன், அவனது திருமண அழைப்பிழை கொடுக்க வந்த இந்த தருணத்தை என்னால் நம்பவே முடியவில்லை. ஆர்யா - சாயிஷா காதலோடு மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். #Arya #Sayyeshaa #AryawedsSayyeshaa #Vishal

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காதலர் தினத்தன்று ஆர்யா - சாயிஷா திருமண அறிவிப்பு வெளியான நிலையில், இருவரும் வெளிநாடுகளில் சுற்றித்திரியும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Arya #Sayyeshaa
  நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச்சில் திருமணம் நடக்க இருப்பதாக ஆர்யா சமீபத்தில் அறிவித்தார்.

  இந்த நிலையில், ஆர்யாவும், சாயிஷாவும் தற்போது வெளிநாடுகளில் சுற்றி வருகிறார்கள். அங்கு ஜோடியாக எடுத்துக்கொண்ட படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கஜினிகாந்த் படத்தில் நடித்தபோதே இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் இது காதல் திருமணம் இல்லை என்றும், பெற்றோர்கள் முடிவு செய்த திருமணம் என்றும் சாயிஷாவின் அம்மா ஷாஹீன் கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “மற்றவர்கள் நினைப்பதுபோல் ஆர்யா-சாயிஷா திருமணம் காதல் திருமணம் அல்ல. இரு குடும்பத்தினரும் பேசி இந்த திருமணத்தை முடிவு செய்துள்ளோம். ஆர்யாவின் குடும்பத்தினருக்கு சாயிஷாவை பிடித்துப்போனதால் எங்களிடம் பேசினார்கள். எங்களுக்கும் ஆர்யாவை பிடித்து இருந்தது. அதனால் சம்மதித்தோம்” என்றார்.

  இவர்கள் திருமணம் மார்ச் 10-ந் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. ஆர்யா தற்போது சூர்யா, சாயிஷாவுடன் `காப்பான்' படத்தில் நடித்து வருகிறார். இந்தி படமொன்றிலும் நடிக்கிறார். திருமணத்துக்கு பிறகு சாயிஷா தொடர்ந்து நடிப்பாரா? அல்லது சினிமாவை விட்டு விலகுவாரா? என்று விரைவில் தெரிய வரும். #Arya #Sayyeshaa #AryawedsSayyeshaa

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆர்யா, சாயிஷா திருமணம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இவர்களது திருமணம் காதல் திருமணம் அல்ல என்றும் இருவீட்டாரும் சேர்ந்து பேசி முடிவு செய்தது என்றும் சாயிஷாவின் அம்மா கூறினார். #Arya #Sayyeshaa
  தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுள் ஆர்யாவும் ஒருவர். பூஜா, நயன்தாரா, அனுஷ்கா என பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட ஆர்யாவுக்கு அவரது பெற்றோர் நீண்ட காலமாக பெண் பார்த்து வந்தனர்.

  ஆர்யா தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்த சாயிஷாவை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வந்தன. இந்த செய்தியை காதலர் தினமான நேற்று ஆர்யா உறுதி செய்தார். அவரது டுவிட்டர் பக்கத்தில் வரும் மார்ச் மாதம் ‘நானும் சாயிஷாவும் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம்‘ என்று குறிப்பிட்டு இருக்கிறார். சாயிஷாவுடன் சேர்ந்து எடுத்த படம் ஒன்றையும் பதிவிட்டார். இதே பதிவை சாயிஷாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இதுகுறித்து சாயிஷாவின் அம்மா ஷாஹீனியிடம் கேட்டபோது, “எங்களுக்கு இந்த திருமணத்தில் முழு ஈடுபாடு இருக்கிறது. இந்த இனிய நாளில் எங்கள் குடும்பத்தினருக்கும், ஆர்யா குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அவரது டுவீட் இருந்தது. இது காதல் திருமணம் என்று பலரும் நினைத்து இருப்பார்கள். உண்மையில் இது இரு குடும்பத்தார்களும் சேர்ந்து எடுத்த முடிவு.

  ஆர்யாவின் குடும்பத்தினருக்கு சாயிஷாவை பிடித்துப்போக அவர்கள் திருமணத்திற்கு அணுகினார்கள். எங்களுக்கும் ஆர்யா போல் ஒருவர் என் மகளை திருமணம் செய்துகொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் தற்போது நாங்கள் அனைவரும் அதற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்“ என்று கூறினார். சாயிஷா பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தி ஆவார். #Arya #Sayyeshaa #AryaSayyeshaa

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin