என் மலர்
சினிமா

குழந்தைகளுக்கான படத்தில் ஜி.வி.பிரகாஷ்
விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படம் குழந்தைகளும் ரசிக்கும்படியாக உருவாகி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. #Watchman #GVPrakashKumar
தமிழ் சினிமாவில் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படங்கள் சமீபகாலத்தில் குறைந்துவிட்டன. ஜீவி.பிரகாஷ், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படம் அதை பூர்த்தி செய்யும் என்று படக்குழு கூறுகிறது.
விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சாயிஷா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். நாய் ஒன்று முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. பழம்பெரும் நடிகை மனோரமா வாழ்ந்த வீட்டில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தின் தயாரிப்பாளர் அருண் மொழிவர்மன் படம் பற்றி கூறும்போது ‘நாயை பார்த்து பயப்படும் ஒரு இளைஞனுக்கு ஒரு நாயுடன் இரவு முழுக்க தங்க நேரிடுகிறது.

அந்த நாய் தன்னை காப்பாற்ற முயற்சிக்கிறது என்று தெரியாமல் அதை பார்த்து பயப்படுகிறான். இதுதான் கதை. படம் முழுக்க சிரிக்கவும் வைக்கும். திகில் அடையவும் வைக்கும். முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படமாக உருவாகி இருக்கிறது. கோடை விடுமுறையின் தொடக்கமான 12-ந் தேதி ரிலீசாகிறது’. இவ்வாறு அவர் கூறினார். #Watchman #GVPrakashKumar
Next Story






