என் மலர்
சினிமா

வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் ஆர்யா - சாயிஷா
காதலர் தினத்தன்று ஆர்யா - சாயிஷா திருமண அறிவிப்பு வெளியான நிலையில், இருவரும் வெளிநாடுகளில் சுற்றித்திரியும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Arya #Sayyeshaa
நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச்சில் திருமணம் நடக்க இருப்பதாக ஆர்யா சமீபத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில், ஆர்யாவும், சாயிஷாவும் தற்போது வெளிநாடுகளில் சுற்றி வருகிறார்கள். அங்கு ஜோடியாக எடுத்துக்கொண்ட படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கஜினிகாந்த் படத்தில் நடித்தபோதே இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் இது காதல் திருமணம் இல்லை என்றும், பெற்றோர்கள் முடிவு செய்த திருமணம் என்றும் சாயிஷாவின் அம்மா ஷாஹீன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “மற்றவர்கள் நினைப்பதுபோல் ஆர்யா-சாயிஷா திருமணம் காதல் திருமணம் அல்ல. இரு குடும்பத்தினரும் பேசி இந்த திருமணத்தை முடிவு செய்துள்ளோம். ஆர்யாவின் குடும்பத்தினருக்கு சாயிஷாவை பிடித்துப்போனதால் எங்களிடம் பேசினார்கள். எங்களுக்கும் ஆர்யாவை பிடித்து இருந்தது. அதனால் சம்மதித்தோம்” என்றார்.
இவர்கள் திருமணம் மார்ச் 10-ந் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. ஆர்யா தற்போது சூர்யா, சாயிஷாவுடன் `காப்பான்' படத்தில் நடித்து வருகிறார். இந்தி படமொன்றிலும் நடிக்கிறார். திருமணத்துக்கு பிறகு சாயிஷா தொடர்ந்து நடிப்பாரா? அல்லது சினிமாவை விட்டு விலகுவாரா? என்று விரைவில் தெரிய வரும். #Arya #Sayyeshaa #AryawedsSayyeshaa
Next Story






