என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயராம்"

    • சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • பூவை ஜெகன் மூர்த்தியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச் சேர்ந்தவர் வனராஜ். இவரது மகள் விஜயஸ்ரீ (வயது 21). இவரும் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்துள்ள தனுஷ் (24) என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு விஜயஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் விஜயஸ்ரீ வீட்டை விட்டு வெளியேறி தனுசை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து வனராஜ் தனது மகளை மீட்டுத் தரும்படி மதுரையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி என்பவரை அணுகினார். அவர் மூலமாக கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி உதவியை நாடியதாக தெரிகிறது.

    பின்னர் கூடுதல் டி.ஜி.பி. ஒருவர் காரில் தனுசின் தம்பியான 17 வயது சிறுவன் கடத்தப்பட்டு மீண்டும் பின்னர் அவர் வீட்டின் அருகே விடப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.

    இதனையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதே சமயம், திருவாலங்காடு காவல்நிலையத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு விசாரணைக்காக பூவை ஜெகன் மூர்த்தி ஆஜராகினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி கட்டப்பஞ்சாயத்து செய்து காதல் ஜோடியை பிரிக்க முயன்றார் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது.

    அதிமுக கூட்டணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்தி கட்டப்பஞ்சாயத்து செய்தாரா இல்லையா? என்றே விவாதங்கள் கட்டமைக்கப்படுகிறதே தவிர, முதலமைச்சரின் கீழ் வரக்கூடிய உள்துறையில் இயங்கும் முக்கியமான ஒரு காவல்துறை அதிகாரி 'ஆள் கடத்தலில்' ஈடுபட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்ற செய்தி விவாத பொருளாகவே மாறவில்லை.

    பொதுமக்களை காக்க வேண்டிய உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரி ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது காவல்துறையை தன கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரின் பெயருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கம் இல்லையா?

    தமிழகத்தில் தினம் தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. கொங்கு மாவட்டங்களில் வயதானவர்கள் குறிவைத்து கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. சமூக ஆர்வலர் ஜபகர் அலி, முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் ஆகியோர் கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்பு கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவார் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், காவல்துறையே அவர் கட்டுப்பாட்டில் தான் உள்ளதா என்று கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சட்டம் ஒழுங்கை தன் கையில் எடுத்து கொண்டு ஆள் கடத்தலுக்கு போலீஸ் வாகனத்தை பயன்படுத்தும் தைரியம் ஏ.டி.ஜி.பி. ஜெயராமிற்கு எப்படி வந்தது. ஒருவேளை காவல்துறையினரின் இத்தகைய அத்துமீறல் யாருக்கும் தெரிவதில்லையா? இல்லை காவல்துறை உயரதிகாரிகள் இதனை கண்டுகொள்வதில்லையா?

    காவல்துறையினரின் இந்த அத்துமீறல் நீதிமன்றத்திற்கு தெரிகிறது, ஆனால் முதலமைச்சருக்கு தெரியவில்லையா? இல்லை அவருக்கு யாரும் தெரியப்படுத்துவது இல்லையா? உண்மையிலேயே முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் தான் காவல்துறை உள்ளதா? என்று நிறைய கேள்விகள் எழுகின்றன.

    பொதுமக்களின் மனதில் எழும் இந்த கேள்விகளை எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைப் போல கடந்து செல்லாமல் முதலமைச்சர் கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு. 

    • குற்ற வழக்குகளில் சிக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும்.
    • ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தொடர்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் தமிழக காவல் துறையின் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.

    இதன் விளைவாக ஜெயராம் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்ற வழக்குகளில் சிக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும்.

    அதன்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடு ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார். மேலும் வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைந்து குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை நீடிக்கும் எனவும் அவர் கூறினார்.

    அந்த அதிகாரி கூறியபடி இன்று காலை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காவல் தலைமையகம் வெளியிட்டது.

    இந்த நடவடிக்கையின் காரணமாக ஏ.டி.ஜி.பி. ஜெயராம் பணி ஓய்வு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதோடு அவருக்கு கிடைக்கும் ஓய்வூதிய பலன்களும் பாதிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

    இதுபோன்ற நடவடிக்கையில் தமிழக காவல் துறையின் சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் ஏற்கனவே சிக்கி உள்ளனர். அவர்களும் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாமல் தவிப்புக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது.

    நடிகர் சூர்யா நடிக்கும் 44வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடலான 'கண்ணாடி பூவே' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து ரெட்ரோ படத்தின் இரண்டாவது பாடலான கனிமா பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு பாடல் மிக வைரலாக அமைந்தது.

    படத்தின் பின்னணி காட்சிகளை காமிக் வடிவங்களில் படக்குழு வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் 8- வது அதியாயத்தை வெளியிட்டது அதில் நடிகர்களான ஜெயராம் மற்றும் ஜோஜு ஜார்க் படத்தின் எப்படி திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார் என்பதை விவரித்துள்ளது.

    ஜெயராம் எப்பொழுதும் நடிக்கும் போது அங்கு இருப்பவர்களை கலகலப்பாக வைத்திருப்பார். பல நடிகர்களின் குரலில் பேசி மற்றவர்களை சிரிக்க வைப்பார் என தெரிவித்துள்ளனர். மேலும் ஜோஜு ஜார்ஜ் மலையாளம் பேசினாலும் படப்பிடிப்பின் காட்சியின் போது பக்கா தமிழில் பேசி அசத்துவார் என அந்த காமிக்கில் பதிவிட்டுள்ளனர்.

    • மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயராம், தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயராம், தமிழில் முறை மாமன், தென்னாலி, நைனா, துப்பாக்கி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்த ஜெயராம்
    தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்த ஜெயராம்

    இந்நிலையில் நடிகர் ஜெயராம் தனது மனைவியுடன் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • திரைத்துறையின் ஆளுமையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா.
    • சில்க் ஸ்மிதாவிற்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

    1980-ல் நடிகரும், இயக்குனருமான வினுசக்கரவர்த்தி இயக்கிய 'வண்டிச்சக்கரம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சில்க் ஸ்மிதா. குறுகிய காலத்திலேயே உச்சத்தை தொட்ட சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டிற்காக ரஜினி, கமல், சத்யராஜ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் வரிசையில் நின்றனர்.


    சில்க் ஸ்மிதா கவர்ச்சி மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தினார். பாலுமகேந்திராவின் 'மூன்றாம் பிறை', பாரதிராஜாவின் 'அலைகள் ஓய்வதில்லை' போன்ற படங்களில் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். ஒரு கட்டத்தில் படங்களின் பாதி வசூலுக்கு காரணம் சில்க் ஸ்மிதா தான் என்கிற அளவிற்கு ஆளுமை செலுத்தினார். அன்று முதல் இன்று வரை சில்க் ஸ்மிதாவிற்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

    இந்நிலையில், நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது. இயக்குனர் ஜெயராம் இயக்கும் இந்த படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிகை சந்திரிகா ரவி நடிக்கிறார். இவர் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    சில்க் ஸ்மிதா -தி அன்டோல்ட் ஸ்டோரி போஸ்டர்

    'சில்க் ஸ்மிதா -தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை எஸ்.பி. விஜய் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 


    • நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.
    • இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சூர்யா 44 படத்திற்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ஷஃபீக் முகமது அலி படத்தொகுப்பு செய்கிறார்.

    சண்டை பயிற்சி பணிகளை கெச்சா கம்பக்தீ மேற்கொள்கிறார், கலை இயக்க பணிகளை ஜாக்கியும், ஆடை வடிவமைப்பு பணிகளை பிரவீன் ராஜா மேற்கொள்கின்றனர்.

    சூர்யா 44 படத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதைதொடர்ந்து உறியடி விஜயகுமார் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனவும், மலையாள நடிகர் ஜெயராம் இப்படத்தில் நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
    • இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. இத்துடன் படக்குழு வெளியிட்ட வீடியோவில் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளது.

     


    இந்த நிலையில், சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சூர்யா 44 படத்தில் ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோரும் நடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • காளிதாஸ் ஜெயராம் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • மாடலிங் துறையைச் சேர்ந்த தாரினி என்ற பெண்ணை காளிதாஸ் ஜெயராம் காதலித்து வந்தார்.

    பிரபல நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராம் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகின ராயன் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    மாடலிங் துறையைச் சேர்ந்த தாரினி என்ற பெண்ணை காதலிப்பதாக 2 ஆண்டுகளுக்கு முன்பு காளிதாஸ் ஜெயராம் தெரிவித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மலர்ந்துள்ளது. இவர்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

    இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதால் விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குடும்பத்துடன் சந்தித்த நடிகர் ஜெயராம் தனது மகன் காளிதாஸ் ஜெயராமின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

    கேரளாவை சேர்ந்த நடிகர் ஜெயராம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து திருமண பத்திரிக்கை வழங்காமல் தமிழக முதல்வருக்கு முதல் பத்திரிக்கை வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×