சூர்யா 44 படத்தில் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்

நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யா 44 படத்தில் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்
Published on

நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சூர்யா 44 படத்திற்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ஷஃபீக் முகமது அலி படத்தொகுப்பு செய்கிறார்.

சண்டை பயிற்சி பணிகளை கெச்சா கம்பக்தீ மேற்கொள்கிறார், கலை இயக்க பணிகளை ஜாக்கியும், ஆடை வடிவமைப்பு பணிகளை பிரவீன் ராஜா மேற்கொள்கின்றனர்.

சூர்யா 44 படத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதைதொடர்ந்து உறியடி விஜயகுமார் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனவும், மலையாள நடிகர் ஜெயராம் இப்படத்தில் நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com