search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Kalidas Jayaram"

  • ரஜினிகாந்த நடிப்பில் “தலைவர் 171” படத்தை இயக்கி வருகிறார்.
  • இந்நிலையில் இந்த லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்சின் ஆரம்பக்கதை கூறுவதற்கு லோகேஷ் தற்போது ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்

  லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த நடிப்பில் "தலைவர் 171" படத்தை இயக்கி வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகியது.

  லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் கதைக்களத்தில் படம் இயக்குவதில் திறம் பெற்றவர். ஹோலிவுட் ஸ்டைலில் அவருக்கென LCU என சினிமேட்டிக் யூனிவர்சை தன் படங்களின் மூலம் உருவாக்கியுள்ளார்.

  இவர் இயக்கிய கைதி, விக்ரம், லியோ இந்த எல்.சி.யூ கான்சப்டில் வரும். இது தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாகும். அடுத்ததாக கைதி 2, விக்ரம் 2, ரோலெக்ஸ் போன்ற படங்கள் இயக்குவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

  இந்நிலையில் இந்த லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்சின் ஆரம்பக்கதை கூறுவதற்கு லோகேஷ் தற்போது ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும் படத்தில் நரேன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

  படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. இக்குறும்படம் இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார்.
  • அவரின் 50 வது படமான ’ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.

  நடிகர் , பாடகர் , பாடலாசிரியர் , தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என தனுஷ் பன்முகத்தன்மையுடையவர். 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார். ராஜ் கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் வெளியாகியபோது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

  திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.

  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

  ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது.

  இந்நிலையில் ராயன் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறி படத்தின் முதல் பாடல் இன்னும் சில நாட்களில் வெளியிடுவதாக தெரிவித்து போஸ்டர் ஒன்றை எக்ஸ் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

  அதில் தனுஷ், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல் நின்றுக் கொண்டு இருக்கின்றனர். இப்பட போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • பிஜாய் நம்பியார் இப்படத்தை இயக்கினார்.
  • அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் முன்னணி கதாப்பத்திரத்தில் நடித்து மார்ச் 1 ஆம்தேதி திரையரங்குகளில் வெளிவந்த படம் போர்.

  அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் முன்னணி கதாப்பத்திரத்தில் நடித்து மார்ச் 1 ஆம்தேதி திரையரங்குகளில் வெளிவந்த படம் போர். தமிழ் - இந்தி என இரு மொழிகளிலும் இப்படம் வெளியானது. இந்தியில் டாங்கி என்ற பெயரில் வெளியானது. பிஜாய் நம்பியார் இப்படத்தை இயக்கினார்.

  மக்களிடையே இப்படம் கலந்த விமர்சனத்தை பெற்றது. சஞ்சனா நட்ராஜன், பானு, ஜான் விஜய், விவேக் ராஜகோபால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். காலேஜில் படிக்கும் சீனியருக்கும் ஜூனியருக்கும் இடையே இருக்கும் ஈகோ, துரோகம் பற்றிய கதைக்களமாக அமைந்தது . அதில் அரசியல் குறியீடுகளையும் சாதி பாகுபாடுகளையும் மிக நேர்த்தியாக காண்பித்திருப்பார் இயக்குனர் பிஜாய் நம்பியார்.

  இப்படம் இப்பொழுது ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸில் இன்று  வெளியாகியுள்ளது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • போர் திரைப்படம் இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கிறது.
  • போர் படம் மார்ச் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.

  சைத்தான், டேவிட், வாஷிர், ஷோலோ படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் நடித்திருக்கும் புதிய படம் "போர்". டி.ஜே. பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொசாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

  இந்த படம் தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் மார்ச் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை டி சீரிஸ் மற்றும் ரூக்ஸ் மீடியா இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் தொடர்பான விழா சமீபத்தில் நடைபெற்றது.

   


  இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அர்ஜூன் தாஸ் பேசும் போது, "போர் திரைப்படம் ஒரு கல்லூரி கால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். கொண்டாட்டத்திற்கான திரைப்படம், நட்பும் படத்தில் சிறிய அளவில் இருக்கிறது. வேறு வேறு விதத்திலான உணர்வுகள் படத்தில் கொட்டிக்கிடக்கிறது."

  "இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. காளிதாஸ் ஜெயராமுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் படப்பிடிப்பு தளத்தில் டேக் செல்வதற்கு முன்பு வரை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான். ரொம்பவே சேட்டை செய்வான். மற்றபடி மிகச்சிறந்த நண்பன். காளிதாஸ் உடன் சேர்ந்து நடித்த அனுபவம் மகிழ்ச்சியானது' என்று தெரிவித்தார்.

  • இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
  • இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

  இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கி விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் "போர்" திரைப்படத்தின் 2வது பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

  தமிழில் டேவிட், சோலோ உள்ளிட்ட திரைப்படங்கள், நவரசா, ஸ்வீட் காரம் காபி போன்ற பிரபல வெப் சீரீஸ்களை இயக்கியவர் இயக்குனர் பிஜோய் நம்பியார்.

  இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். 

  தமிழ் மாட்டு இல்லாமல், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

  இந்நிலையில், தமிழ் மற்றும் இந்தியில் உருவாகி இருக்கும் "போர்" படம் வரும் மார்ச் 1ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தியில் "டாங்கே" என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தில் தமிழில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர்

  இந்த படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், போர் படத்தின் 2வது பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. "நண்பகல் நேரம்" என்ற இந்த பாடல் வைரலாகி வருகிறது.

  • காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அவள் பெயர் ரஜ்னி’.
  • இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அவள் பெயர் ரஜ்னி'. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


  அவள் பெயர் ரஜ்னி

  நவரசா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு 4 மியூசிக்ஸ் இசையமைக்கின்றனர். ஆர்.ஆர்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இன்வெஸ்டிகேசன் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


  அவள் பெயர் ரஜ்னி

  இந்நிலையில், 'அவள் பெயர் ரஜ்னி' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஒரு பரபரப்பான விசாரணை, அதன் பின்னால் அவிழும் பல முடிச்சுகள் என எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதத்தில் உருவாகியுள்ள இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
  தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள நடிகர் ஒருவரை சொகுசு விடுதி ஊழியர்கள் சிறை பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  மலையாளம் மற்றும் ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம். இவரும் மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் மீன்குழம்பும், மண்பானையும், ஒருபக்க கதை ஆகிய படங்கில் நடித்துள்ளார். தற்போது வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.

  ஒரு வெப் தொடரில் நடிப்பதற்காக கேரள மாநிலம் மூணாறு பகுதிக்கு சென்றார் காளிதாஸ். அங்கு படக்குழுவினருடன் ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்தார். இதற்கான அறை வாடகை, ஓட்டல் கட்டணம் ஆகியவற்றை கட்ட ஊழியர் வலியுறுத்தினர்.

  இதையடுத்து படக்குழுவினர் ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்தினர். ஆனால் ஓட்டல் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை. இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் படக்குழுவினரை உடனே ஓட்டல் கட்டணத்தை கட்டுமாறு கூறினர்.

  காளிதாஸ் ஜெயராம்
  காளிதாஸ் ஜெயராம்

  இதில் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஓட்டல் ஊழியர்கள் நடிகர் காளிதாஸ் ஜெயராம் உள்பட படக்குழுவினரை சிறைபிடித்தனர். இதையடுத்து மூணாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடித்தினர்.

  அதன் பின்னர் படக்குழுவினர் ஓட்டல் கட்டணத்தை செலுத்தினர். இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் படக்குழுவினரை விடுவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  ×