லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் எல்.சி.யூ குறும்படம்

ரஜினிகாந்த நடிப்பில் “தலைவர் 171” படத்தை இயக்கி வருகிறார்.இந்நிலையில் இந்த லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்சின் ஆரம்பக்கதை கூறுவதற்கு லோகேஷ் தற்போது ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் எல்.சி.யூ குறும்படம்
Published on

லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த நடிப்பில் "தலைவர் 171" படத்தை இயக்கி வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகியது.

லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் கதைக்களத்தில் படம் இயக்குவதில் திறம் பெற்றவர். ஹோலிவுட் ஸ்டைலில் அவருக்கென LCU என சினிமேட்டிக் யூனிவர்சை தன் படங்களின் மூலம் உருவாக்கியுள்ளார்.

இவர் இயக்கிய கைதி, விக்ரம், லியோ இந்த எல்.சி.யூ கான்சப்டில் வரும். இது தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாகும். அடுத்ததாக கைதி 2, விக்ரம் 2, ரோலெக்ஸ் போன்ற படங்கள் இயக்குவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் இந்த லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்சின் ஆரம்பக்கதை கூறுவதற்கு லோகேஷ் தற்போது ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும் படத்தில் நரேன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. இக்குறும்படம் இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com