என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சந்தீப் கிஷன்"
- ராயன் திரைப்படம் இதுவரை 116 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
- தனுஷ் நடித்த படங்களிலே ராயன் தான் அதிகம் வசூலித்த படமாகும்.
நடிகர் தனுஷ் அவரது 50 வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி அதில் நடித்து இருந்தார். திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தில் தனுஷுக்கு தங்கையாக நடித்து இருந்தார் துஷாரா விஜயன்.
2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் ராயன் தான் வசூலில் முதல் இடம் பெற்றுள்ளது. ராயன் திரைப்படம் இதுவரை 116 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தனுஷ் நடித்த படங்களிலே ராயன் தான் அதிகம் வசூலித்த படமாகும்.
இந்நிலையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் பாக்கெட் வீடியோ பாடலை ராயன் படக்குழு வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
- இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் தனுஷுக்கு திரைப்பிரபலங்கள் அவர்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாள் வசூல் மட்டும்13 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் தனுஷுக்கு திரைப்பிரபலங்கள் அவர்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ராயன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள சந்தீப் கிஷன் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், " ஹேப்பி பர்த்டே டு மை ராயன், தனுஷ் அண்ணா, உங்களை போல் இருப்பது வாழ்வில் மிகவும் கடினம், தொடர்ந்து நடித்தும் எங்களை நடிக்க தூண்டுதலாக இருப்பதற்க்கு மிக்க நன்றி , நீங்கள் மிகவும் திறம்மைவாய்ந்தவர், உங்களுக்கு எப்பொழுதும் நல்லதே நடக்கும், ராயன் குடும்பத்தில் என்னை சேர்த்ததற்கு நன்றி இப்படிக்கு அவரது கதாப்பாத்திர பெயரான முத்துவேன் ராயன் " என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமையலறை பகுதியில் அதிகளவில் கழிவுநீர் தேங்கி இருந்ததையும் கண்டறிந்தனர்.
- பிரபலமான ஓட்டலில் பங்குதாரராக உள்ளார்.
திருப்பதி:
பிரபல தெலுங்கு சினிமா நடிகர் சந்தீப் கிஷன். இவர் தமிழில் கடைசியாக தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். இவர் ஐதராபாத் ஜூப்ளிகில்ஸ் மற்றும் செகந்தி ராபாத் ஆகிய இடங்களில் பிரபலமான ஓட்டலில் பங்குதாரராக உள்ளார்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று திடீரென செகந்திரா பாத்தில் உள்ள நடிகருக்கு சொந்தமான ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 25 கிலோ காலாவதியான அரிசி இருந்தது. மேலும் பச்சை மற்றும் அரைத்த உணவுகளில் லேபிள்கள் இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டது.
துருவிய தேங்காய்களில் சில இயற்கை உணவு வண்ணங்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். சமையலறை பகுதியில் அதிகளவில் கழிவுநீர் தேங்கி இருந்ததையும் கண்டறிந்தனர்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஓட்டல் நிர்வாகத்தினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் செகந்தி ராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.
- படத்தின் முதல் பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது அப்பாடலிற்கு 'அடங்காத அசுரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது. படத்தின் போஸ்டரை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட்டனர்.
படத்தின் முதல் பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது அப்பாடலிற்கு 'அடங்காத அசுரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அப்டேட்டை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படம் எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.
- சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது. படத்தின் போஸ்டரை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட்டனர்.
படத்தின் முதல் பாடல் வரும் மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 2 அப்பாடலிற்கு 'அடங்காத அசுரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக அப்டேட்டை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படம் எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்தின் முதல் பாடல் வரும் மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார். ராஜ் கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் வெளியாகியபோது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது. படத்தின் போஸ்டரை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட்டனர். தற்பொழுது படத்தின் பெரிய அப்டேட்டை தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.
படத்தின் முதல் பாடல் வரும் மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக அப்டேட்டை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர் அதில் தனுஷ் நெருப்பில் எரியும் கற்கள் மீது உட்கார்திருக்கிறார் அவருக்கு பின் 10 தலைக்கொண்ட ராவணனன் உருவசிலை இருக்கிறது. இப்படம் எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார்.
- சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார். ராஜ் கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் வெளியாகியபோது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்தது வெளியிட்டது. படத்தின் போஸ்டரை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட்டனர். தற்பொழுது படத்தின் பெரிய அப்டேட்டை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார்.
- அவரின் 50 வது படமான ’ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.
நடிகர் , பாடகர் , பாடலாசிரியர் , தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என தனுஷ் பன்முகத்தன்மையுடையவர். 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார். ராஜ் கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் வெளியாகியபோது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது.
இந்நிலையில் ராயன் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறி படத்தின் முதல் பாடல் இன்னும் சில நாட்களில் வெளியிடுவதாக தெரிவித்து போஸ்டர் ஒன்றை எக்ஸ் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
அதில் தனுஷ், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல் நின்றுக் கொண்டு இருக்கின்றனர். இப்பட போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரஞ்சித் ஜெயகொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மைக்கல்.
- இப்படம் விதியை மீறி ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டதாக தியேட்டர்களில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழில் யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான சந்தீப் கிஷன் நடிப்பில் மைக்கேல் படம் தயாராகி கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இதில் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருந்தார்.
புதிய படங்களை திரையரங்குகளில் வெளியான பிறகு 4 வாரங்கள் கழித்தே ஓ.டி.டி. தளங்களில் வெளியிட வேண்டும் என்று திரையரங்க அதிபர்கள் சங்கம் கட்டுப்பாடு விதித்து உள்ளது. ஆனால் மைக்கேல் படத்தை 3 வாரத்திலேயே ஓ.டி.டி.யில் வெளியிட்டு விட்டதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் தியேட்டர்களில் மைக்கேல் படத்தை திரையிட தடை விதிக்க முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகி ஸ்ரீதர் கூறும்போது, "மைக்கேல் திரைப்படத்தை 3 வாரத்திலேயே ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டதால் மற்ற தயாரிப்பாளர்களும் அதுமாதிரி செய்வார்களோ என்ற அச்சம் வருகிறது. இதுசம்பந்தமாக திரையரங்க அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் கூட்டம் நடத்தி மைக்கேல் படத்தின் தயாரிப்பாளர், பட நிறுவனம், இயக்குனர் ஆகியோருக்கு வருங்காலங்களில் ஒத்துழைப்பு அளிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்'' என்றார்.
- நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மைக்கேல்'.
- இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'மைக்கேல்'. இப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் திவ்யன்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
மைக்கேல்
இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் நிகழ்ச்சியில் சந்தீப் கிஷன் கூறியதாவது, "நான் டைரக்டர் கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி நடிகரானேன். வாய்ப்பு தேடிய ஆரம்ப காலத்தில் தெலுங்கு, இந்தியில் நடித்த படங்கள் வெற்றி பெற்றன. தொடர்ந்து தெலுங்கில் அதிக படங்கள் வந்தன.
மைக்கேல்
என்னை வைத்து 'மாநகரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் பெரிய டைரக்டராக மாறி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மாநகரம் 2-ம் பாகம் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். மைக்கேல் படத்தில் விஜய்சேதுபதி விடுமுறை நாட்களிலும் வந்து நடித்து கொடுத்தார். இந்த படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மைக்கேல் 2-ம் பாகம் எடுப்பது பற்றி யோசிப்போம்'' என்றார்.
- இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மைக்கேல்’.
- இப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர்.
புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'மைக்கேல்'. இப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் திவ்யன்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறது. 'மைக்கேல்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 'மைக்கேல்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நந்தமுரி பாலகிருஷ்ணா, ஜெயம் ரவி, அனிருத் ரவிச்சந்தர், நிவின்பாலி ஆகியோர் இணைந்து தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டிரைலரை வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மைக்கேல்’.
- இப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர்.
புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'மைக்கேல்'. இப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் திவ்யன்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
மைக்கேல் பட போஸ்டர்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'மைக்கேல்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
Meet the Man who Loved the Hardest #MICHAEL ?
— Sundeep MICHAEL Kishan (@sundeepkishan) January 3, 2023
Worldwide only in Theatres on
Feb 3rd, 2023 ?#MichaelfromFEB3rd ??@VijaySethuOffl @Divyanshaaaaaa @menongautham @anusuyakhasba @jeranjit @itsvarunsandesh @SamCSmusic @SVCLLP @KaranCoffl #NarayandasNarang pic.twitter.com/5NEnI0KZgW