'மாநகரம்' இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த சந்தீப் கிஷன்

நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மைக்கேல்'.இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சந்தீப் கிஷன்
சந்தீப் கிஷன்
Published on

 புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'மைக்கேல்'. இப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் திவ்யன்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

மைக்கேல்

இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் நிகழ்ச்சியில் சந்தீப் கிஷன் கூறியதாவது, "நான் டைரக்டர் கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி நடிகரானேன். வாய்ப்பு தேடிய ஆரம்ப காலத்தில் தெலுங்கு, இந்தியில் நடித்த படங்கள் வெற்றி பெற்றன. தொடர்ந்து தெலுங்கில் அதிக படங்கள் வந்தன.

மைக்கேல்

என்னை வைத்து 'மாநகரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் பெரிய டைரக்டராக மாறி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மாநகரம் 2-ம் பாகம் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். மைக்கேல் படத்தில் விஜய்சேதுபதி விடுமுறை நாட்களிலும் வந்து நடித்து கொடுத்தார். இந்த படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மைக்கேல் 2-ம் பாகம் எடுப்பது பற்றி யோசிப்போம்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com