என் மலர்

  நீங்கள் தேடியது "Sundeep Kishan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் சந்தீப் கிஷன் நடிக்க இருக்கிறார்.
  தமிழ் சினிமாவில் வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்குவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலான படங்கள் முதல் பாகத்தை போல இரண்டாம் பாகம் பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. என்றாலும் இந்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

  அந்த வகையில் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்‌‌ஷன் பாணியில் உருவாகி வெற்றி பெற்ற ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல் பாகத்தில் விஷ்ணு விஷால் நடித்து இருந்தார். இரண்டாம் பாகத்தில் மாநகரம், நரகாசூரன் ஆகிய படங்களில் நடித்துள்ள சந்தீப் கி‌ஷன் கதா நாயகனாக நடிக்க உள்ளார்.   ரவிக்குமாரின் உதவி இயக்குநர் இந்தப் படத்தை இயக்க உள்ளார். நாயகியாக முதல் பாகத்தில் நடித்த மியா ஜார்ஜ் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வரலட்சுமி அடுத்ததாக தெலுங்கில் ஒரு படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். #Varalakshmi #Haniska
  தமிழ் சினிமாவில் தற்போது அதிகமான படங்களில் நடிப்பது வரலட்சுமி தான். கதாநாயகியாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார்.

  தான் நடிக்கும் படங்களில் வேறு கதாநாயகிகள் இருந்தாலும் கவலைப்படாமல் நடிக்கிறார். சர்கார், சண்டக்கோழி 2, மாரி 2 என்று அந்த வரிசையில் நீயா 2, காட்டேரி படங்களிலும் 2 ஆம் கதாநாயகியாக நடிக்கிறார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வெல்வெட் நகரம், சக்தி, ராஜபார்வை, டேனி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கன்னிராசி அடுத்ததாக ரிலீசாக இருக்கிறது.  இந்த நிலையில், தெலுங்கிலும் வரலட்சுமிக்கு வாய்ப்புகள் வருகின்றன. தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.,பிஎல் என்ற தெலுங்கு படத்தில், சந்தீப் கி‌ஷனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளார். அதில், வரலட்சுமியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கப்போகிறார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கவும் வரலட்சுமி திட்டமிட்டு உள்ளார். #Varalakshmi #Haniska

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் ராஜூ இயக்கத்தில் சந்தீப் கிஷன் - அன்யா சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `கண்ணாடி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், படத்தின் இசை விரைவில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Kannaadi
  சமீபத்தில் வெளியான `மதுரவீரன்' படத்தை தயாரித்த வி ஸ்டுடியோஸ் அடுத்ததாக அமலாபால் நடிக்கும் `ஆடை' படத்தை தயாரித்து வருகிறது. அதேநேரத்தில் வி ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்ரீ சரவண பவா ஃபிலிம்ஸ் இணைந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் `கண்ணாடி' எனும் படத்தையும் தயாரித்து வருகிறது.

  சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆன்யா சிங் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

  `திருடன் போலிஸ்', `உள்குத்து' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ இந்த படத்திற்க்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இயக்கி இருக்கிறார். ரசிகர்களுக்கு புதிய த்ரில் அனுபவங்களை வழங்கும் திகில் கலந்த த்ரில்லர் படமாக படத்தின் திரைக்கதையை அமைத்திருப்பதாகவும், மேலும் இது ஒளி மற்றும் ஒலியமைப்பின் சிறந்த பங்களிப்போடு ஒரு ரொமாண்ட்டிக் த்ரில்லராக படத்தை உருவாக்கி வருவதாக இயக்குனர் கார்த்திக் ராஜூ கூறியிருக்கிறார்.  தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவின் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

  இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இசை விரைவில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Kannaadi #SundeepKishan #AnyaSingh 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆத்மிகா நடித்துள்ள நரகாசூரன் படம் ஒரு வழக்கமான படமாக இருக்காது என்று சந்தீப் கிஷன் கூறியுள்ளார். #Naragasooran #SundeepKishan
  சந்தீப் கி‌ஷன் நடிப்பில் நரகாசூரன் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அவரிடம் பேசியதில் இருந்து...

  பாடல்கள், சண்டை என்று வழக்கமான படமாக இருக்காது. இந்த படம் பார்த்த அனுபவமே வேறு மாதிரியாக இருக்கும். படத்தை தியேட்டரில் பார்த்தால் மட்டும் தான் அந்த அனுபவம் கிடைக்கும். எனக்கு மட்டுமல்ல அரவிந்த்சாமி, ஸ்ரேயா, ஆத்மிகா என அனைவருக்குமே முக்கிய படமாக இருக்கும். நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும்.

  தமிழில் 4 படங்கள் தான் நடித்துள்ளேன். ரசிகர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த தான் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கிறேன். அஜித், விஜய் படத்துக்கும் எனக்கும் ஒரே விலை டிக்கெட் தான். என்னை போன்ற வளரும் நடிகர்கள் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். நான் பிறந்தது வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில் தான். வாய்ப்பு தேடும்போது தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லா மொழிகளிலுமே தேடினேன். தெலுங்கில் கிளிக் ஆனது. ஐதராபாத் சென்றால் தமிழ் பையனாக பார்க்கிறார்கள். சென்னை வந்தால் தெலுங்கு நடிகராக பார்க்கிறார்கள். என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று காத்திருக்கிறேன்.

  தெலுங்கில் பெரிய போட்டி இருக்குமே... எப்படி ஜெயித்தீர்கள்?

  எனக்கு அப்படி தெரியவில்லை. நாம் நேர்மையாக இருந்து கடினமாக உழைத்தால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும். எனக்கு பிறகு வந்தவர்கள் தான் விஜய்சேதுபதியும், சிவகார்த்திகேயனும். ஆனால் எனக்கு முன்பு இருந்தே அவர்கள் தங்கள் கடின உழைப்பை கொட்டியிருக்கிறார்கள். அதுதான் அவர்களின் வெற்றிக்கு காரணம். சினிமாவில் நேரம் முக்கியம்.  தெலுங்கில் இந்தி இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் நடிக்கிறேன். தமன்னா எனக்கு ஜோடியாக நடிக்கிறார். திருடன் போலீஸ் இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ஒரு படம் சென்று கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் என்று கட்டுப்பாடு வைத்துள்ளேன்.

  அதிகமாக நண்பர்கள் இல்லாமல் தனியாக இருக்கிறீர்களே?

  எனக்கு மது பழக்கம் இல்லை. அதனால் பார்ட்டிகளில் என்னை பார்க்க முடியாது. விஷால் என் உடன் பிறக்காத அண்ணன். சித்தார்த், விஷ்ணு என சில நண்பர்கள் இருக்கிறார்கள். வரு சரத்குமார், ராகுல் ரவீந்தர், தமன்னா, ரெஜினா என்று நண்பர்கள் பட்டியல் கொஞ்சம் நீளும் என்றார். #Naragasooran #SundeepKishan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நரகாசூரன்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Naragasooran
  கார்த்திக் நரேன் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான படம் துருவங்கள் 16. கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டு உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. 

  இதில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ரோன் ஈதன் யோகன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.  தற்போது பின்னணி வேலைகள் முடிந்து தணிக்கை குழுவிற்கு படம் அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
  ×