என் மலர்

  நீங்கள் தேடியது "Naragasooran"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமான ஸ்ரேயா, திருமண வாழ்க்கை விற்பனைக்கு அல்ல என்று கூறியிருக்கிறார். #Shriya
  ரஜினி, விஜய், தனுஷ் என்று முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு சுற்றை முடித்துவிட்ட ஸ்ரேயா திருமணத்துக்கு பின்பும் நரகாசுரன் படம் மூலம் அடுத்த சுற்றுக்கு தயாராகி வருகிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் ’என் அடுத்த தெலுங்கு படம் எ லிட்டில் பேர்டு. முதன்முதலாக பெண் இயக்குனரின் படத்தில் நடிக்கிறேன்.

  இது ஆணாதிக்கம் மிக்க துறை என்பதை மறுக்கவில்லை. அப்படிப்பட்ட துறையில் பெண்கள் இயக்குனர்களாவதை பார்க்க பெருமையாக உள்ளது. கேமராவுக்கு முன்பு மட்டும் அல்ல பின்பும் கூட நிறைய பெண்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்பொழுது தான் நல்ல மாற்றம் ஏற்படும். இது ஹீரோயினை மையப்படுத்திய படம் என்று பல இயக்குனர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள்.

  ஆனால் அந்த படத்தில் கூட பெண்ணை காப்பாற்ற ஒரு ஆணை கொண்டு வருகிறார்கள். அப்படி இருக்கும்போது அது என்ன பெண்களுக்கு முக்கியத்துவமான படம்?. சுவாரசியம் மற்றும் சவாலான கதைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்.  கதை நன்றாக இருந்தால் அனைத்தும் நன்றாக வந்துவிடும் என்று நம்புகிறேன். ஆலியா பட்டின் ராசி படம் தான் சிறந்த எடுத்துக்காட்டு. அரவிந்த்சாமியுடன் சேர்ந்து நரகாசூரன் படத்தில் நடித்துள்ளேன். இந்தியில் பிரகாஷ் ராஜுடன் தட்கா படத்தில் நடிக்கிறேன்.

  திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது என்று மட்டும் என்னிடம் கேட்காதீர்கள். அது என் தனிப்பட்ட வாழ்க்கை. விற்பனைக்கு அல்ல. அது குறித்து நான் எப்பொழுதுமே பேச மாட்டேன். அதில் நான் தெளிவாக உள்ளேன்’ என்று கூறியிருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரேயா தற்போது தெலுங்கில் நடித்து வரும் ‘வீர போக வசந்த ராயலு’ வீடியோவில் அவரது பிறந்தறாளில் வெளியாகிய நிலையில், அதில் ஸ்ரோயா புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. #ShriyaSaran
  நடிகை ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படம் மூலம் அறிமுகமானார். விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், விஷாலுடன் தோரணை, விக்ரமுடன் கந்தசாமி, தனுசுடன் திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, உத்தமபுத்திரன், ஆர்யாவுடன் சிக்குபுக்கு, ஜீவாவுடன் ரெளத்திரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தும் 2011-க்குப் பிறகு வாய்ப்புகள் குறைந்தன. அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்த நரகாசூரன் வெளியாக இருக்கிறது.  நேற்று முன் தினம் ஸ்ரேயாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் தெலுங்கில் நடித்து வரும் ‘வீர போக வசந்த ராயலு’ என்ற படத்தின் சிறிய காட்சி வெளியாகி உள்ளது. அதில் ஸ்ரேயா புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. #ShriyaSaran

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறு இடைவெளிக்குப் பிறகு ‘நரகாசூரன்’ படத்தில் நடித்திருக்கும் ஸ்ரேயா, அந்த மாதிரி படங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியிருக்கிறார். #Shriya #ShriyaSaran
  நடிகை ஸ்ரேயா தற்போது சிறு இடைவெளிக்குப் பிறகு ‘நரகாசூரன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அவர் மாலைமலருக்கு அளித்த பேட்டி வருமாறு...

  நரகாசூரன் படத்தில் நடித்த அனுபவம்?

  இந்த படம் மாறுபட்ட கதையம்சம் கொண்டது. இதுவரைக்கும் இதுபோன்ற கதையில் நடித்ததில்லை. படக்குழுவினர் அனைவரும் இப்படத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் என்ஜாய் பண்ணி டீம் ஒர்க்காக வேலை பார்த்தோம்.

  இயக்குனர் கார்த்திக் நரேன் பற்றி?

  மிகவும் திறமையானவர். அவருடைய கதை, மற்றும் சொன்ன விதம் எல்லாம் சிறப்பாக உள்ளது. ரசிகர்களின் பார்வையில் அவர் நினைக்கிறதை செய்து முடிப்பார். புதுமையான இயக்குனர். திரைக்கதையை திறமையாக திட்டமிட்டு அதை வரை படமாக வரைந்து இயக்கி இருக்கிறார். இவர் எனக்கான இடத்தை கொடுத்தார்.  நரகாசூரன் எதை சொல்ல வருகிறது?

  இப்படம் திரில்லர் படம். ஆனால், திரில்லர் மட்டும் சொல்ல வரவில்லை. இதில் காதல், மாயகதை உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது.

  இப்படத்தில் உங்கள் கதாபாத்திரம்?

  இதில் கீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பக்கத்து வீட்டு பெண் போல் அனைவரும் உணர்வீர்கள். என் நண்பர் ஒருவர் சோகமாக இருக்கும்போது, நான் பேசினால் அவர்கள் சிரித்து விடுவார்கள். அதுபோல், தான் இந்த கீதாவின் கதாபாத்திரம். கதையை படிக்கும் போது என்னையே பிரதிபலிப்பதுபோல் உணர்ந்தேன்.

  இளம் இயக்குனர் படத்தில் நடிக்க எப்படி சம்மதித்தீர்கள்?

  நிறைய அறிமுக இயக்குனர் படத்தில் நடித்திருக்கிறேன். அனுபவம் வாய்ந்த இயக்குனர் படத்திலும் நடித்திருக்கிறேன். புதுமுகம், அனுபவம் எல்லாம் முக்கியம் இல்லை. அவர்கள் கதை, திரைக்கதை எப்படி சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அதில் கார்த்திக் நரேன் கதை எனக்கு பிடித்தது. அதனால் நடிக்க சம்மதித்தேன்.

  பெண் இயக்குனர்கள் பற்றி?

  நிறைய பெண்கள் திரையில் வந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், திரைக்கு பின்னாலும் அவர்கள் வர வேண்டும். பெண் விநியோகஸ்தர், பெண் கேமராமேன், இயக்குனர்கள் வர வேண்டும்.  கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் எப்போது பார்க்கலாம்?

  கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நம்பிக்கை இல்லை. நல்ல படம், கெட்ட படம் அவ்வளவுதான். வலிமை மற்றும் புத்திசாலித்தனம் எனக்கு முக்கியம்.

  அடுத்தடுத்த படங்கள்?

  தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறேன். விரைவில் இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயா, தற்போது நயன்தாராவுடன் மோதாமல் திரிஷாவுடன் மோத இருக்கிறார். #Shreya #Nayanthara #Trisha
  தமிழில் ரஜினி, விஜய், விக்ரம் என பெரிய ஹீரோக்களுடன் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஸ்ரேயா. இவர் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது ‘நரகாசூரன்’ படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடித்திருக்கிறார். 

  துருவங்கள் 16 பட புகழ் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்தார்கள். ஆனால், அன்றைய தினத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இமைக்கா நொடிகள்’, தினேஷின் ‘அண்ணனுக்கு ஜே’ உள்ளிட்ட படங்கள் வெளியாவதால், செப்டம்பர் 13ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.  செப்டம்பர் 13-ல் திரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘96’, சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’, சமந்தாவின் ‘யூடர்ன்’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆத்மிகா நடித்துள்ள நரகாசூரன் படம் ஒரு வழக்கமான படமாக இருக்காது என்று சந்தீப் கிஷன் கூறியுள்ளார். #Naragasooran #SundeepKishan
  சந்தீப் கி‌ஷன் நடிப்பில் நரகாசூரன் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அவரிடம் பேசியதில் இருந்து...

  பாடல்கள், சண்டை என்று வழக்கமான படமாக இருக்காது. இந்த படம் பார்த்த அனுபவமே வேறு மாதிரியாக இருக்கும். படத்தை தியேட்டரில் பார்த்தால் மட்டும் தான் அந்த அனுபவம் கிடைக்கும். எனக்கு மட்டுமல்ல அரவிந்த்சாமி, ஸ்ரேயா, ஆத்மிகா என அனைவருக்குமே முக்கிய படமாக இருக்கும். நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும்.

  தமிழில் 4 படங்கள் தான் நடித்துள்ளேன். ரசிகர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த தான் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கிறேன். அஜித், விஜய் படத்துக்கும் எனக்கும் ஒரே விலை டிக்கெட் தான். என்னை போன்ற வளரும் நடிகர்கள் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். நான் பிறந்தது வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில் தான். வாய்ப்பு தேடும்போது தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லா மொழிகளிலுமே தேடினேன். தெலுங்கில் கிளிக் ஆனது. ஐதராபாத் சென்றால் தமிழ் பையனாக பார்க்கிறார்கள். சென்னை வந்தால் தெலுங்கு நடிகராக பார்க்கிறார்கள். என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று காத்திருக்கிறேன்.

  தெலுங்கில் பெரிய போட்டி இருக்குமே... எப்படி ஜெயித்தீர்கள்?

  எனக்கு அப்படி தெரியவில்லை. நாம் நேர்மையாக இருந்து கடினமாக உழைத்தால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும். எனக்கு பிறகு வந்தவர்கள் தான் விஜய்சேதுபதியும், சிவகார்த்திகேயனும். ஆனால் எனக்கு முன்பு இருந்தே அவர்கள் தங்கள் கடின உழைப்பை கொட்டியிருக்கிறார்கள். அதுதான் அவர்களின் வெற்றிக்கு காரணம். சினிமாவில் நேரம் முக்கியம்.  தெலுங்கில் இந்தி இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் நடிக்கிறேன். தமன்னா எனக்கு ஜோடியாக நடிக்கிறார். திருடன் போலீஸ் இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ஒரு படம் சென்று கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் என்று கட்டுப்பாடு வைத்துள்ளேன்.

  அதிகமாக நண்பர்கள் இல்லாமல் தனியாக இருக்கிறீர்களே?

  எனக்கு மது பழக்கம் இல்லை. அதனால் பார்ட்டிகளில் என்னை பார்க்க முடியாது. விஷால் என் உடன் பிறக்காத அண்ணன். சித்தார்த், விஷ்ணு என சில நண்பர்கள் இருக்கிறார்கள். வரு சரத்குமார், ராகுல் ரவீந்தர், தமன்னா, ரெஜினா என்று நண்பர்கள் பட்டியல் கொஞ்சம் நீளும் என்றார். #Naragasooran #SundeepKishan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேய் இருப்பதாக நம்பி தான் தங்கி இருந்த ஓட்டல் ஊழியர்களிடம் நரகாசூரன் நடிகை ஆத்மிகா ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார். #Aathmika
  ‘துருவங்கள் பதினாறு’ பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி உள்ள திரைப்படம் நரகாசூரன். சஸ்பென்ஸ் திரில்லர் வகை படமான இதில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கி‌ஷன், ஆத்மிகா, இந்திரஜித் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

  படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சந்தீப் கி‌ஷன் பேசியதாவது “கதையே கேட்காமல் நான் ஒப்புக்கொண்ட முதல் படம் நரகாசூரன். நான் பொறியியல் படிப்பில் சேர்ந்துவிட்டு பின்னர் நடிகனாக போகிறேன் எனக் கூறி பாதியில் நின்றபோது, படிக்காமல் இருக்கதான் நான் இந்த காரணத்தை கூறுகிறேன் என என் பெற்றோர் நினைத்தனர். ஆனால் நான் தற்போது நடிகனாக இருப்பதை நினைத்து அவர்கள் பெருமைபடுகின்றனர். நல்லவேளை அன்று நீ எனது பேச்சை கேட்கவில்லை என்று என் தந்தை கூறினார்.

  கார்த்திக் நரேன் ஒரு பெர்பெக்ட்டான இயக்குனர். மிக தெளிவாக திரைக்கதையை உருவாக்கி எங்களிடம் வேலை வாங்கினார். படப்பிடிப்பின் போது நானும் இந்திரஜித்தும் சேர்ந்து நடிகை ஆத்மிகாவை கிண்டல் செய்து கொண்டே இருந்தோம். ஒரு நாள் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் பேய் இருப்பதாக கிளப்பிவிட்டோம்.  அதை நம்பி பயந்துபோன அவர் ஓட்டல் ஊழியர்களை எல்லாம் வரவழைத்து ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார். படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார். நரகாசூரன் படம் வரும் 31 ம் தேதி வெளியாக இருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `நரகாசூரன்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #Naragasooran
  `துருவங்கள் பதினாறு' படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `நரகாசூரன்'. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. 

  இதில், இயக்குநர் கார்த்திக் நரேன், நடிகர் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன் மற்றும் ஆத்மிகா கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. மேலும் படம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.   கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரியோ சரண், ஆத்மிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

  ரோன் ஈதன் யோகன் இசையமைக்கும் இந்த படத்தில் பாடல்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. #Naragasooran #AravindSwamy

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நரகாசூரன்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Naragasooran
  கார்த்திக் நரேன் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான படம் துருவங்கள் 16. கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டு உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. 

  இதில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ரோன் ஈதன் யோகன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.  சமீபத்தில் படத்தை பார்த்த குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துருவங்கள் 16 படத்தின் வெற்றியை தொடர்ந்து நரகாசூரன் படத்தை இயக்கி இருக்கும் கார்த்திக் நரேனுக்கு பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். #NaragaSooran
  'துருவங்கள் 16' படத்திற்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் படம் 'நரகாசூரன்'. அரவிந்த் சாமி, இந்ரஜித், சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், ஆத்மிகா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ரோன் ஈதன் யோகன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

  இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கினர். 

  இந்த செய்தியை படத்தின் புதிய போஸ்டருடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் கார்த்திக் நரேன். இதற்கு பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், "எப்போது படம் வெளியாகும்? உங்களுடைய 'துருவங்கள் 16' படத்திற்கு நான் பெரிய ரசிகன்" என பதிவு செய்திருந்தார். அதைப் பார்த்து உற்சாகமான கார்த்திக் நரேன், நன்றி தெரிவித்து "ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்" என பதிலளித்தார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நரகாசூரன்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Naragasooran
  கார்த்திக் நரேன் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான படம் துருவங்கள் 16. கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டு உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. 

  இதில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ரோன் ஈதன் யோகன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.  தற்போது பின்னணி வேலைகள் முடிந்து தணிக்கை குழுவிற்கு படம் அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
  ×