என் மலர்

  நீங்கள் தேடியது "Shriya"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் ரஜினி, விஜய்யுடன் நடித்து பிரபலமான ஸ்ரேயா, தற்போது நடுரோட்டில் நடனம் ஆடும் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். #Shriya
  நடிகைகள் தங்களுக்கு பிடித்த வி‌ஷயங்களை செய்து அதை வீடியோ படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். இதில் தற்போது நடுரோடு வரைக்கும் கூட வர தொடங்கிவிட்டார்கள். ரஜினி, விஜய் என்று பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரேயா தற்போது நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார்.

  இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. தமிழில் புதிய படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் இவர் காத்திருக்கிறார். இந்தியில் தட்கா என்ற ஒரு படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நிலையில் வெளிநாடுகளுக்கு பறந்துவிடுகிறார் ஸ்ரேயா.   சமீபத்தில் வெளிநாடு சென்ற ஸ்ரேயா அங்குள்ள இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தார். பின்னர் அப்பகுதியில் நடந்த திருவிழாவுக்கு சென்றவர் அங்கு நடந்த காட்சிகளை ரசித்தார். உற்சாக மிகுதியில் நடுரோட்டிலேயே நடனம் ஆடத் தொடங்கினார். அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமான ஸ்ரேயா, திருமண வாழ்க்கை விற்பனைக்கு அல்ல என்று கூறியிருக்கிறார். #Shriya
  ரஜினி, விஜய், தனுஷ் என்று முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு சுற்றை முடித்துவிட்ட ஸ்ரேயா திருமணத்துக்கு பின்பும் நரகாசுரன் படம் மூலம் அடுத்த சுற்றுக்கு தயாராகி வருகிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் ’என் அடுத்த தெலுங்கு படம் எ லிட்டில் பேர்டு. முதன்முதலாக பெண் இயக்குனரின் படத்தில் நடிக்கிறேன்.

  இது ஆணாதிக்கம் மிக்க துறை என்பதை மறுக்கவில்லை. அப்படிப்பட்ட துறையில் பெண்கள் இயக்குனர்களாவதை பார்க்க பெருமையாக உள்ளது. கேமராவுக்கு முன்பு மட்டும் அல்ல பின்பும் கூட நிறைய பெண்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்பொழுது தான் நல்ல மாற்றம் ஏற்படும். இது ஹீரோயினை மையப்படுத்திய படம் என்று பல இயக்குனர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள்.

  ஆனால் அந்த படத்தில் கூட பெண்ணை காப்பாற்ற ஒரு ஆணை கொண்டு வருகிறார்கள். அப்படி இருக்கும்போது அது என்ன பெண்களுக்கு முக்கியத்துவமான படம்?. சுவாரசியம் மற்றும் சவாலான கதைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்.  கதை நன்றாக இருந்தால் அனைத்தும் நன்றாக வந்துவிடும் என்று நம்புகிறேன். ஆலியா பட்டின் ராசி படம் தான் சிறந்த எடுத்துக்காட்டு. அரவிந்த்சாமியுடன் சேர்ந்து நரகாசூரன் படத்தில் நடித்துள்ளேன். இந்தியில் பிரகாஷ் ராஜுடன் தட்கா படத்தில் நடிக்கிறேன்.

  திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது என்று மட்டும் என்னிடம் கேட்காதீர்கள். அது என் தனிப்பட்ட வாழ்க்கை. விற்பனைக்கு அல்ல. அது குறித்து நான் எப்பொழுதுமே பேச மாட்டேன். அதில் நான் தெளிவாக உள்ளேன்’ என்று கூறியிருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறு இடைவெளிக்குப் பிறகு ‘நரகாசூரன்’ படத்தில் நடித்திருக்கும் ஸ்ரேயா, அந்த மாதிரி படங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியிருக்கிறார். #Shriya #ShriyaSaran
  நடிகை ஸ்ரேயா தற்போது சிறு இடைவெளிக்குப் பிறகு ‘நரகாசூரன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அவர் மாலைமலருக்கு அளித்த பேட்டி வருமாறு...

  நரகாசூரன் படத்தில் நடித்த அனுபவம்?

  இந்த படம் மாறுபட்ட கதையம்சம் கொண்டது. இதுவரைக்கும் இதுபோன்ற கதையில் நடித்ததில்லை. படக்குழுவினர் அனைவரும் இப்படத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் என்ஜாய் பண்ணி டீம் ஒர்க்காக வேலை பார்த்தோம்.

  இயக்குனர் கார்த்திக் நரேன் பற்றி?

  மிகவும் திறமையானவர். அவருடைய கதை, மற்றும் சொன்ன விதம் எல்லாம் சிறப்பாக உள்ளது. ரசிகர்களின் பார்வையில் அவர் நினைக்கிறதை செய்து முடிப்பார். புதுமையான இயக்குனர். திரைக்கதையை திறமையாக திட்டமிட்டு அதை வரை படமாக வரைந்து இயக்கி இருக்கிறார். இவர் எனக்கான இடத்தை கொடுத்தார்.  நரகாசூரன் எதை சொல்ல வருகிறது?

  இப்படம் திரில்லர் படம். ஆனால், திரில்லர் மட்டும் சொல்ல வரவில்லை. இதில் காதல், மாயகதை உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது.

  இப்படத்தில் உங்கள் கதாபாத்திரம்?

  இதில் கீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பக்கத்து வீட்டு பெண் போல் அனைவரும் உணர்வீர்கள். என் நண்பர் ஒருவர் சோகமாக இருக்கும்போது, நான் பேசினால் அவர்கள் சிரித்து விடுவார்கள். அதுபோல், தான் இந்த கீதாவின் கதாபாத்திரம். கதையை படிக்கும் போது என்னையே பிரதிபலிப்பதுபோல் உணர்ந்தேன்.

  இளம் இயக்குனர் படத்தில் நடிக்க எப்படி சம்மதித்தீர்கள்?

  நிறைய அறிமுக இயக்குனர் படத்தில் நடித்திருக்கிறேன். அனுபவம் வாய்ந்த இயக்குனர் படத்திலும் நடித்திருக்கிறேன். புதுமுகம், அனுபவம் எல்லாம் முக்கியம் இல்லை. அவர்கள் கதை, திரைக்கதை எப்படி சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அதில் கார்த்திக் நரேன் கதை எனக்கு பிடித்தது. அதனால் நடிக்க சம்மதித்தேன்.

  பெண் இயக்குனர்கள் பற்றி?

  நிறைய பெண்கள் திரையில் வந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், திரைக்கு பின்னாலும் அவர்கள் வர வேண்டும். பெண் விநியோகஸ்தர், பெண் கேமராமேன், இயக்குனர்கள் வர வேண்டும்.  கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் எப்போது பார்க்கலாம்?

  கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நம்பிக்கை இல்லை. நல்ல படம், கெட்ட படம் அவ்வளவுதான். வலிமை மற்றும் புத்திசாலித்தனம் எனக்கு முக்கியம்.

  அடுத்தடுத்த படங்கள்?

  தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறேன். விரைவில் இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நரகாசூரன்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Naragasooran
  கார்த்திக் நரேன் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான படம் துருவங்கள் 16. கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டு உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. 

  இதில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ரோன் ஈதன் யோகன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.  தற்போது பின்னணி வேலைகள் முடிந்து தணிக்கை குழுவிற்கு படம் அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில், ரஜினி, விஜய்யுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா, சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம் இருப்பதாக கூறியிருக்கிறார். #Shriya
  வெளிநாட்டு காதலரை காதல் திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். தனக்கு முக்கியத்துவம் தரும் கதைகளாக கேட்டுவரும் ஸ்ரேயா தமிழ் சினிமாவை சாடியுள்ளார். 

  ‘என்னைத் தேடி பல பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் கதை பிடிக்காமல் தவிர்த்துவிடுகிறேன். எல்லா படங்களிலுமே ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது. நடிகைகளின் முக்கியத்துவம் குறைவாக உள்ளது.  கதை சொல்லும்போது பெரிதாக தெரியும் கதாபாத்திரம் படம் வரும்போது சிறியதாக மாறிவிடுகிறது. தமிழை விட தெலுங்கில் தான் எனக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைத்தன’ என்று கூறியிருக்கிறார். ஸ்ரேயா தமிழில் ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் உட்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா, தற்போது சமந்தா வழியை பின்பற்ற இருக்கிறார். #Shriya #ShriyaSaran
  தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரேயா. ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் படங்களிலும் நடித்தார். தற்போது தமிழில் அரவிந்த் சாமியுடன் ‘நரகாசுரன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

  இந்நிலையில், திடீரென்று திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தாவை போல ஸ்ரேயா மீண்டும் நடிக்க வருகிறார்.   தற்போது பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். பாலகிருஷ்ணாவுடன் ஏற்கனவே கவுதமபுத்ர சாதகர்ணி, பைசா வசூல் என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இப்படம் மூலம் மூன்றாவது முறையாக இணைகிறார்.
  ×