என் மலர்

  நீங்கள் தேடியது "Aathmika"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மீசைய முறுக்கு படம் மூலம் அறிமுகமான நடிகை ஆத்மிகா, தன்னை கேலி செய்தவருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். #Aathmika
  மீசைய முறுக்கு படம் மூலம் அறிமுகமானவர் ஆத்மிகா. சினிமாவில் ஆண் நடிகர்கள் பெண் வேடமிட்ட கதாபாத்திரங்களின் முகங்களை வைத்து ஆத்மிகாவின் புகைப்படத்தையும் சேர்த்து கிண்டலாக `பெண்கள் தின வாழ்த்துகள்’ என்று பதிவிட்டு ஒரு மீம் தயார் செய்துள்ளனர்.

  இந்த மீமை தன் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு மீமை தயாரித்தவருக்கு ஒரு கடுமையான பதிவை ஆத்மிகா பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில்,  இதுபோல் அசிங்கமான சிந்தனையோட உன்னைச் சிறு வயதிலிருந்து இப்படி வளர்க்கப்பட்டு இருக்கிறாயே என்று வருத்தப்படுகிறேன். கடவுள் எங்களைப் படைத்த விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஒவ்வொருவரும் அவரவர் விதத்தில் அழகுதான். ஆண்களை அவர்களின் தோற்றத்தை வைத்து நாங்கள் மதிப்பிடுவதில்லை. உங்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துகள்’’ எனப் பதிவிட்டிருந்தார். ஆத்மிகாவுக்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் `கண்ணை நம்பாதே' படத்தின் படப்பிபை்பு இன்று துவங்குகிறது. #KannaiNambathe #UdhayanidhiStalin #Aathmika
  சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் `கண்ணே கலைமானே' படம் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உதயநிதி தனது அடுத்த படத்தை துவக்கியிருக்கிறார்.

  சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்திற்கு கடந்த வாரம் பூஜை போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு இன்று துவங்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.

  `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய மு.முாறன் இயக்கும் இந்த படத்திற்கு `கண்ணை நம்பாதே' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சதீஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


  லிபி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். #KannaiNambathe #UdhayanidhiStalin #Aathmika

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய படத்திற்கு `கண்ணை நம்பாதே' என்று தலைப்பு வைத்துள்ளார்கள். #KannaiNambathe #UdhayanidhiStalin #Aathmika
  உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் `கண்ணே கலைமானே' பிப்ரவரி 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உதயநிதி தனது அடுத்த படத்தை துவக்கியிருக்கிறார்.

  `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய மு.முாறன் இயக்கும் இந்த படத்திற்கு `கண்ணை நம்பாதே' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தின் பூஜை நேற்று போடப்பட்ட நிலையில், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.  இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சதீஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. வி.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். #KannaiNambathe #UdhayanidhiStalin #Aathmika

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘சீதக்காதி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இருக்கும் இயக்குநர் டீகே, தான் படங்களை இயக்கவே விரும்புவதாக கூறினார். #Katteri #Deekay
  ‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே ‘காட்டேரி ’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அத்துடன் விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி’  படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார்.

  நடிகராக அறிமுகமானது பற்றி?

  நடிப்பது, இயக்குவதை விட கடினமாகவே இருந்தது. என்னை நடிகராக்கியதில் முழு பங்கும் இயக்குநர் பாலாஜி தரணிதரனையே சாரும். தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டவிரும்பவில்லை. நண்பருக்காகவே ‘சீதக்காதி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். தொடர்ந்து இயக்குவதில் தான் கவனம் செலுத்தி வருகிறேன். அதே சமயத்தில் பாலாஜி போன்ற என்னுடைய நண்பர்கள் அவர்களின் படத்தில் நடிக்க வாய்ப்பளித்தால் நடிப்பை தொடரலாம்.  காட்டேரி எப்படி வந்திருக்கிறது?

  ரொம்ப அற்புதமாக வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் என்னுடைய முதல் படம் காட்டேரி என்று கூட சொல்லலாம். இதனை சாதாரண ஹாரர் படமென்றோ, காமெடி கலந்த ஹாரர் படமென்றோ நினைத்துவிட வேண்டாம். அதையும் கடந்து ரசிகர்களை கவரக்கூடிய வித்தியாசமான அம்சம் ஒன்று படத்தில் இடம்பெற்றிருக்கிறது. படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

  ‘காட்டேரி’ படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ்.என்.பிரசாத் இசையமைத்திருக்கிறார். #Katteri #Deekay

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி.கே. இயக்கத்தில் வைபவ் - வரலட்சமி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பஜ்வா மற்றும் மணாலி ரதோட் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காட்டேரி’ படத்தின் முன்னோட்டம். #Katteri #Vaibhav
  ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’.

  இதில் வைபவ் நாயகனாக நடிக்க, வரலட்சமி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பஜ்வா மற்றும் மணாலி ரதோட் நாயகிகளாக நடிக்கின்றனர். கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூடியூப் ’ புகழ் சாரா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.   ஒளிப்பதிவு - விக்கி, இசை - எஸ்.என்.பிரசாத், படத்தொகுப்பு - பிரவீன்.எச்.எல்., சண்டைப்பயிற்சி - டான் அசோக், ஆடை வடிவமைப்பு - குஷ்பு பானர்ஜி, தயாரிப்பு - ஸ்டூடியோ கிரீன், தயாரிப்பாளர் - கே.இ.ஞானவேல்ராஜா கலை - செந்தில், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - டீகே.

  காமெடி கலந்த திகில், திரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில், படத்தை விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. #Katteri #Vaibhav

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆத்மிகா நடித்துள்ள நரகாசூரன் படம் ஒரு வழக்கமான படமாக இருக்காது என்று சந்தீப் கிஷன் கூறியுள்ளார். #Naragasooran #SundeepKishan
  சந்தீப் கி‌ஷன் நடிப்பில் நரகாசூரன் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அவரிடம் பேசியதில் இருந்து...

  பாடல்கள், சண்டை என்று வழக்கமான படமாக இருக்காது. இந்த படம் பார்த்த அனுபவமே வேறு மாதிரியாக இருக்கும். படத்தை தியேட்டரில் பார்த்தால் மட்டும் தான் அந்த அனுபவம் கிடைக்கும். எனக்கு மட்டுமல்ல அரவிந்த்சாமி, ஸ்ரேயா, ஆத்மிகா என அனைவருக்குமே முக்கிய படமாக இருக்கும். நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும்.

  தமிழில் 4 படங்கள் தான் நடித்துள்ளேன். ரசிகர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த தான் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கிறேன். அஜித், விஜய் படத்துக்கும் எனக்கும் ஒரே விலை டிக்கெட் தான். என்னை போன்ற வளரும் நடிகர்கள் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். நான் பிறந்தது வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில் தான். வாய்ப்பு தேடும்போது தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லா மொழிகளிலுமே தேடினேன். தெலுங்கில் கிளிக் ஆனது. ஐதராபாத் சென்றால் தமிழ் பையனாக பார்க்கிறார்கள். சென்னை வந்தால் தெலுங்கு நடிகராக பார்க்கிறார்கள். என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று காத்திருக்கிறேன்.

  தெலுங்கில் பெரிய போட்டி இருக்குமே... எப்படி ஜெயித்தீர்கள்?

  எனக்கு அப்படி தெரியவில்லை. நாம் நேர்மையாக இருந்து கடினமாக உழைத்தால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும். எனக்கு பிறகு வந்தவர்கள் தான் விஜய்சேதுபதியும், சிவகார்த்திகேயனும். ஆனால் எனக்கு முன்பு இருந்தே அவர்கள் தங்கள் கடின உழைப்பை கொட்டியிருக்கிறார்கள். அதுதான் அவர்களின் வெற்றிக்கு காரணம். சினிமாவில் நேரம் முக்கியம்.  தெலுங்கில் இந்தி இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் நடிக்கிறேன். தமன்னா எனக்கு ஜோடியாக நடிக்கிறார். திருடன் போலீஸ் இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ஒரு படம் சென்று கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் என்று கட்டுப்பாடு வைத்துள்ளேன்.

  அதிகமாக நண்பர்கள் இல்லாமல் தனியாக இருக்கிறீர்களே?

  எனக்கு மது பழக்கம் இல்லை. அதனால் பார்ட்டிகளில் என்னை பார்க்க முடியாது. விஷால் என் உடன் பிறக்காத அண்ணன். சித்தார்த், விஷ்ணு என சில நண்பர்கள் இருக்கிறார்கள். வரு சரத்குமார், ராகுல் ரவீந்தர், தமன்னா, ரெஜினா என்று நண்பர்கள் பட்டியல் கொஞ்சம் நீளும் என்றார். #Naragasooran #SundeepKishan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேய் இருப்பதாக நம்பி தான் தங்கி இருந்த ஓட்டல் ஊழியர்களிடம் நரகாசூரன் நடிகை ஆத்மிகா ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார். #Aathmika
  ‘துருவங்கள் பதினாறு’ பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி உள்ள திரைப்படம் நரகாசூரன். சஸ்பென்ஸ் திரில்லர் வகை படமான இதில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கி‌ஷன், ஆத்மிகா, இந்திரஜித் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

  படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சந்தீப் கி‌ஷன் பேசியதாவது “கதையே கேட்காமல் நான் ஒப்புக்கொண்ட முதல் படம் நரகாசூரன். நான் பொறியியல் படிப்பில் சேர்ந்துவிட்டு பின்னர் நடிகனாக போகிறேன் எனக் கூறி பாதியில் நின்றபோது, படிக்காமல் இருக்கதான் நான் இந்த காரணத்தை கூறுகிறேன் என என் பெற்றோர் நினைத்தனர். ஆனால் நான் தற்போது நடிகனாக இருப்பதை நினைத்து அவர்கள் பெருமைபடுகின்றனர். நல்லவேளை அன்று நீ எனது பேச்சை கேட்கவில்லை என்று என் தந்தை கூறினார்.

  கார்த்திக் நரேன் ஒரு பெர்பெக்ட்டான இயக்குனர். மிக தெளிவாக திரைக்கதையை உருவாக்கி எங்களிடம் வேலை வாங்கினார். படப்பிடிப்பின் போது நானும் இந்திரஜித்தும் சேர்ந்து நடிகை ஆத்மிகாவை கிண்டல் செய்து கொண்டே இருந்தோம். ஒரு நாள் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் பேய் இருப்பதாக கிளப்பிவிட்டோம்.  அதை நம்பி பயந்துபோன அவர் ஓட்டல் ஊழியர்களை எல்லாம் வரவழைத்து ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார். படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார். நரகாசூரன் படம் வரும் 31 ம் தேதி வெளியாக இருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `நரகாசூரன்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #Naragasooran
  `துருவங்கள் பதினாறு' படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `நரகாசூரன்'. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. 

  இதில், இயக்குநர் கார்த்திக் நரேன், நடிகர் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன் மற்றும் ஆத்மிகா கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. மேலும் படம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.   கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரியோ சரண், ஆத்மிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

  ரோன் ஈதன் யோகன் இசையமைக்கும் இந்த படத்தில் பாடல்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. #Naragasooran #AravindSwamy

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நரகாசூரன்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Naragasooran
  கார்த்திக் நரேன் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான படம் துருவங்கள் 16. கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டு உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. 

  இதில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ரோன் ஈதன் யோகன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.  சமீபத்தில் படத்தை பார்த்த குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நரகாசூரன்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Naragasooran
  கார்த்திக் நரேன் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான படம் துருவங்கள் 16. கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டு உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. 

  இதில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ரோன் ஈதன் யோகன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.  தற்போது பின்னணி வேலைகள் முடிந்து தணிக்கை குழுவிற்கு படம் அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வைபவ் நடிப்பில் `ஆர்.கே.நகர்' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், வைபவ் நடிப்பில் உருவாகி வந்த `காட்டேரி' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Katteri #Vaibhav
  ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘காட்டேரி’. ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டீகே இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். 

  அவருக்கு ஜோடியாக வரலட்சமி சரத்குமார் ஆத்மிகா, சோனம் பஜ்வா மற்றும் மணாலி ரதோட் நடிக்கின்றனர். கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூடியூப் ’ புகழ் சாரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். எஸ்.என்.பிரசாத் இசையமைக்கும் இந்த படத்திற்கு விக்கி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விரைவில் துவங்க இருப்பதாகவும், படம் வருகிற அக்டோபரில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

  வைபவ் நடித்துள்ள `ஆர்.கே.நகர்' படம் விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Katteri #Vaibhav

  ×