என் மலர்

  நீங்கள் தேடியது "Latha"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எம்.ஜி.ஆர். - லதாவை உதாரணமாக வைத்து நடிகை கஸ்தூரி தெரிவித்த கருத்துக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று கஸ்தூரி வருத்தம் தெரிவித்துள்ளார். #Kasthuri
  நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது கருத்துகள் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘என்னய்யா இது, பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க.’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விமர்சித்து பதிவு செய்திருந்தார். 

  இதற்கு நடிகை லதா தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். மேலும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


  இந்த நிலையில், இதுகுறித்து கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “எம்.ஜி.ஆர். காதல் காட்சியில் நடித்ததில், கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? இதில் கண்ணியமும், பெண்ணியமும் என்ன கெட்டுவிட்டது? நான் வாத்தியாரின் காதல் ரசம் சொட்டும் பாடல்களை ரசிக்கும் எண்ணற்றவர்களில் ஒருவள். அவரை விமர்சிக்கும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லை.

  இருப்பினும், இதில் யார் மனமும் புண்பட்டிருந்தால், மனமார வருந்துகிறேன்.” என்று கூறியுள்ளார். #Kasthuri #MGR #Latha

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எம்.ஜி.ஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்து நடிகை லதா அறிக்கை வெளியிட்டுள்ளார். #Latha #Kasthuri
  நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘என்னய்யா இது, பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க.’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விமர்சித்து பதிவு செய்திருந்தார். இதற்கு பல கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், நடிகை லதா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 

  எம்.ஜி.ஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

  “நான் 50 வருஷமா நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன். ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை. தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா..?  கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே.. அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே..? எதுக்கு நானும், எம்.ஜி.ஆர் நடிச்ச படத்தைச் சொல்லணும்.

  அவங்கதான் எதுக்கெடுத்தாலும் பெண்ணியம்.. அது… இதுன்னு கருத்துச் சொல்லிட்டிருக்காங்களே.. இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா.. ஒரு பொண்ணே, இன்னொரு பொண்ணை பொதுவெளில அவமானப்படுத்துற மாதிரி பேசலாமா..? கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி.

  இதற்கு நடிகர் சங்கத்தில் இருந்து கண்டன கடிதம் அனுப்பி உள்ளதாக என்னிடம் சொன்னார்கள் அவர்களுக்கு மிக்க நன்றி. அதுமட்டும் இல்லாமல் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களிலும் இருந்து கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். 

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எம்.ஜி.ஆரின் வாழ்க்கை இளைஞர்களுக்கு பாடம் என்று நடிகை லதா எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியிருக்கிறார். #MGR
  மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு ‘எம்.ஜி.ஆர்’ என்ற பெயரிலேயே திரைப்படமாக உருவாகிறது. காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை “காமராஜ்“ என்ற பெயரில் படமாக தயாரித்து வெளியிட்ட பாலகிருஷ்ணன் ‘எம்.ஜி.ஆர்’ படத்தை இயக்கி தயாரிக்கிறார்.

  எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். அவரது மனைவி ஜானகியாக ரித்விகா நடிக்கிறார்.

  எம்.ஆர்.ராதாவாக பாலா சிங், டைரக்டர் பி.ஆர்.பந்துலுவாக ஒய்.ஜி.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீன தயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி ஆகியோர் நடிக்கின்றனர்.

  ‘எம்.ஜி.ஆர்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் டிரெய்லரை முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே வெளியிட சைதை துரைசாமி பெற்றுக்கொண்டார். சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நடிகை லதா பேசும்போது,

  ‘எத்தனையோ நடிகர்களும் தலைவர்களும் வருகிறார்கள். போகிறார்கள். நானும் எத்தனையோ பேருடன் பழகி இருக்கிறேன். ஆனால் எம்.ஜி.ஆருக்கு ஈடாக யாரும் வர மாட்டார்கள். அவர் பாமரனின் நெஞ்சங்களில் இடம்பெற்றவர். மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்கள் அவரை மறக்கவில்லை.

  அவர் தன்னை பெரிய அறிவாளியாகவோ புலமை வாய்ந்தவராகவோ காட்டிக்கொண்டதில்லை. படத்தில் சொன்ன கொள்கைகள்படி வாழ்ந்து காட்டியவர். எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். எனவே இந்த படம் காலத்தின் தேவை. அவரது வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கும். என்று நடிகை லதா பேசினார்.
  ×