நடிகை லதாவிற்கு கவுரவம் அளித்த ஐக்கிய அமீரகம்

தமிழ் திரையுலகின் மூத்த நடிகையாக இருப்பவர் லதா.இவர் தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
லதா
லதா
Published on

ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.

கோல்டன் விசா பெற்ற நடிகை லதா

இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு, சரத்குமார், கமல்ஹாசன், விக்ரம், யுவன் ஷங்கர் ராஜா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

கோல்டன் விசா பெற்ற நடிகை லதா

இந்நிலையில், தமிழ் திரையுலகின் மூத்த நடிகையான லதா தற்போது கோல்டன் விசா பெற்றுள்ளார். திரையுலகில் ஐம்பது ஆண்டு சாதனைகளை கவுரவிக்கும் வகையில் இந்த விசாவை வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com