மாதம்பட்டி ரங்கராஜின் அடுத்த படம் - வெளியான போஸ்டர்

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆத்மிகா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்இப்படத்தை அறிமுக இயக்குநரான லதா மணியரசு இயக்குகிறார்.
மாதம்பட்டி ரங்கராஜின் அடுத்த படம் - வெளியான போஸ்டர்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் யோகி பாபு ஒருவர். சமீபத்தில் வெளியான ஜவான் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்திலும் ரஜினிகாந்தை கலாய்த்தும், கிண்டல் செய்தும் மக்கள் மனதை கவர்ந்திருப்பார்.

யோகி பாபுவிற்கு பலப்படங்கள் லைன் அப்பில் இருந்தாலும். அதில் ஒன்று அவர் நடித்து வெளிவரப் போகும் படம் "மிஸ் மேகி." இதில் அவர் வயதான பெண்மணி வேடத்தில் நடித்து இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடைந்தது.

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆத்மிகா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநரான லதா மணியரசு இயக்குகிறார். இவர் செல்வராகவன் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாதம்பட்டி ரங்கராஜிற்கு வாழ்த்து சொல்லி படக்குழுவினர் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com