என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajinikant"

    • சங்ககாரா வழிநடத்தலில் ராஜஸ்தான் அணி கடந்த 4 சீசன்களில் 2 முறை பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.
    • குமார் சங்ககாராவை தலைமை பயிற்சியாளராக ராஜஸ்தான் ராயல்ஸ் மீண்டும் நியமித்துள்ளது.

    இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககரா மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    2021 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் தனது பயணத்தை தொடங்கிய சங்ககரா வழிநடத்தலில் சஞ்சு சாம்சன் தலைமையிலான அணி கடந்த நான்கு சீசன்களில் இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    இருப்பினும் 2024 உலகக்கோப்பை வெற்றிக்கு இந்திய அணியை வழிநடத்திய பயிற்சயாளர் ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரானார்.

    ஆனால் சஞ்சு சாம்சனுடன் ஏற்பட்ட பகைமை வதந்திகளை தொடர்ந்து அண்மையில் ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியை துறந்தார்.

    இதனால் 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்த மீண்டும் குமார் சங்ககாராவையே தலைமை பயிற்சியாளராக ராஜஸ்தான் ராயல்ஸ் நியமித்துள்ளது.

    தலைமை பயிற்சியாளராக சங்ககாரா நியமிக்கப்பட்டதற்கு சிறப்பு AI வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

    ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் காரில் இருந்து இறங்கி மாஸாக நடந்து காட்சியை AI மூலமாக சங்ககாரா நடந்து வருவது போல எடிட் செய்துள்ளனர். ஹுகும் பாடலின் இந்தி வெர்சனை இந்த எடிட் வீடியோவிற்கு பயன்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    • ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளார்.
    • 1997ல் ரஜினிகாந்தின் 'அருணாச்சலம்' படத்தை இயக்கியவர் சுந்தர்.சி.

    தமிழ் சினிமாவின் மூத்த முன்னணி ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. பின்னர் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இதை உறுதிப்படுத்தினர்.

    அதன்படி, ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

    கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படமாக இது அமைய உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கவுள்ளது. இந்நிலையில் படத்தின் துவக்கம் தொடர்பாக ரஜினி- கமல் - சுந்தர்.சி சந்தித்த வீடியோவை தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.

    இப்படம் 2027 பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    1997ல் ரஜினிகாந்தின் 'அருணாச்சலம்' படத்தை இயக்கிய சுந்தர்.சி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினியின் 173வது படத்தை இயக்க உள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கமல் ஹாசனின் அன்பே சிவம் படத்தையும் சுந்தர் சி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.  

    ரஜினி- கமல் கூட்டணியில் வெளியாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.

    இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. பின்னர் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இதை உறுதிப்படுத்தினார்.

    ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குவார் என்று தகவல் வெளியானது. இப்படத்தின் கதையை எழுதுவதற்கு நெல்சனுக்கு நேரம் தேவைப்படுவதால் 2027 இல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை கமல்ஹாசனே தயாரிப்பார் என்று சொல்லப்பட்டது.

    இதற்கிடையே, ரஜினி- கமல் கூட்டணியில் வெளியாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

     அதன்படி, ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

    இத்தகவலை ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ரஜினி- கமல்- சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் அறிவிப்பு ரசிகர்களை குதூகலப்படுத்தி உள்ளது.

    1997ல் ரஜினிகாந்தை முதல் முறையாக 'அருணாச்சலம்' படத்திற்காக இயக்கிய சுந்தர்.சி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினியின் 173வது படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

     

    • ரஜினிகாந்த் தனது பயணங்களை முடித்துக் கொண்டு, விமானம் மூலம் இன்று இரவு சென்னை திரும்பினார்.
    • உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார்.

    இமயமலைக்கு ஆன்மிக யாத்திரை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு பல்வேறு இடங்களை பார்வையிட்டு வந்தார்.

    அப்போது, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.

    நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த செயல் சர்ச்சைக்குள்ளானது. பல்வேறு தரப்பினரிடையே இதுகுறித்து விமர்சனங்கள் எழும்பியது.

    அதனைத்தொடர்ந்து அயோத்தி சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள அனுமன் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் ரஜினிகாந்த் அயோத்தியில் ராமர் கோவில் அமையவுள்ள இடத்துக்கு, தனது மனைவி லதாவுடன் சென்றார். அங்கு கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள மதகுருமார்களை சந்தித்து ஆசி பெற்றார். மேலும் அங்கு ராமர் தரிசனமும் செய்தார்.

    ரஜினிகாந்த் தனது பயணங்களை முடித்துக் கொண்டு, விமானம் மூலம் இன்று இரவு சென்னை திரும்பினார்.

    அப்போது, நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "ஜெயிலர் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய என்னை வாழ வைத்த செய்வங்களான தமிழ் மக்களுக்கும், உலகின் அனைத்து மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வயது குறைவாக இருந்தாலும் சன்னியாசியாக இருந்தால் காலில் விழுவேன்" என்றார்.

    • இன்று 3- வது நாள் விருந்து நிகழ்ச்சி நடந்து வருகிறது
    • மனைவி லதா மகள் ஐஸ்வர்யா ஆகியோருடன் ரஜினிகாந்த் குஜராத் ஜாம்நகருக்கு சென்றார்

    'ரிலையன்ஸ்' நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி- நீட்டா தம்பதிகளின் இளையமகன் ஆனந்த்அம்பானி -ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வருகிற ஜூலை 12- ந்தேதி நடக்கிறது.

    இந்த திருமணத்தை முன்னிட்டு குஜராத் ஜாம்நகரில் ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் 3 நாட்கள் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து நிகழ்ச்சி நடந்து வருகிறது.இந்தவிழாவில் பாலிவுட் பிரபலங்களின் கலைநிகழ்ச்சியில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றனர்.

    இதில் இந்திபட சூப்பர் ஸ்டார்கள்ஷாருக்கான்,சல்மான்கான் மற்றும் அமீர்கான் கலந்து கொண்டு ஒரே மேடையில் நடனம் ஆடினார்கள்.

    இன்று 3- வது நாளாக நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த்,மகள் ஐஸ்வர்யா ஆகியோர் குஜராத் ஜாம் நகருக்கு விமானத்தில் சென்றனர்.

    • தனது முதல் நாள் வேட்டையன் படப்பிடிப்பு தொடங்கியது என்று பதிவு.
    • ஃபாஹத் ஃபாஸில் இதில் ஒரு ரோல் செய்கிறார் என்ற தகவல்.

    நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் தனது 170-வது படமான வேட்டையன் திரைப்படம், லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. ஜெய் பீம் படம் இயக்கிய டீ ஜே ஞானவேல் தான் இத்திரைபடத்தையும் இயக்குகிறார்.

    இப்படத்திற்க்கு மக்கள் இடையே மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ரஜினிகாந்த் இத்திரைப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். ஃபாஹத் ஃபாஸில் இதில் ஒரு ரோல் செய்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.

    இப்போது ராணா தகுபதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று தனது முதல் நாள் வேட்டையன் படப்பிடிப்பு தொடங்கியது என்று பதிவிட்டுள்ளார். இதன் மூல அவர் வேட்டையன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இருப்பார் என்று எதிர் பார்க்கபடுகிறது.


    • நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார்.
    • சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை சீமான் சந்தித்தார்.

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சந்தித்தார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை சீமான் சந்தித்தார்.

    தனது பிறந்தநாளன்று நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க சீமான் நேரம் கேட்டிருந்தார். ஆனால், அன்றைய தினம் படப்பிடிப்பு காரணமாக சந்திக்க முடியவில்லை. இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்தை சீமான் இன்று சந்தித்துள்ளார். இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ரஜினிகாந்த் பிறந்த நாள் அன்று கூலி படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் எனத் தகவல்.
    • அதனுடன் ஜெயலர் 2 ப்ரோமோவும் வெளியாகும என எதிர்பார்க்கப்படுகிறது.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது. இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க, கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.

    இந்த படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என ஏற்கனவே நெல்சன் தெரிவித்திருந்தார். இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    டிசம்பர் 12-ந்தேதி ரஜினிகாந்த் பிறந்த நாள் ஆகும். அன்றைய தினம் "ஜெய்லர் 2" படத்திற்கான ப்ரோமோவை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான "ப்ரோமோ சூட்" டிசம்பர் 5-ந்தேதி தொடங்கும் என தகவல் கசிந்துள்ளது. EVP-ல் அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடத்து வருகிறார். இந்த படம் தொடர்பான புது அப்டேட்டும் அன்றைய தினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் பிறந்தநாள் அன்று இரண்டு படங்களின் சூப்பர் அப்டேட் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமைய இருக்கிறது.

    ஜெய்லர் படத்தில் ரஜியுடன் வினாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகிபாபு, மோகன்லால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×