ரஜினியின் 173-வது படத்தை தயாரிக்கும் கமல்.. இயக்குநர் யார் தெரியுமா?- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

ரஜினி- கமல் கூட்டணியில் வெளியாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
ரஜினியின் 173-வது படத்தை தயாரிக்கும் கமல்.. இயக்குநர் யார் தெரியுமா?- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
Published on

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.

இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. பின்னர் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இதை உறுதிப்படுத்தினார்.

ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குவார் என்று தகவல் வெளியானது. இப்படத்தின் கதையை எழுதுவதற்கு நெல்சனுக்கு நேரம் தேவைப்படுவதால் 2027 இல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை கமல்ஹாசனே தயாரிப்பார் என்று சொல்லப்பட்டது.

இதற்கிடையே, ரஜினி- கமல் கூட்டணியில் வெளியாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

 அதன்படி, ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

இத்தகவலை ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ரஜினி- கமல்- சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் அறிவிப்பு ரசிகர்களை குதூகலப்படுத்தி உள்ளது.

1997ல் ரஜினிகாந்தை முதல் முறையாக 'அருணாச்சலம்' படத்திற்காக இயக்கிய சுந்தர்.சி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினியின் 173வது படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com