தலைவர்- 170 படத்தில் இணைந்தார் ராணா டகுபதி

தனது முதல் நாள் வேட்டையன் படப்பிடிப்பு தொடங்கியது என்று பதிவு.ஃபாஹத் ஃபாஸில் இதில் ஒரு ரோல் செய்கிறார் என்ற தகவல்.
தலைவர்- 170 படத்தில் இணைந்தார் ராணா டகுபதி
Published on

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் தனது 170-வது படமான வேட்டையன் திரைப்படம், லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. ஜெய் பீம் படம் இயக்கிய டீ ஜே ஞானவேல் தான் இத்திரைபடத்தையும் இயக்குகிறார்.

இப்படத்திற்க்கு மக்கள் இடையே மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ரஜினிகாந்த் இத்திரைப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். ஃபாஹத் ஃபாஸில் இதில் ஒரு ரோல் செய்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.

இப்போது ராணா தகுபதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று தனது முதல் நாள் வேட்டையன் படப்பிடிப்பு தொடங்கியது என்று பதிவிட்டுள்ளார். இதன் மூல அவர் வேட்டையன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இருப்பார் என்று எதிர் பார்க்கபடுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com