என் மலர்

  நீங்கள் தேடியது "Aishwarya"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 3.
  • 3 திரைப்படம் தெலுங்கில் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான படம் '3'. இந்த படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 2012-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மூலம் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதில் இடம்பெற்ற, 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


  இந்த நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு தற்போது '3' படத்தின் தெலுங்கு பதிப்பை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மறு வெளியீடு செய்துள்ளனர். அங்கு இந்த படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் ஒரு பாடலை திரையரங்கில் இருக்கும் அனைவரும் பாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

  மேலும் திரையரங்குகளில் 200-க்கும் மேற்பட்ட காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி தெலுங்கு திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் தற்போது நடித்து வரும் வாத்தி படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகிறது. '3' படத்தின் வெற்றியால் தெலுங்கில் வாத்தி படத்துக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐஸ்வர்யாவும் தனுஷும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.
  • இருவரும் பிரிவதாக அறிவித்த பிறகு தனது மகன்களுக்காக இருவரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.

  நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனுஷும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் நாள் திருமணம் செய்துக் கொண்டனர். மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் யாத்ராவுக்கு 15 வயது ஆகிறது.

   

  தனுஷ் - ஐஸ்வர்யா

  தனுஷ் - ஐஸ்வர்யா

  சமீபத்தில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும், இனிமேல் இருவரும் தனித்தனி பாதைகளில் பயணிக்கப்போவதாகவும் அறிவித்த்திருந்தனர். விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் தனுஷ் பெயரை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியிருந்தார்.

   

  தனுஷ் - ஐஸ்வர்யா

  தனுஷ் - ஐஸ்வர்யா

  இந்நிலையில் இருவரின் பிரிவிற்கு பிறகு மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சிக்கு முதல் முறையாக இருவரும் ஒன்றாக வந்தனர். இவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று எதிர்ப்பார்த்திருந்த ரசிகர்களுக்கு தனது மகனுக்காக இருவரும் ஒன்று சேர்ந்திருப்பதை ரசிகர்கள் வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.
  • தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  நடிகர் தனுஷ், நடிகை அமலா பால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் 'வேலையில்லா பட்டதாரி'. இந்த படத்தை வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக நடிகர் தனுசும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் உள்ளனர். 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. அப்போது புகை பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்ற அறிவிப்பு அந்த காட்சியில் இடம்பெறவில்லை.

   

  தனுஷ் - வேலையில்லா பட்டதாரி

  தனுஷ் - வேலையில்லா பட்டதாரி

  இதையடுத்து நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துதுறை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நடிகர் தனுசுக்கும், அவரது மனைவி ஐஸ்வர்யா தனுசுக்கும் சைதாப்பேட்டை கோர்ட்டு சம்மன் அனுப்பியது.

   

  தனுஷ் - ஐஸ்வர்யா

  தனுஷ் - ஐஸ்வர்யா

  இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஐஸ்வர்யா வழக்கு தொடர்ந்தார். அதில் தனக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும். சைதாப்பேட்டை கோர்ட்டில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதையடுத்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஐஸ்வர்யா நேரில் ஆஜராக விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டப்பட்டது.

   

  தனுஷ் - ஐஸ்வர்யா

  தனுஷ் - ஐஸ்வர்யா

  இந்நிலையில் இதே கோரிக்கையுடன் நடிகர் தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரனைக்கு வந்தது. தனுஷ் தரப்பு வழக்கறிஞர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தனுஷ் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். மேலும் தனுஷ், ஐஸ்வர்யா இரண்டு பேரின் வழக்கையும் ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.
  • தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  நடிகர் தனுஷ், நடிகை அமலா பால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் 'வேலையில்லா பட்டதாரி'. இந்த படத்தை வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக நடிகர் தனுசும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் உள்ளனர். இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. அப்போது புகை பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்ற அறிவிப்பு அந்த காட்சியில் இடம்பெறவில்லை.


  இதையடுத்து நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துதுறை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நாளை(வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும் என்று நடிகர் தனுசுக்கும், அவரது மனைவி ஐஸ்வர்யா தனுசுக்கும் சைதாப்பேட்டை கோர்ட்டு சம்மன் அனுப்பியது.


  இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தனுஷ், ஐஸ்வர்யா தனியாக வழக்கு தொடர்ந்து உள்ளனர். அதில் தனக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும். சைதாப்பேட்டை கோர்ட்டில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.


  இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து சைதாப்பேட்டை கோர்ட்டில் தனுஷ், ஐஸ்வர்யா நேரில் ஆஜராக விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சக்திவாசன் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகும் ‘நாயே பேயே’ படத்தின் முன்னோட்டம்.
  கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் மற்றும் கலை தி ஆர்ட் புரொடக்ஷன்ஸ் டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கலையரசி சாத்தப்பன் இணைந்து தயாரிக்கும் படம் ‘நாயே பேயே’.

  நடன இயக்குனர் தினேஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா நடிக்க, இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

  ஒளிப்பதிவு - நிரன் சந்தர், இசை - என்.ஆர்.ரகுநந்தன், கலை - சுப்பு அழகப்பன், படத்தொகுப்பு - கோபி கிருஷ்ணா, நிர்வாக தயாரிப்பாளர் - சக்கரத்தாழ்வார், ஆக்சன் - ஸ்டான்ட் ஜி.என், நடனம்  தினேஷ், தினா, இணை இயக்குனர் - வே.செந்தில்குமார், தயாரிப்பு மேற்பார்வை - அஸ்கர் அலி, விஜயகுமார், தயாரிப்பு - கோபி கிருஷ்ணா, கலையரசி சாத்தப்பன், டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சக்திவாசன்  இயக்குனர் சக்திவாசன் படம் பற்றி கூறியதாவது:-

  ‘‘நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன், அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கிறான்.

  இந்த நிலையில், அவன் ஒரு பெரிய திருட்டில் ஈடுபட்டு வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆக விரும்புகிறான். அவனுக்கு அந்த சந்தர்ப்பம் அமைந்ததா, அதில் அவன் வெற்றி பெற்றானா? என்பதே இந்த படத்தின் கதை என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சக்திவாசன் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகும் ‘நாயே பேயே’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
  ‘குப்பை கதை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடன இயக்குநர் தினேஷ். யதார்த்மான கதையம்சத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது மற்றுமொரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

  ‘நாயே பேயே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சக்திவாசன் இயக்குகிறார். ஐஸ்வர்யா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், சாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

  நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார்.  இயக்குனர் சக்திவாசன் படம் பற்றி கூறியதாவது:-

  ‘‘நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன், அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கிறான்.

  இந்த நிலையில், அவன் ஒரு பெரிய திருட்டில் ஈடுபட்டு வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆக விரும்புகிறான். அவனுக்கு அந்த சந்தர்ப்பம் அமைந்ததா, அதில் அவன் வெற்றி பெற்றானா? என்பதே இந்த படத்தின் கதை.

  கோபி கிருஷ்ணா, கலைஅரசி சாத்தப்பன், டாக்டர் ரேவதி ரெங்கசாமி ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கனா படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய முயற்சி ஒன்றை எடுத்து வருகிறார். #AishwaryaRajesh #Aishwarya
  கனா படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேசை நோக்கி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் தேடி வருகின்றன. விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கும் படத்தில் முதலில் ஐஸ்வர்யாவை நடிக்க வைத்தார்கள்.

  அடுத்து தெலுங்கில் இன்னொரு கதையையும் ஓகே செய்து முடித்திருக்கிறார். கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்தது போல, இந்தப் படத்தில் மல்யுத்த வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தனது கிராமத்தினரின் கனவை நனவாக்க மல்யுத்த வீராங்கனையாக களமிறங்கும் கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இதற்காக மல்யுத்த பயிற்சி எடுத்து வருகிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மலையாளத்தில் நிவின் பாலி, பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி தற்போது தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #AishwaryaLakshmi
  மலையாளம், தெலுங்கு, கன்னடம் திரையுலகில் ஏதேனும் ஒன்றில் அறிமுகமாகும் நாயகிகளின் அடுத்த இலக்கு தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைப்பதாகத்தான் இருக்கும்.

  நயன்தாரா முதல் லட்சுமி மேனன் வரை உதாரணங்கள் கூறலாம். மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் இதில் சேர்ந்து இருக்கிறார். நிவின்பாலி நடித்த ‘நிஜாண்டுகலுதே நாட்டில் ஓரிடவேளா’ படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா அதைத் தொடர்ந்து மாயநதி படத்தின் மூலம் மலையாள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

  பகத் பாசிலுக்கு ஜோடியாக அவர் நடித்துவரும் வரதன் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இரண்டு மலையாளப் படங்களில் கவனம் செலுத்திவரும் இவர், தற்போது தமிழ்த் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா ஜோடி சேர்ந்து பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க உள்ளார்கள்.  இந்தப் படத்தில் இரண்டாவது நாயகியாக ஐஸ்வர்யா லெட்சுமியும் இணைந்துள்ளார். குடும்ப பாங்கான அமைதியான கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழில் ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் இருக்கும் நிலையில் புதிதாக ஐஸ்வர்யா லட்சுமி இணைந்திருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக அழகியாக பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய், தற்போதும் நான் அழகாக இருக்கும் ரகசியத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார். #AishwaryaRai
  ஐஸ்வர்யா ராய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பானி கான் படம் சரியாக போகவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து குலாப் ஜாமூன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

  8 ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யாவும் அபிஷேக்கும் சேர்ந்து நடிப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஐஸ்வர்யா ராய் இந்த வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ரகசியத்தை தெரிவித்துள்ளார்.

  நான் உடற்பயிற்சி செய்வது இல்லை. இயற்கையாகவே என் உடல் இப்படி உள்ளது. எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி நல்லபடியாக உள்ளதால் எடை அதிகரிப்பது இல்லை. நான் சுறுசுறுப்பானவள். அழகுக்காக நான் பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்யவில்லை. என் அழகு இயற்கையானது. என் சுயசரிதையை எழுதுவது பற்றி பலர் என்னிடம் கேட்கிறார்கள்.  அது குறித்து நான் இதுவரை யோசிக்கவே இல்லை’ என்று கூறி இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.
  ×