என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2024"

    • இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உள்ள 21 ஆயிரம் பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு.
    • சுமார் 9 ஆயிரம் குழந்தைகள் இந்த சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர்.

    2023-ம் ஆண்டு முடிவடைந்து 2024-ம் பிறக்க இன்னும் இரண்டு நாட்கள்தான் உள்ளது. உலக நாடுகள் புத்தாண்டை வரவேற்க உள்ளன. நாளைமறுதினம் முதல் உலக நாடுகள் ஒவ்வொன்றாக புத்தாண்டை வரவேற்கும். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தீவுகள் புத்தாண்டை வரவேற்கும்.

    இந்தியா ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புத்தாண்டை கொண்டாட இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் அரைமணி நேரம் கழித்து புத்தாண்டு பிறக்கும். இந்த நிலையில் பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காபந்து (caretaker) பிரதமர் அன்வாருல் ஹக் கக்கர் தடைவிதித்துள்ளார்.

     இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் "பாலஸ்தீனத்தின் துயரமான சூழ்நிலையை மனதில் வைத்து, நமது பாலஸ்தீன சகோதர, சகோதரிகளுக்கு ஒற்றுமையை காட்ட, புத்தாண்டு தொடர்பான எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு கடுமையான தடைவிதிக்கப்படும்.

     விதிமுறை அனைத்தையும் மீறி இஸ்ரேல் படை 21 ஆயிரம் பாலஸ்தனீர்களை கொன்று குவித்துள்ளது. இதில் 9 ஆயிரம் குழந்தைகள் அடங்குவர். அப்பாவி குழந்தைகள் படுகொலை, காசா மற்றும் மேற்கு கரையில் ஆயுதமின்றியுள்ள பாலஸ்தீனர்கள் இனப்படுகொலை ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்களையும், முஸ்லிம் உலகத்தையும் கவலையைில் ஆழ்த்தியுள்ளது " என்றார்.

    • 23 ஆண்டு கழித்து பிரபு தேவாவும், வடிவேலும் சேர்ந்து நடிக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
    • இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கவிருக்கிறார்

    மனதை திருடி விட்டாய் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளி வந்தது. இதில் நடிகர் பிரபு தேவா,வடிவேலு,விவேக்,கவுசல்யா போன்ற பலர் நடித்து இருந்தனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் வரும் அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட்டானது.

    விவேக்,வடிவேலு, பிரபு தேவாவின் காம்போ மக்கள் மனதை அதிகம் கவர்ந்தது. அதில் வரும் சிங் இன் தி ரெயின். வொய் ப்ளட் சேம் ப்ளட், வடிவேலு ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும் நகைச்சுவை காட்சிகள் மிகவும் பிரபலம். இன்று வரை நாம் அனைவராலும் பார்த்து ரசிக்கப் பட்ட காட்சிகள் அவை. இன்றும் அவை இன்ஸ்டாகிராமில் மீம் டெம்ப்லேட்டுகளாக உலாவிக் கொண்டுதான் இருக்கிறது.

    மனதை திருடிவிட்டாய் படத்திற்கு அடுத்து பிரபு தேவாவும், வடிவேலும் இணைந்து படம் நடிக்கவில்லை.

    இவர்கள் இருவரும் சேர்ந்து மீண்டும் படம் நடிக்க மாட்டார்களா என்று ஏக்கம் ரசிகர்களுக்கு இப்போதும் உண்டு.

    இந்நிலையில், 23 ஆண்டு கழித்து பிரபு தேவாவும், வடிவேலும் சேர்ந்து நடிக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு "லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்" என பெயரிட போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    அதிகாரப்பூர்வமான தகவல்கள் கூடிய விரைவிலேயே படகுழுவினரால் அறிவிக்கப்படும் என நம்பபடுகிறது. தற்போது வடிவேலு ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து மாரீசன் எனும் படத்தில் நடித்து வருகிறார். பிரபு தேவா தளபதி விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அறிமுக இயக்குநர் பாஸ்கல் வெப்பம் குளிர் மழை #VKM படத்தை இயக்கவிருக்கிறார்
    • இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட இருப்பதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

    அறிமுக இயக்குநர் பாஸ்கல் வெப்பம் குளிர் மழை #VKM படத்தை இயக்கவிருக்கிறார்.ஷங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஹேஷ்டேக் FDFS என்ற நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் கதை ஒரு சமூக பிரச்சனையை பேசக் கூடிய படமாக இருக்கும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட இருப்பதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

    • அசோக் செல்வன் மீண்டும் போர் தொழில் இயக்குனரான விக்னேஷ் ராஜாவுடன் இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
    • போர் தொழில் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    போர் தொழில் திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் வெளியானது. பிரகாஷ் எழுத்தில் இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கினார்.ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்தார் . நடிகர் சரத்குமாருக்கு இந்த படம் மிக பெரிய புகழைப் பெற்றுக் கொடுத்தது. அதேவேளை, தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மிகவும் நேர்த்தியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டு இருப்பவர் அசோக் செல்வன். நித்தம் ஒரு வானம், ஓ மை கடவுளே,சபா நாயகன் , ப்ளூ ஸ்டார் ஆகிய சிறந்த படங்களில் நடித்து ஒரு முன்னணி கதாநாயகனாக வளர்ந்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் அசோக் செல்வன் மீண்டும் போர் தொழில் இயக்குனரான விக்னேஷ் ராஜாவுடன் இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது, போர் தொழில் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. விரைவில் அதிகாரப் பூர்வமான தகவல் படகுழுவினரிடம் இருந்து வெளியிடப்படும்.




     



     



    • இத்திரைப்படத்தை ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளது
    • பிரேமலு தெலுங்கு மொழியில் டப் செய்து இன்று வெளியானது.

    மலையாள மொழியில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் பிரேமலு படம் வெளியானது. மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். சென்னையில் இப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு உருவாகியது.  உலகளவு பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் 100 கோடியை தாண்டியது பிரேமலு. மலையாள திரையுலகில் மிகப் பெரிய வசூல் செய்த படத்தின் பட்டியலில் பிரேமலு 5-வது இடத்தில் உள்ளது. இத்திரைப்படத்தை ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளது. மலையாளத்தில் வரவேற்பை தொடர்ந்து பிரேமலு தெலுங்கு மொழியில் டப் செய்து இன்று வெளியானது. இந்நிலையில் படக்குழுவினர் தமிழிலும் இப்படத்தை டப் செய்து வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளனர். மார்ச் மாத இறுதியில் தமிழில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்கள் படக்குழுவினரிடம் இருந்து விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அறிமுக இயக்குநர் பாஸ்கல், வெப்பம் குளிர் மழை (VKM)படத்தை இயக்கவிருக்கிறார்
    • படத்தின் போஸ்டர் மிகவும் நேர்த்தியாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது.

    அறிமுக இயக்குநர் பாஸ்கல், வெப்பம் குளிர் மழை (VKM)படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளரான  ஷங்கர் என்பவர் இசையமைக்கிறார். ஹேஷ்டேக் FDFS என்ற நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் கதை தற்போது நிகழும் சமூக பிரச்சனையை பேசக்கூடியதாக இருக்கும் என படகுழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெற்றிமாறன் இன்று வெளியிட்டார். வெப்பம் குளிர் மழை படத்தின் போஸ்டர் மிகவும் நேர்த்தியாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது. கதாநாயகன் பால் கேனை தூக்கிக் கொண்டு இருப்பது போலவும், மாட்டின் தலைக்கு பதில் கதாநாயகியின் தலை வைக்கப்பட்டிருக்கிறது. மாட்டின் வயிற்றில் மனித சிசு வளர்வது போன்ற காட்சிகள் போஸ்டரில் காணப்படுகிறது. இத்திரைப்படம்  எதை பற்றி பேசப்போகிறது என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

    • இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    • வயசாக வயசாக மெருகேறிக்கொண்டே இருக்கும் இரண்டே விஷயம். என் அழகிய பிடித்தமான தங்க பெண்ணுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்,” என்று தலைப்பிட்டுள்ளார்.

    இந்த வாரம் முழுவதும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஹாட் டாபிக்காக வலை தளங்களில் சுற்றி வந்தனர். நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தன் கணவரை அன்பாலோ செய்துவிட்டார் என்ற தகவல் காட்டு தீ போன்று பரவியது.

    அதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கடந்த ஆண்டு திருமண தினத்தில் எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்டானர். அதில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மிக நெருக்கமாக இருந்த காட்சிகள் இடம்பெற்று இருந்தது.

    இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் அவரின் இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நயன்தாரா வைன் கிளாசில் இருப்பது போன்ற புகைப்படத்தை இணைத்துள்ளார்.

    இந்த பதிவிற்கு, "வயசாக வயசாக மெருகேறிக்கொண்டே இருக்கும் இரண்டே விஷயம். என் அழகிய பிடித்தமான தங்க பெண்ணுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்," என்று தலைப்பிட்டுள்ளார்.

    • நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் D-51-வது படத்தில் நடிக்கிறார்.
    • படத்திற்கு "குபேரா" என்று பெயரிடப்பட்டுள்ளது.

    நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் D-51-வது படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராக உள்ளது.

    இப்படத்தில் தனுஷ்,நாகார்ஜூனா,ராஷ்மிகா மந்தனா,சவுரவ் கண்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. படத்திற்கு "குபேரா" என்று பெயரிடப்பட்டுள்ளனர்.

    தனுஷ் இதில் சிவன் பார்வதி படத்தின் முன் நின்றிப்பது போல் போஸ்டர் வடிவமைத்து இருக்கின்றனர். இந்த படத்தில் தனுஷ் என்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • 2008-ல் வெளியான ஆடுஜீவிதம் எனும் மலையாள நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
    • கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்து சவுதி அரேபியா சென்று மாட்டி கொண்டு அடிமையான ஒருவனின் கதையாகும்.

    மலையாள சினிமாவில் விரைவில் வெளியாக இருக்கும் ஆடுஜீவிதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ப்லஸி இப்படத்தை இயக்கி தயாரித்து இருக்கிறார்.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ப்ரிதிவிராஜ் சுகுமாரன் மற்றும் அமலா பால் நடித்துள்ளனர். 2008-ல் வெளியான ஆடுஜீவிதம் எனும் மலையாள நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    'தி கோட்ஸ் லைஃப்'என இப்படத்திற்கு ஆங்கில தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    ப்ரித்திவிராஜ் 'நஜீப்' எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்து சவுதி அரேபியா சென்று மாட்டி கொண்டு அடிமையான ஒருவனின் கதையாகும்.

    சுனில் கே. எஸ். ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்ரீகர் ப்ரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

    வரும் மார்ச் 28ம் தேதி ஆடுஜீவிதம் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளும் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் ஆடுஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் இப்பொழுது வெளியாகியுள்ளது.

    • மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால், இயக்குனர் ஹரியுடன் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.
    • இன்று மாலை 7 மணிக்கு வி.ஐ.டி கல்லூரியில் நடக்கும் வைப்ரன்ஸ் 24 ஃபெஸ்டில் படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.

    மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால், இயக்குனர் ஹரியுடன் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.

    ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, வரும் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி படம் வெளியாக உள்ளது.

    இயக்குநர் ஹரி எப்பொழுதும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் கதை சொல்வதில் ஆற்றல் பெற்றவர். சிங்கம், சாமி, யானை போன்ற படங்களே இதற்கு சாட்சி.

    ப்ரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜூ, சமூத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு, தேவி ஸ்ரீ ப்ரசாத் இசையமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டோன் பென்ச் ஃபில்ம்ஸ் மற்றும் zee ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

    இந்நிலையில் படத்தின் முதல் பாடலான "டோண்ட் வொரி டோண்ட் வொரி டா மச்சி" எனும் பாடல் வெளியாக உள்ளது.

    இன்று மாலை 7 மணிக்கு வி.ஐ.டி கல்லூரியில் நடக்கும் வைப்ரன்ஸ் 24 ஃபெஸ்டில் படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.

    • எல்லாரும் புகழ்ந்து தள்ளிய இப்படத்தை "எனக்கு பிடிக்கவே இல்லை .. எரிச்சலூட்டும் படமாக இருந்தது" என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
    • "மஞ்சும்மல் பாய்ஸ்" படத்தை எடுத்த படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சமீபத்தில் வெளியாகிய மஞ்சும்மல் பாய்ஸ் படம் மக்களிடையே பெரிய வரவேற்பு பெற்றது. உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் ரூ. 100 கோடியை தாண்டியது. தமிழ்நாடு வசூலில் ரூ.15 கோடியை தாண்டியது.

    வெகுஜன மக்களால் இத்திரைப்படம் மிகவும் கொண்டாடப்பட்டது. நடிகர் கமல், விக்ரம், தனுஷ், உதயநிதி ஸ்டாலின், சித்தார்த் போன்ற பல முன்னணி பிரபலங்களால் பாராட்டு பெற்றது.

    இப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்து துனுஷை வைத்து படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாக தவல்கள் வெளியானது.

    எல்லாரும் புகழ்ந்து தள்ளிய இப்படத்தை "எனக்கு பிடிக்கவே இல்லை .. எரிச்சலூட்டும் படமாக இருந்தது" என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர்," தென்னகம் முழுக்க உள்ள சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் அநாகரீக செயல் உள்ளது. சுற்றுலா மையங்கள் மட்டுமல்ல அடர்காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள்.

    குடிகுடிகுடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது, வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது" என்று கூறியுள்ளார்.

    மேலும்," மலையாள சினிமா இக்கால சமூதாயத்தை கெடுக்கிறது எனவும், அடுத்து வரும் தலைமுறைகளை ஜாலியாக இருப்பது என்றால் அது குடியும் கும்மாலமும்மாக இருப்பது தான் என போதிக்கிறது" என அவர் விமர்சித்துள்ளார்.

    கேரளத்தின் நலம் நாடும் ஓர் அரசு இருந்தால் "மஞ்சும்மல் பாய்ஸ்" படத்தை எடுத்த படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    எழுத்தாளர் ஜெயமோகனின் இந்த விமர்சனம் சமூக வலை தளங்களில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. பலர் ஜெயமோகன் கூறியது சரிதான் என்றும், பலர் அவர் கூறுயதை மறுத்தும் விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர்.




     




     


    • ப்ரின்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மாரி செல்வராஜ் படம் இயக்கவிருக்கிறார்.
    • தற்பொழுது கார்த்தியின் 26வது படம் நலன் குமாரசாமியும் , 27 ஆவது படத்தை '96' படம் இயக்கிய ப்ரேம் குமார் இயக்கவுள்ளனர்.

    சமீபத்தில் பிறந்தாள் கொண்டாடிய மாரி செல்வராஜை வாழ்த்தி பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சமூக வலையத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

    ப்ரின்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மாரி செல்வராஜ் படம் இயக்கவிருக்கிறார். அதில், கார்த்தி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். இன்னும் இப்படத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற தகவல்களை பின்னர் அறிவிப்பதாக கூறியுள்ளனர்.

    தற்பொழுது கார்த்தியின் 26வது படம் நலன் குமாரசாமியும் , 27 ஆவது படத்தை '96' படம் இயக்கிய ப்ரேம் குமார் இயக்கவுள்ளனர். தொடர்ந்து, பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். கைதி 2, சர்தார்2 போன்ற படத்திலும் நடிக்க இருக்கிறார்.

    கார்த்தியை வைத்து முன்னணி இயக்குநர்கள் படம் இயக்க இருப்பதால், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை தொடர்ந்து அடுத்தாக துருவ் விக்ரம் வைத்து பா. ரஞ்சித் தயாரிப்பில் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×