டோண்ட் வொரி டா மச்சி..! ரத்னம் படத்தின் பாடல் இன்று வெளியீடு

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால், இயக்குனர் ஹரியுடன் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.இன்று மாலை 7 மணிக்கு வி.ஐ.டி கல்லூரியில் நடக்கும் வைப்ரன்ஸ் 24 ஃபெஸ்டில் படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.
டோண்ட் வொரி டா மச்சி..! ரத்னம் படத்தின் பாடல் இன்று வெளியீடு
Published on

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால், இயக்குனர் ஹரியுடன் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.

ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, வரும் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி படம் வெளியாக உள்ளது.

இயக்குநர் ஹரி எப்பொழுதும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் கதை சொல்வதில் ஆற்றல் பெற்றவர். சிங்கம், சாமி, யானை போன்ற படங்களே இதற்கு சாட்சி.

ப்ரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜூ, சமூத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு, தேவி ஸ்ரீ ப்ரசாத் இசையமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டோன் பென்ச் ஃபில்ம்ஸ் மற்றும் zee ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் முதல் பாடலான "டோண்ட் வொரி டோண்ட் வொரி டா மச்சி" எனும் பாடல் வெளியாக உள்ளது.

இன்று மாலை 7 மணிக்கு வி.ஐ.டி கல்லூரியில் நடக்கும் வைப்ரன்ஸ் 24 ஃபெஸ்டில் படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com