என் மலர்
நீங்கள் தேடியது "tamil movies"
தீபாவளி கொண்டாட்டம் என்றாலே ஒன்று பட்டாசும், மற்றொன்று புதிய திரைப்படங்களும் தான்.
முன்பெல்லாம், தீபாவளி- பொங்கல் பண்டிகைகளில் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே பெரும்பாலும் வெளியாகும். ஆனால், சமீப காலமாக அந்த போக்கு மாறி வருகிறது.
தற்போது சிறிய பட்ஜெட் படங்களும், புதிய ஹீரோக்களின் படங்களும் கூட தீபாவளி முன்னிட்டு வெளியாகி வசூல் சாதனை படைக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 20ம் தேதி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு 3 புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன.
அதன்படி, வரும் 17ம் தேதி அன்று துருவ் விக்ரமின் பைசன், ஹரிஷ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் டியூட் ஆகிய மூன்று படங்கள் வௌியாக தயாராக உள்ளன.
பைசன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
டியூட்
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ட்யூட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
டீசல்
பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கிராமத்தில் விதார்த் தனது மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். விவசாயியான விதார்த் தனது மகனை பெரிய ஆளாக்க வேண்டும் என்று கனவுடன் உழைக்கிறார். இதற்காக அதிகளவில் கடனை பெற்று மகனை பெரிய கான்வென்ட் பள்ளியில் சேர்க்கிறார்.
இந்த சூழலில், தனது விவசாய நிலம் வங்கியில் ஏலம் விட்டதை தெரிந்து விதார்த் அதிர்ச்சி அடைகிறார். வாங்காத கடனுக்கு நிலம் எப்படி ஏலத்தில் போகும் என்றும் குழம்புகிறார்.
இதுதொடர்பாக விதார்த் வங்கியில் கேட்கும்போது, அவரது தந்தையின் பெயரில் கடன் வாங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், கடன் வாங்கியிருந்தால் தந்தை இதை பற்றி சொல்லியிருப்பாரே என்றும் யோசிக்கிறார். இதில், ஏதோ மோசடி நடந்திருப்பதை விதார்த் உணர்கிறார். இந்த மோசடி பின்னணியில் இருக்கும் விஷயங்களை ஆராய்கிறார்.
இறுதியில் விதார்த் தனது நிலத்தை மீட்டாரா? மோசடியில் ஈடுபட்டது யார்? என்பதே மீதி கதை...
நடிகர்கள்
விவசாயி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விதார்த், நிலத்தை மீட்க போராடும் காட்சிகளில் கண்கலங்க வைக்கிறார். தனது நடிப்பின் அனுபவம் வெளிப்படுகிறது. ரக்ஷனா கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பை காட்டியிருக்கிறார்.
சிறுவனாக நடித்துள்ள கார்த்திக் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது. அருள்தாஸ், சரவண சுப்பையா, மாறன், நாகராஜ் ஆகியோரின் நடிப்பு நினைவில் நிற்கிறது.
இயக்கம்
பட நேரம் குறைவு என்றாலும் இழுவையாக தெரிகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
விவசாயிகளுக்கான திட்டங்கள் மற்றும் சலுகைகளை மோசடியாக சிலர் எப்படி சுரண்டுகிறார்கள்? என்பதை சொல்லி, அதற்கான தீர்வுகளை எடுத்துரைத்து திரும்பி பார்க்க வைத்துள்ளார் இயக்குனர் வி.கஜேந்திரன்.
இசை
என்.ஆர்.ரகுநந்தன் இசை கதைக்கு கச்சிதம்.
ஒளிப்பதிவு
அருள் கே.சோமசுந்தரத்தின் ஒளிப்பதிவு கிராமத்து பசுமையைக் காட்சிப்படுத்தி இருக்கிறது.
- உலகளவில் நாளை 7 தமிழ் திரைப்படங்கள் வெளியாகின்றன.
- 'படை தலைவன்' படம் திரையரங்க ஒதுக்கீடு காரணமாக ஒத்திவைப்பு.
தமிழகம் மற்றும் உலகளவில் நாளை வெளியாக இருக்கும் தமிழ் திரைப்படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
நாளை ஒரே நாளில் 7 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
அதன்படி, விஜய் சேதுபதி நடிப்பில் 'ஏஸ்', டொவினோ தாமஸ்-ன் 'நரி வேட்டை', யோகி பாபுவின் 'ஸ்கூல்', 'மையல்', 'அகமொழி விதிகள்', 'ஆகக் கடவன', 'திருப்பூர் குருவி' ஆகிய 7 படங்கள் நாளை வெளியாகின்றன.
சண்முக பாண்டியன் நடிப்பில் நாளை திரைக்கு வரவிருந்த 'படை தலைவன்' படம் திரையரங்க ஒதுக்கீடு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அசோக் செல்வன் மீண்டும் போர் தொழில் இயக்குனரான விக்னேஷ் ராஜாவுடன் இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
- போர் தொழில் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
போர் தொழில் திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் வெளியானது. பிரகாஷ் எழுத்தில் இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கினார்.ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்தார் . நடிகர் சரத்குமாருக்கு இந்த படம் மிக பெரிய புகழைப் பெற்றுக் கொடுத்தது. அதேவேளை, தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மிகவும் நேர்த்தியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டு இருப்பவர் அசோக் செல்வன். நித்தம் ஒரு வானம், ஓ மை கடவுளே,சபா நாயகன் , ப்ளூ ஸ்டார் ஆகிய சிறந்த படங்களில் நடித்து ஒரு முன்னணி கதாநாயகனாக வளர்ந்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் அசோக் செல்வன் மீண்டும் போர் தொழில் இயக்குனரான விக்னேஷ் ராஜாவுடன் இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது, போர் தொழில் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. விரைவில் அதிகாரப் பூர்வமான தகவல் படகுழுவினரிடம் இருந்து வெளியிடப்படும்.


- ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் கடந்த மே மாதம் 24ம் தேதி வெளியான படம் பிடி சார்.
- 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது அரண்மனை 4.
தமிழ் திரையில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற மூன்று படங்கள் இன்று ஓடிடியில் வெளியானது.
அந்த வகையில், மெளன குரு, மகாமுனி போன்ற படங்களை இயக்கிய சாந்தகுமார், இயக்கத்தில் வெளியான 'ரசவாதி தி அல்கெமிஸ்ட்' படம் ஒடிடியில் வெளியானது.
படத்தின் கதாநாயகனாக அர்ஜூன்தாஸ், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். கடந்த மே மாதம் 10 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படம் ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் கடந்த மே மாதம் 24ம் தேதி வெளியான படம் பிடி சார். வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை காத்திக் இயக்கினார். இந்த படம் திரையரங்கு வெளியீட்டில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியானது.
மேலும், சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4 கடந்த மே மாதம் 3ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த வெற்றியை தொடர்ந்து, அரண்மனை 4 இன்று டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
- வடசென்னை 2 படத்தில் இவர்கள் இருவரும் எப்போது இணைய போகிறார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
- ஆனால் இந்த படம் வடசென்னை 2 இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் செம மாஸ் கம்போ தனுஷ் - வெற்றிமாறன். இவர்கள் இருவரும் முதன் முதலில் இணைந்த திரைப்படம் பொல்லாதவன். முதல் படத்திலேயே இந்த கூட்டணி வெற்றியை தன்வசப்படுத்தியது.
இதை தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, அசுரனை தொடர்ந்து இவர்கள் இருவருடைய கூட்டணியில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது.
அடுத்ததாக வடசென்னை 2 படத்தில் இவர்கள் இருவரும் எப்போது இணையப் போகிறார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்நிலையில் வெற்றி மாறன் - தனுஷ் இணையவுள்ளதாக ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூரவாமக அறிவித்துள்ளது. ஆனால் இந்த படம் வடசென்னை 2 இல்லை எனவும் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வெற்றிகளைப் படங்களை கொடுத்த தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.






