என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரைப்படங்கள்"

    தமிழில் நாளை (நவ. 28) 10 திரைப்படங்களும், 2 படம் ரீ-ரிலீசும் செய்யப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள புதுப்படங்கள் மற்றும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற படங்களின் ரீ-ரிலீஸ் என நாளை திரைக்கு வரவுள்ள படங்கள் குறித்து பார்ப்போம்...

    அதன்படி, தமிழில் நாளை (நவ. 28) 10 திரைப்படங்களும், 2 படம் ரீ-ரிலீசும் செய்யப்படுகிறது.

    தேரே இஷ்க் மே

    ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் , க்ரித்தி சனோன் நடித்துள்ள திரைப்படம் 'தேரே இஷ்க் மே' . ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 'தேரே இஷ்க் மே' ஒரு தீவிரமான காதல் கதையாகும், இது தனுஷ் மற்றும் கிருத்தி சனோனை சுற்றி நகர்கிறது.

    ரிவால்வர் ரீட்டா

    கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    ஐபிஎல்

    பிரபல யூடியூப்பரும், சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவருமான டிடிஎஃப் வாசன் தற்போது படம் ஒன்றில் நடித்து உள்ளார். அப்படத்திற்கு ஐபிஎல் (Indian Penal Law) என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இப்படத்தில் நடிகர் கிஷோர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். கருணாநிதி இயக்கி உள்ள இப்படத்தை ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

    வெள்ளகுதிர

    *நிஜம் சினிமா* தயாரிப்பில் சரண்ராஜ்செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வெள்ளகுதிர'.

    BP 180

    ரேடியன்ட் இன்டர்நேஷனல் மூவிஸ் மற்றும் அதுல் இந்தியா மூவிஸ் சார்பில் பிரதிக் டி சத்பர் & அதுல் எம் போசாமியா இணைந்து தயாரித்துள்ள BP180 படத்தை ஜே.பி இயக்கி உள்ளார். தன்யா எஸ் ரவிச்சந்திரன், மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி, கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    Friday

    Dakdam Motion Pictures சார்பில் அனிஷ் மசிலாமணி தயாரிப்பில் ஹரிவெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் FRIDAY. இந்த படத்தில் மைம் கோபி, KPY தீனா, அனிஷ் மாசிலாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    ஒண்டிமுனியும் நல்லபாடனும்

    திருமலை புரொடக் ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரித்துள்ள ஒண்டிமுனியும் நல்லபாடனும் படத்தை சுகவனம் எழுதி இயக்கியுள்ளார்.

    அஞ்சான்

    திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அஞ்சான். இந்த படத்தில் சூர்யா, சமந்தா ரூத் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    அட்டகாசம்

    சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 'அட்டகாசம்' திரைப்படம் 2004-இல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

    • திருமணத்திற்கு பிறகு சுமார் 10 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
    • தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

    நடிகை ஜெனிலியா தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இயக்குநர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டு இந்தி படமான துஜே மேரி காசம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.

    தொடர்ந்து தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம் (2008), சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

    இதேபோல், தெலுங்கில் பொம்மரில்லு (2006) படத்தில் நடித்து, சிறந்த நடிகைக்கான பில்ம்ஃபேர் விருது (தெலுங்கு) பெற்றார். இந்தியில், ஜானே து... யா ஜானே நா (2008) படத்தில் இம்ரான் கானுடன் நடித்து புகழ் பெற்றார்.

    ஜெனிலியா உச்ச நடிகையாக இருந்தபோதே கடந்த 2012-ல் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரியான் மற்றும் ரஹில் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

    திருமணத்திற்கு பிறகு சுமார் 10 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜெனிலியா, 2022-ல் தெலுங்கு படமொன்றில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

    சமீபத்தில் சிதாரே சமீன் பர் (2024) என்ற இந்தி படத்தில் அமீர்கானுடன் நடித்தார்.

    இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் தென்னிந்திய திரைப்படங்களில் சிறப்பான கதாபாத்திரங்கள் கிடைத்ததா ? என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

    அப்போது அவர், " என்னுடைய தென்னிந்திய படங்களில் எனக்கு எப்போதும் சிறந்த கதாப்பாத்திரங்களே கொடுக்கப்பட்டுள்ளன. அங்கு எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்காக நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

    நான் கற்றுக் கொண்ட இடம் அதுதான். ஐதராபாத்தில் ஹாசினி என்றும், தமிழில் ஹரிணி என்றும், மலையாளத்தில் ஆயிஷா என்றும் எனது கதாப்பாத்திரங்கள் வழியேதான் தென்னிந்திய மக்கள் என்னை நினைவில் வைத்திருக்கிறார்கள்" என்றார்.

    • திரைத்துறையினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அறிவிப்பு.
    • வரிக்குறைப்பு திரைப்படத் துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    இது திரைத்துறையினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இன்று வெளியிட்ட அரசாணை மூலம் அமலுக்கு வந்துள்ளது.

    இந்த வரிக்குறைப்பு திரைப்படத் துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    மேலும், இது டிக்கெட் விலைகளைக் குறைக்கவும், திரையரங்க வருவாயை மேம்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • உலகளவில் நாளை 7 தமிழ் திரைப்படங்கள் வெளியாகின்றன.
    • 'படை தலைவன்' படம் திரையரங்க ஒதுக்கீடு காரணமாக ஒத்திவைப்பு.

    தமிழகம் மற்றும் உலகளவில் நாளை வெளியாக இருக்கும் தமிழ் திரைப்படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

    நாளை ஒரே நாளில் 7 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

    அதன்படி, விஜய் சேதுபதி நடிப்பில் 'ஏஸ்', டொவினோ தாமஸ்-ன் 'நரி வேட்டை', யோகி பாபுவின் 'ஸ்கூல்', 'மையல்', 'அகமொழி விதிகள்', 'ஆகக் கடவன', 'திருப்பூர் குருவி' ஆகிய 7 படங்கள் நாளை வெளியாகின்றன.

    சண்முக பாண்டியன் நடிப்பில் நாளை திரைக்கு வரவிருந்த 'படை தலைவன்' படம் திரையரங்க ஒதுக்கீடு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல்.
    • சூர்யா நடித்துள்ள ‘கங்குவா' படமும் தீபாவளிக்கு ரிலீஸ்.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் 'விடாமுயற்சி' படத்தில் நடித்திருக்கிறார். திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    'விடாமுயற்சி' படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படமும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

    சூர்யாவின் திரை பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் 'கங்குவா', 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் திரைக்கு வர இருக்கிறது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது விடுதலை இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படமும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்ற புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.




    அடுத்ததாக நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார் கவின். இந்த படத்திற்கு `கிஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படமும் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


    அதன்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் `எல்ஐசி'. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் தவிர எஸ்.ஜே.சூர்யா, கிரித்தி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படமும் தீபாவளி ரேசில் இணையும் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

    அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்த 5 படங்களும் மோதிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஐந்து படங்கள் ரிலீசாவது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நவம்பர் மாதம் 1-ஆம் (01.11.2024) தேதி முதல் புதிய படங்களை துவகக வேண்டாம்.
    • நமது ஒற்றுமையே தயாரிப்பு தொழிலை சிறப்புற செய்யும்.

    மறு அறிவிப்பு செய்யும் வரை வரும் நவம்பர் 1ம் தேதியில் இருந்து புதிய படங்களின் வேலைகளை தொடங்க வேண்டாம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் தயாரிப்பு செலவு அதிகரித்து தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் பணச் சுமை ஏற்படுவதால் திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறுசீரமைப்பு ஏற்படுத்துவதற்கு ஏதுவாக தயாரிப்பில் இருக்கும் படங்களின் படப்பிடிப்பு மட்டும் நடத்தப்பட வேண்டும். நவம்பர் மாதம் 1-ஆம் (01.11.2024) தேதி முதல் புதிய படங்களை துவகக வேண்டாம் என்று சொல்லி இருந்தோம்.

    தென்னிந்திய நடிகர சங்கம் மற்றும் 24 சங்கங்களை உள்ளடக்கிய பெப்சியில் பல யூனியன்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக வந்துள்ளது. இன்னும் சில யூனியன்களிடம் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதை முழுமையாக பேச்சுவார்த்தை நடத்திட வேண்டியுள்ளது.

    இவை அனைத்தும் முழுமையாக பேசி நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மறு அறிவிப்பு வரும் வரை புதிய படங்களின் வேலைகளை துவக்க வேண்டாம் என்ற நிலைப்பாடு தொடர்கிறது என்பதை தயாரிப்பாளர்களர்களுக்கு தெரிய படுத்தி கொள்கிறோம். நமது ஒற்றுமையே தயாரிப்பு தொழிலை சிறப்புற செய்யும். ஒற்றுமையை வலிமையோடு நிலைநாட்டுவோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விஜய் படத்திற்கு ரூ.25-ம், ரஜினி படத்துக்கு ரூ.10-ம் மாணவிகளிடம் கட்டாயமாக வசூல் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது.
    • குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்று நினைத்து யாரும் இது தொடர்பாக புகார் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வி.கே.புரத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 9-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் இந்த பள்ளியில் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது.

    தொடர்ந்து அதே பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு, நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

    இதற்காக விஜய் படத்திற்கு ரூ.25-ம், ரஜினி படத்துக்கு ரூ.10-ம் மாணவிகளிடம் கட்டாயமாக வசூல் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது.

    அதே நேரம் பள்ளியில் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டதற்கு மாணவிகளின் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தி இருந்தாலும் தட்டிக் கேட்டால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்று நினைத்து யாரும் இது தொடர்பாக புகார் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனிடையே பள்ளியில் சினிமா படங்கள் ஒளிபரப்பப்பட்ட தகவல் கசிந்த நிலையில் இந்து முன்னணி நிர்வாகிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் புதிய திரைப்படங்கள் இரண்டும் திரையிடுவதற்கு பள்ளியில் உரிமம் பெற்று உள்ளார்களா? என்று அவர்கள் கேள்வி கேட்டதோடு, பள்ளிகளில் சினிமா திரைப்படங்களை திரையிட்டு அதன் மூலம் வசூல் வேட்டையில் பள்ளி நிர்வாகம் இறங்கியுள்ளதாக அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டரும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.

    இதையடுத்து உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உத்தரவின் பேரில், கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் கூறுகையில், மாணவர்களுக்கு மனதளவிலான அழுத்தத்தை குறைப்பதற்காக கடந்த சனிக்கிழமை திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது என்று அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

    அந்த மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகையை உடனடியாக திருப்பி வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார்.

    மேலும் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

    ×