என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Movies"

    • என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது.
    • அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை.

    தான் எழுதிய பாடல் பல்லவிகள் தன்னைக் கேட்காமல் திரைப்படத் தலைப்புகளாக வைக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து ஆதங்கத்துடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது.

    அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை.

    ஒன்றா இரண்டா... பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுகிட்டேன், பனிவிழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா, ஈரமான ரோஜாவே, நிலாவத்தான் கையில புடிச்சேன், மெளன ராகம், மின்சாரக் கண்ணா, கண்ணாளனே, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப் பார், தென்மேற்குப் பருவக்காற்று, விண்ணைத் தாண்டி வருவாயா,

    நீ தானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன் இப்படி இன்னும் பல...

    சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை காணும் இடங்களில் கேட்டதுமில்லை.

    செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன். ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது. ஆனால் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?" என்று பதிவிட்டுள்ளார்.

    • ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக பி.வி.ஆர் பாஸ்போர்ட் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • பி.வி.ஆர் பாஸ்போர்ட்டின் மூலம் மக்கள் மாதத்திற்கு 4 படங்கள் பார்க்கலாம்

    சினிமாவை அதிகம் விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக பி.வி.ஆர் பாஸ்போர்ட் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பி.வி.ஆர் பாஸ்போர்ட்டின் மூலம் மக்கள் மாதத்திற்கு 4 படங்கள் பார்க்கலாம். திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே இது செல்லுபடியாகும். வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் பி.வி.ஆர் பாஸ்போர்ட் வைத்து படம் பார்க்க முடியாது.

    ஒரு நாளுக்கு ஒரு படம் மட்டுமே பார்க்க முடியும். ஒரு படத்தை 2 தடவைக்கு மேலாக பார்க்க முடியாது. பி.வி.ஆர் பாஸ்போர்ட் A-விற்கு மாதம் சந்தாவா 349 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். ஒரு மாததிற்குள் 4 படம் பார்க்க முடியும். இல்லை என்றால் இது அடுத்த மாதத்திற்கு செல்லுபடி ஆகாது.

    பாஸ்போர்டின் இரண்டாம் B வகை மாதம் சந்தா ரூ.1047 செலுத்த வேண்டும். இதில், 90 நாட்கள் வரை உபயோகிக்கலாம். 90 நாட்களில் 12 படங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

    திங்களில் இருந்து வியாழக்கிழமை வரை மட்டுமே இதை உபயோகிக்க முடியும். வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமையில் புதுபடங்கள் வெளிவருவதால் மக்கள் அந்நாட்களில் பணம் கொடுத்துதான் பார்க்க வேண்டும்.

    பி.வி.ஆர் பாஸ்போர்ட்டை உபயோகித்து படம் பார்த்தால் ஒரு டிக்கெட்டின் விலை 87 ஆகவும், டிக்கெட்டுடன் சேர்ந்து கன்வீனியன்ஸ் ஃபீ செலுத்தி நாம் டிக்கெட்டுகளைப் பெறலாம். ஆன்லைனில் மட்டுமே பாஸ்போர்ட்டை வைத்து டிக்கெட் பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.

    பிவிஆர் பாஸ்போர்ட் ஏற்கனவே ஐதராபாத்தில் நடைமுறையில் உள்ளது. இப்போது, தெலுங்கானா, தமிழகத்திலும், கேரளத்திலும் அமலுக்கு வந்து இருக்கிறது. ரசிகர்களுக்கு மத்தியில் பி.வி.ஆர் பாஸ்போர்ட் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஜினிகாந்த் நடிக்கும் 171 ஆவது படத்திற்கு "கூலி" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
    • தற்பொழுது வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினிகாந்த அவரது இமய மலை ஆன்மீக பயணத்தில் இருக்கிறார்,

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிக்கும் 171 ஆவது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பை அறிவிக்கும் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆனது.

    அந்த வகையில், ரஜினிகாந்த் நடிக்கும் 171 ஆவது படத்திற்கு "கூலி" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தின் கதை தங்க கடத்தல் சம்பவங்களை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் இயக்குநர் ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார்.

    இந்த படத்தில் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜூன் 10 ஆம் தேதி ரஜினிகாந்த் நடிக்கும் "கூலி" படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தற்பொழுது வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினிகாந்த அவரது இமய மலை ஆன்மீக பயணத்தில் இருக்கிறார், அதை முடித்துவிட்டு கூலி திரைப்பட படப்பிடிப்பு பணிகளில் கலந்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல்.
    • சூர்யா நடித்துள்ள ‘கங்குவா' படமும் தீபாவளிக்கு ரிலீஸ்.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் 'விடாமுயற்சி' படத்தில் நடித்திருக்கிறார். திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    'விடாமுயற்சி' படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படமும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

    சூர்யாவின் திரை பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் 'கங்குவா', 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் திரைக்கு வர இருக்கிறது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது விடுதலை இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படமும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்ற புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.




    அடுத்ததாக நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார் கவின். இந்த படத்திற்கு `கிஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படமும் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


    அதன்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் `எல்ஐசி'. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் தவிர எஸ்.ஜே.சூர்யா, கிரித்தி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படமும் தீபாவளி ரேசில் இணையும் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

    அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்த 5 படங்களும் மோதிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஐந்து படங்கள் ரிலீசாவது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கருப்பு மீசை வெள்ளை தாடியுடன் வித்தியாசமான லுக்கில் ரஜினிகாந்த் உள்ளார்.
    • அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிக்கும் 171 ஆவது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பை அறிவிக்கும் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரல் ஆனது.

    அந்த வகையில், ரஜினிகாந்த் நடிக்கும் 171 ஆவது படத்திற்கு "கூலி" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தின் கதை தங்க கடத்தல் சம்பவங்களை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் இயக்குநர் ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார்.

    இந்த படத்தில் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், கூலி படத்திற்கான ரஜினிகாந்தின் லுக் டெஸ்ட் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். அதில் கருப்பு மீசை வெள்ளை தாடியுடன் வித்தியாசமான லுக்கில் ரஜினிகாந்த் உள்ளார்.

    அதோடு "கூலி" படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூலை மாதத்தில் தொடங்கும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    கடந்த சில மாதங்களாக ஒரு சில படங்கள் மட்டும் வெளியான நிலையில், இந்த வாரம் 11 படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #TamilMovies
    தமிழ் நாட்டில் தியேட்டர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து 1000க்கு குறைவான தியேட்டர்களே இருக்கின்றன. ஒரு வாரத்தில் அதிகபட்சம் 3 படங்கள் வெளியானாலே தியேட்டர்கள் கிடைப்பது சிரமமாகி விடும். இந்நிலையில் இந்த வாரம் 11 படங்கள் வெளியாக இருக்கின்றன.

    ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரிலீசான கடைக்குட்டி சிங்கமும், தமிழ்படம் 2வும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் ரிலீசான விஜய் சேதுபதியின் ஜுங்காவும், திரிஷாவின் மோகினியும் பல தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.



    கஜினிகாந்த், மணியார் குடும்பம், காட்டுப்பய சார் இந்த காளி, எங்க காட்டுல மழை, அழகுமகன், போயா, அரளி, கடிகார மனிதர்கள், உப்பு புளி காரம், நாடோடி கனவு, கடல் குதிரைகள் என ரிலீஸ் தேதியை அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ள இவை அனைத்துமே சிறுபட்ஜெட் படங்கள். அடுத்த வாரம் கமலின் விஸ்வரூபம் 2 வெளியாக இருப்பதால் இந்த வாரமே ரிலீஸ் செய்ய போட்டி போடுகிறார்கள்.
    ×