என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vairamuthu"
- வைரமுத்து பல படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார்.
- அந்த வரிசையில் சீனு ராமசாமி படத்திற்கும் பாடல் எழுதுகிறார்.
1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.

வைரமுத்து தற்போது பல படங்களுக்கு பிசியாக பாடல் எழுதி வருகிறார். அந்த வரிசையில் இயக்குனர் சீனு ராமசாமி படத்திற்கும் பாடல் எழுதியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சீனுராமசாமி
நல்லதொரு கதைசொல்லி
அவள் பானை விற்கிறவள்;
இவன் கோழி விற்கிறவன்
பானைக்காரிக்குக்
கோழிக்காரன்மீது
ஒருதலைக் காதல்
அவனோ
வாழ்வில் நொந்துபோனவன்;
பால்யத்தில் நரைத்தவன்
அவளுக்குப் புரிகிற மொழியில்
காதலை நிராகரிக்க வேண்டும்
அதுதான் பாட்டு
ரகுநந்தன் மெட்டுக்கு
வட்டார வழக்கில்
எழுதினேன்
அவரவர் தொழில்வழி
இயங்கியது தமிழ்:
"ஒடைஞ்ச பானைக்கு
ஒலை எதுக்கு? – அடி
அறுத்த கோழிக்கு
அடை எதுக்கு?"
படித்ததும் –
சீனிச்சேவு
சாப்பிட்ட குழந்தைமாதிரி
சிரித்தார் சீனு" என்று குறிப்பிட்டுள்ளார்.
சீனுராமசாமி
— வைரமுத்து (@Vairamuthu) November 17, 2023
நல்லதொரு கதைசொல்லி
அவள் பானை விற்கிறவள்;
இவன் கோழி விற்கிறவன்
பானைக்காரிக்குக்
கோழிக்காரன்மீது
ஒருதலைக் காதல்
அவனோ
வாழ்வில் நொந்துபோனவன்;
பால்யத்தில் நரைத்தவன்
அவளுக்குப் புரிகிற மொழியில்
காதலை நிராகரிக்க வேண்டும்
அதுதான் பாட்டு
ரகுநந்தன் மெட்டுக்கு
வட்டார… pic.twitter.com/YvkXmuzpZj
- கையெழுத்து இயக்கத்தில் எல்லா தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
- கவிஞர் வைரமுத்துவும் நீட் தேர்வுக்கு எதிரான இந்த இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டார்.
சென்னை:
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நபராக கையெழுத்து போட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார். நீட் தேர்வுக்கு எதிரான இந்த கையெழுத்து இயக்கத்தில் எல்லா தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டனர்.
இதையொட்டி கவிஞர் வைரமுத்துவும் நீட் தேர்வுக்கு எதிரான இந்த இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டார். இதுகுறித்து அவர் பதிவிட்ட கருத்துக்கள் வருமாறு:-
நீட் தேர்வுக்கு எதிராக எனது கையெழுத்து இடம் பெறுவதில் மகிழ்ச்சி. தேர்வு எழுதியே மாணவர்கள் வாழ்நாள் கழிந்து விடுகிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். நீட் தேர்வு சமூகத்திற்கு எதிரானது. சமூக நீதிக்கு எதிரானது. மாணவர்களுக்கு எதிரானது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
- இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”.
- இப்படத்திற்கு ஶ்ரீகாந்த்தேவா இசையமைத்துள்ளார்.
பிரபல எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் "கட்டில்". மேப்பிள் லீப்ஸ் புரொடக்ஷன்ஸ் (Maple Leafs Productions) தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஶ்ரீகாந்த்தேவா இசையமைத்துள்ளார். வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவினில் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது, கட்டில் மாதிரியான சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. இது மாதிரி படங்களில் தான் புதிய கலைஞர்கள் நமக்கு கிடைப்பார்கள். பெரிய படங்கள் திட்டமிட்டுப் பார்க்க வைக்கப்படுகிறது, துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் கணேஷ்பாபு புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறார். சிறு படங்கள் தான் நம்மைச் சிறகடித்துப் பறக்கவைக்கும் நம் சிந்தனையை வளர்க்கும். பழைய படங்களின் போஸ்டர் பார்த்தால் அதில் எல்லாமே பெண்களும் முக்கியமாக இடம் பெற்றிருப்பார்கள்.

ஆனால், இப்போது சினிமாக்களில் பெண்களின் படங்களைப் பார்க்க முடிகிறதா? பெண்ணுக்கு சரிசமமான இடம் தந்த சினிமா தான் தமிழ் சினிமாவின் பொற்காலம், அந்த பொற்காலத்தை தன் கட்டில் மூலம் மீட்டுக்கொண்டு வந்திருக்கிறார் கணேஷ்பாபு . இது மாதிரியான சின்னப்படங்கள் ஜெயிப்பது தான் மக்களுக்கு மகிழ்வைத்தரும் என் போல் சமூக செயல்பாட்டாளர்கள் அதைத்தான் ஆசைப்படுகிறோம். கண்ணதாசன், வாலி இருந்தபோது அவர்களோடு போட்டி போட்டு அவர்களோடு நான் நின்றேன் அவர்களை ஜெயிக்க முடியாது எனத் தெரியும், ஆனால் அவர்களோடு நானும் இருக்கிறேன் என நின்றேன்.
அது மட்டும் போதுமா ? இப்போது நான் மதன்கார்கியோடு போட்டிபோடுகிறேன். அவரை ஆஸ்திரேலியாவிற்கு படிக்க அனுப்பினேன். விஞ்ஞானம் படித்துவிட்டு வந்து பேராசிரியர் ஆனார். ஆனால் எனக்குப் போட்டியாக வருவார் என நினைக்கவில்லை. இந்தப்படத்தில் அருமையான வரிகள் தந்துள்ளார். அவருக்கு இந்தப்படத்திற்குத் தேசியவிருது கிடைக்க வாழ்த்துக்கள். கணேஷ்பாபு நினைவுகளின் வலியை இப்படம் மூலம் பதிவு செய்துள்ளார். அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பேசினார்.
- விஜய் ஆண்டனி மகள் மீரா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
- இவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படவுள்ளது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா நேற்று அதிகாலை 3 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 12-ம் வகுப்பு படித்து வந்த மீரா கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. திரைப்பிரபலங்கள் பலர் மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது உடல் இன்று கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, விஜய் ஆண்டனி மகள் மீராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கொலை என்பது
மனிதன் மீது
மனிதன் காட்டும் எதிர்ப்பு
தற்கொலை என்பது
சமூகத்தின் மீது
மனிதன் காட்டும் எதிர்ப்பு
விஜய் ஆண்டனி
மகளின் தற்கொலை
சமூகத்தை எந்தப் புள்ளியில்
எதிர்க்கிறது என்பதைக்
கண்டறிந்து களைய வேண்டும்
ஒரு பூ
கிளையிலேயே
தூக்கிட்டுக் கொள்வது
எத்துணை பெரிய சோகம்
வருந்துகிறேன்
ஒரு குடும்பத்தின்
சோகத்தைப் பங்கிட்டு
என் தோளிலும்
ஏற்றிக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கொலை என்பது
— வைரமுத்து (@Vairamuthu) September 20, 2023
மனிதன் மீது
மனிதன் காட்டும் எதிர்ப்பு
தற்கொலை என்பது
சமூகத்தின் மீது
மனிதன் காட்டும் எதிர்ப்பு
விஜய் ஆண்டனி
மகளின் தற்கொலை
சமூகத்தை எந்தப் புள்ளியில்
எதிர்க்கிறது என்பதைக்
கண்டறிந்து களைய வேண்டும்
ஒரு பூ
கிளையிலேயே
தூக்கிட்டுக் கொள்வது
எத்துணை பெரிய சோகம்…
- பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1983-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மண்வாசனை’.
- இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
முன்னணி இயக்குனரான பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1983-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மண்வாசனை'. இந்த படத்தில் பாண்டியன், ரேவதி, வினு சக்ரவர்த்தி, காந்திமதி, விஜயன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்றிருந்த 'பொத்தி வச்ச மல்லிக மொட்டு' பாடல் 80 காலக்கட்டங்களில் மிகவும் வரவேற்பை பெற்ற பாடலாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 'மண்வாசனை' திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகளை கடந்துள்ளது.

இந்நிலையில், 'பொத்தி வச்ச மல்லிக மொட்டு' பாடலின் பொருள் புரியாமல் இன்னும் புகார் வருகிறது என்று வைரமுத்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இன்றுடன்
நாற்பது ஆண்டுகள்
பாரதிராஜாவின்
மண்வாசனை வெளிவந்து
"ஆத்துக்குள்ள நேத்து
ஒன்ன நெனச்சேன்
வெக்கநெறம் போக
மஞ்சக் குளிச்சேன்"என்ற வரியின்
பொருள் புரியாமல்
இன்னும் புகார் வருகிறது
"என் வெட்கத்தின்
சிவப்பு நிறம் பார்த்து
அது ஆசையின்
அழைப்பென்று கருதி
என் முரட்டு மாமன்
திருட்டுவேலை செய்துவிடக்கூடாது
அதனால் மஞ்சள் பூசி
என் வெட்கத்தை மறைக்கிறேன்"
என்பது விளக்கம்
இந்த நாற்பது ஆண்டுகளில்
காதலின் விழுமியம் மாறியிருக்கிறது
வெட்கப்பட ஆளுமில்லை
மஞ்சளுக்கும் வேலையில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றுடன்
— வைரமுத்து (@Vairamuthu) September 16, 2023
நாற்பது ஆண்டுகள்
பாரதிராஜாவின்
மண்வாசனை வெளிவந்து
"ஆத்துக்குள்ள நேத்து
ஒன்ன நெனச்சேன்
வெக்கநெறம் போக
மஞ்சக் குளிச்சேன்"என்ற வரியின்
பொருள் புரியாமல்
இன்னும் புகார் வருகிறது
"என் வெட்கத்தின்
சிவப்பு நிறம் பார்த்து
அது ஆசையின்
அழைப்பென்று கருதி
என் முரட்டு மாமன்… pic.twitter.com/sLwuble4Et
- கவிஞர் வைரமுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
- இவர் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
திரையுலகில் தன் பாடல் வரிகளால் பலர் மனதில் இடம் பிடித்த கவிஞர் வைரமுத்து ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது இவர் பல படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார்.

ஆட்டோ ஓட்டுநரை பாராட்டிய வைரமுத்து
இந்நிலையில், 'கவிப்பேரரசு வைரமுத்து திரைப்பாடல்களில் புதுக்கவிதைக் கூறுகள்'என்ற தலைப்பில் ஆய்வுசெய்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இதை அறிந்த வைரமுத்து அவரை வீட்டுக்கழைத்துப் பாராட்டியுள்ளார். மேலும், தனது சமூக வலைதளத்தில், "லூர்துராஜ்
ஓர் ஆட்டோ ஓட்டுநர்
'கவிப்பேரரசு வைரமுத்து
திரைப்பாடல்களில்
புதுக்கவிதைக் கூறுகள்'
என்ற தலைப்பில் ஆய்வுசெய்து
சென்னைப் பல்கலைக்கழகத்தில்
டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்
வியந்து போனேன்;
வீட்டுக்கழைத்துப்
பாராட்டினேன்
ஆட்டோ ஓட்டுநர்
கூட்டத்தில் ஓர் அதிசயம்
வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
- நடிகர் மாரிமுத்து, கவிஞர் வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார்.
- மாரிமுத்து 20-க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் மாரிமுத்து 'எதிர் நீச்சல்' தொலைக்காட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இதில் இவர் பேசும் 'அட எம்மா ஏய்' வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவியுள்ளது. இவர் இயக்குனர் மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார்.

இவர் 'கண்ணும் கண்ணும்', 'புலிவால்' உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம்' செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாரிமுத்து 20-க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது.
நடிகர் மாரிமுத்து (58) இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து நடிகர் மாரிமுத்துவிற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தம்பி மாரிமுத்துவின்
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது
சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது
என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்
என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்
தேனியில் நான்தான்
திருமணம் செய்துவைத்தேன்
இன்று அவன்மீது
இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு
இதயம் உடைகிறேன்
குடும்பத்துக்கும்
கலை அன்பர்களுக்கும்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தம்பி மாரிமுத்துவின்
— வைரமுத்து (@Vairamuthu) September 8, 2023
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது
சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது
என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்
என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்
தேனியில் நான்தான்
திருமணம்… pic.twitter.com/aEuWcCbOWF
- சனாதனம் என்பதும், சனாதன எதிர்ப்பு என்பதும் காலம் காலமான கருத்துருவங்கள்.
- பிறப்பால் ஏற்றத் தாழ்வு உண்டு என்பது சனாதன கருத்து.
சென்னை:
சனாதன தர்மம் பற்றிய அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சனாதனம் என்பதும்
— வைரமுத்து (@Vairamuthu) September 5, 2023
சனாதன எதிர்ப்பு என்பதும்
காலங்காலமான கருத்துருவங்கள்
பிறப்பால் ஏற்றத்தாழ்வு உண்டு
என்பது சனாதனக் கருத்து
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது சனாதன எதிர்ப்பு
திருக்குறளைத்தான்
உதயநிதி பேசியிருக்கிறார்
திருவள்ளுவரைக்
கொண்டாடுகிறவர்கள்
திருக்குறள் பேசிய…
சனாதனம் என்பதும், சனாதன எதிர்ப்பு என்பதும் காலம் காலமான கருத்துருவங்கள். பிறப்பால் ஏற்றத் தாழ்வு உண்டு என்பது சனாதன கருத்து. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது சனாதன எதிர்ப்பு. திருக்குறளைத்தான் உதயநிதி பேசி இருக்கிறார். திருவள்ளுவரை கொண்டாடுகிறவர்கள், திருக்குறள் பேசிய உதயநிதியை எதிர்ப்பது ஏன்? அரசியல்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- கவிஞர் வைரமுத்து பல படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார்.
- இவர் அடித்தட்டு மக்களின் மனதில் சாதி என்ற பாகுபாடுகளை விதைக்க கூடாது என்று கூறினார்.
திரையுலகில் தன் பாடல் வரிகளால் பலர் மனதில் இடம் பிடித்த கவிஞர் வைரமுத்து ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது வைரமுத்து பல படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார்.
சென்னை பெசன்ட் நகரில் கவிஞர் வைரமுத்து செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- நாட்டில் நடந்துக் கொண்டிருக்கும் சம்பவங்களை கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிஞ்சு மனங்களில் நஞ்சு கலக்க கூடாது, அடித்தட்டு மக்களின் மனதில் சாதி என்ற பாகுபாடுகளை விதைக்க கூடாது. கல்விக் கூடங்கள் சாதிகளை ஒழிக்க பிறந்த மன மருத்துவ நிலையங்கள், அந்த நிலையங்களிலேயே சாதி தலை தூக்குவதை நாம் இன்னும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
சாதி என்பதை ஒரு அடையாளம் என்ற அளவில் மட்டும் கருதினால் போதும், அதற்கு மேல் பெருமையோ இழிவோ கொடுக்க வேண்டாம். சாதி என்ற மாய பிம்பத்தை கடந்து கல்வி, அறிவு, பகுத்தறிவு மற்றும் சமவாய்ப்பு தளங்களில் முன்னேற வேண்டும் என்பதை என் கோரிக்கையாக வைக்கிறேன் என்று கூறினார்.
மேலும், திரைப்படங்கள் சாதியை வலியுறுத்துவதற்காக எடுக்கப்படுவது இல்லை, ஏனென்றால் ஒரு சாதியை வலியுறுத்தி எடுக்கும் படம் வணிக ரீதியாக வெற்றி பெறுவதில்லை. குறிப்பிட்ட சாதியை குறித்து எடுக்கப்படும் படம் அந்த குறிப்பிட்ட சாதி மக்கள் எண்ணிக்கையில் நின்று போகும். அதனால் ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறவர்கள், நடிப்பவர்கள், இயக்குபவர்கள் யாரும் ஒரு குறிப்பிட்ட சாதி படத்திற்காக தன்னை அர்ப்பணிப்பது இல்லை. ஆனால், அந்த குறிப்பிட்ட சமூகத்தின் சம்பவங்களை மட்டும் அவர்கள் மையப்படுத்துகிறார்கள் என்றால் சாதி அங்கு தலைதூக்காது" என்று பேசினார்.
- சின்னத்துரை மற்றும் அவருடைய தங்கை சந்திரா செல்வியை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டினர்.
- இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நாங்குநேரியில் பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோர் அரிவாளால் வெட்டில் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். படுகாயம் அடைந்த சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகிய 2 பேருக்கும் நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்களும் நேரடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவருக்கு ஆறுதல் தெரிவித்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் க