என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ராமரை விமர்சித்த வைரமுத்து... பெண்களை கண்டால் அவருக்கு மனநோய் -  H. ராஜா ஆவேசம்
    X

    ராமரை விமர்சித்த வைரமுத்து... பெண்களை கண்டால் அவருக்கு மனநோய் - H. ராஜா ஆவேசம்

    • சீதையை இழந்த ராமர், புத்திசுவாதீனத்தை இழந்தார் என்று வைரமுத்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • வைரமுத்து யார் ஒரு மீடூ குற்றவாளி என்று எச். ராஜா விமர்சனம்

    மயிலாப்பூரில் கடந்த 8-ந்தேதி அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து பங்கேற்று பேசினார். அப்போது அவர், கடவுள் ராமரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது.

    வைரமுத்து பேசியதாவது:- சீதையை இழந்த ராமர், புத்திசுவாதீனத்தை இழந்தார். புத்திசுவாதீனம் இல்லாதவர் செய்யும் குற்றம், குற்றம் கிடையாது என்று IPC கூறுகிறது. IPC-யில் கூறப்பட்டதை அன்றே கூறினார் கம்பர். ராமர் குற்றம் செய்திருந்தாலும் குற்றவாளி அல்ல என்று கம்பர் கூறுகிறார் என்றார்.

    வைரமுத்துவின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் அவருக்கு எதிராக புதுச்சேரியில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மூத்த பாஜக தலைவர் எச். ராஜா, "அரசியலமைப்பின் முதல் பக்கத்தில் ராமரின் படம் தான் உள்ளது. ஆனால் வைரமுத்து ராமரை மனநோயாளி என்று பேசியுள்ளார். வைரமுத்து யார் ஒரு மீடூ குற்றவாளி. சின்மயி அவர் மீது புகார் கூறியுள்ளார். மேலும் பல பேர் அவர் மீது புகார் கூறியுள்ளார். இந்து விரோதி வைரமுத்துவுக்கு பெண்களை கண்டால் மனநோய். காமவெறி கொண்ட வைரமுத்துவை ஏன் இன்னும் திமுக அரசு கைது செய்யவில்லை. 2026 இல் வைரமுத்து செய்யப்படுவார்" என்று ஆவேசமாக தெரிவித்தார்.

    Next Story
    ×