தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி 4 சதவீதம் குறைப்பு

திரைத்துறையினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அறிவிப்பு.வரிக்குறைப்பு திரைப்படத் துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி 4 சதவீதம் குறைப்பு
Published on: 

தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இது திரைத்துறையினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இன்று வெளியிட்ட அரசாணை மூலம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த வரிக்குறைப்பு திரைப்படத் துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும், இது டிக்கெட் விலைகளைக் குறைக்கவும், திரையரங்க வருவாயை மேம்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com