என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "movie release"

    உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் படம் 'ப்ராமிஸ்'.

    "ப்ராமிஸ்" கதையின் நாயகனாக நடித்து இந்தத் திரைப்படத்தை அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக வினோத்குமார் DFT பணியாற்றி உள்ளார்.

    சரவண தீபன் இசையமைத்துள்ளார்.படத்தொகுப்பு ஸ்ரீராம் விக்னேஷ், பாடலாசிரியர் பாலா, DI மணிகண்டன், நடனம் அகிலா பணியாற்றியுள்ளனர்.

    நாயகன் அருண்குமார் சேகர னுடன் கதாநாயகியாக புதுமுகம் நதியா சோமு நடித்துள்ளார். படத்தின் பிற கதை மாந்தர்களாக சுஜன், அம்ரிஷ் ,பிரதாப், கோகுல், சுந்தரவேல், ராஜ்குமார்,கலைவாணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட் க்ரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. 

    மக்களிடம் புகழ்பெற்ற உண்மையையே பேசிய அரிச்சந்திரனும் அவனைப் பின்பற்றிய காந்தியும் வரலாற்றில் சத்தியத்தின் சாட்சியங்களாக இருப்பதை அறியலாம்.

    அப்படி அந்தச் சத்தியத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம்தான் ப்ராமிஸ். இந்த நிலையில் 'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை திரைப் பிரபலங்கள் வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்கள்.

    'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் சேரன் மற்றும் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் ஆகியோர் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

    தமிழில் நாளை (நவ. 28) 10 திரைப்படங்களும், 2 படம் ரீ-ரிலீசும் செய்யப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள புதுப்படங்கள் மற்றும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற படங்களின் ரீ-ரிலீஸ் என நாளை திரைக்கு வரவுள்ள படங்கள் குறித்து பார்ப்போம்...

    அதன்படி, தமிழில் நாளை (நவ. 28) 10 திரைப்படங்களும், 2 படம் ரீ-ரிலீசும் செய்யப்படுகிறது.

    தேரே இஷ்க் மே

    ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் , க்ரித்தி சனோன் நடித்துள்ள திரைப்படம் 'தேரே இஷ்க் மே' . ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 'தேரே இஷ்க் மே' ஒரு தீவிரமான காதல் கதையாகும், இது தனுஷ் மற்றும் கிருத்தி சனோனை சுற்றி நகர்கிறது.

    ரிவால்வர் ரீட்டா

    கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    ஐபிஎல்

    பிரபல யூடியூப்பரும், சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவருமான டிடிஎஃப் வாசன் தற்போது படம் ஒன்றில் நடித்து உள்ளார். அப்படத்திற்கு ஐபிஎல் (Indian Penal Law) என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இப்படத்தில் நடிகர் கிஷோர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். கருணாநிதி இயக்கி உள்ள இப்படத்தை ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

    வெள்ளகுதிர

    *நிஜம் சினிமா* தயாரிப்பில் சரண்ராஜ்செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வெள்ளகுதிர'.

    BP 180

    ரேடியன்ட் இன்டர்நேஷனல் மூவிஸ் மற்றும் அதுல் இந்தியா மூவிஸ் சார்பில் பிரதிக் டி சத்பர் & அதுல் எம் போசாமியா இணைந்து தயாரித்துள்ள BP180 படத்தை ஜே.பி இயக்கி உள்ளார். தன்யா எஸ் ரவிச்சந்திரன், மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி, கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    Friday

    Dakdam Motion Pictures சார்பில் அனிஷ் மசிலாமணி தயாரிப்பில் ஹரிவெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் FRIDAY. இந்த படத்தில் மைம் கோபி, KPY தீனா, அனிஷ் மாசிலாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    ஒண்டிமுனியும் நல்லபாடனும்

    திருமலை புரொடக் ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரித்துள்ள ஒண்டிமுனியும் நல்லபாடனும் படத்தை சுகவனம் எழுதி இயக்கியுள்ளார்.

    அஞ்சான்

    திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அஞ்சான். இந்த படத்தில் சூர்யா, சமந்தா ரூத் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    அட்டகாசம்

    சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 'அட்டகாசம்' திரைப்படம் 2004-இல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

    தீபாவளியை முன்னிட்டு இந்த ஆண்டு 3 புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன.

    தீபாவளி கொண்டாட்டம் என்றாலே ஒன்று பட்டாசும், மற்றொன்று புதிய திரைப்படங்களும் தான். 

    முன்பெல்லாம், தீபாவளி- பொங்கல் பண்டிகைகளில் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே பெரும்பாலும் வெளியாகும். ஆனால், சமீப காலமாக அந்த போக்கு மாறி வருகிறது.

    தற்போது சிறிய பட்ஜெட் படங்களும், புதிய ஹீரோக்களின் படங்களும் கூட தீபாவளி முன்னிட்டு வெளியாகி வசூல் சாதனை படைக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 20ம் தேதி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு 3 புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன.

    அதன்படி, வரும் 17ம் தேதி அன்று துருவ் விக்ரமின் பைசன், ஹரிஷ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் டியூட் ஆகிய மூன்று படங்கள் வௌியாக தயாராக உள்ளன.

    பைசன்

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    டியூட்

    இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ட்யூட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

    டீசல்

    பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    திரில்லர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் கயிலன்.

    தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார் ரம்யா பாண்டியன். ஒருநாள் இவருக்கு மர்ம நபரிடம் இருந்து இமெயில் ஒன்று வருகிறது. அதில் இன்னும் சில நாட்களில் வார் ஒன்று நடக்க போகிறது என்று இருக்கிறது. இதை பார்த்த ரம்யா பாண்டியன், உடனே அதை செய்தியாக்கி வெளியிடுகிறார்.

    இதற்கு பல எதிர்ப்புகள் வருகிறது. யார் என்று தெரியாத ஒருவரிடம் இருந்து வந்த இமெயிலை வைத்து செய்தியை வெளியிட்டது தவறு என்று பிரச்சனை வருகிறது. மீண்டும் மர்ம நபரிடம் இருந்து இமெயில் வருகிறது. இதை போலீசுக்கு தெரியப்படுத்துகிறார் ரம்யா பாண்டியன். இதை விசாரிக்க அதிகாரியான ஸ்சுவேதா களம் இறங்குகிறார். இவருடைய விசாரணையில் மர்ம நபர் பெயர் காரி என்று தெரியவருகிறது.

    இறுதியில் காரி என்பவர் யார்? எதற்காக மிரட்டுகிறார்? காரியை ஸ்சுவேதா கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக ஓடிக்கொண்டே இருக்கிறார் ஸ்சுவேதா நாயர். இவரது உடை, உடல் மொழி ஆகியவை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. நிதானமாக இவர் யோசிக்கும் போதும், கேள்விகள் கேட்கும் போதும் நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார். படம் ஆரம்பித்தது முதல் பத்து நிமிடம் மட்டுமே வந்து சென்றிருக்கிறார் ரம்யா பாண்டியன்.

    சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் பதிந்து இருக்கிறார் பிரஜன். தாய், தந்தை இழந்த காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    திரில்லர் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அருள் அஜித். ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார். ஏ ஐ டெக்னாலஜியை அனைவருக்கும் புரியும் படி சொல்லியிருக்கிறார். நிறைய காட்சிகள் வசனத்திலேயே கடந்து போயிருக்கிறார். இதை தவிர்த்து இருக்கலாம். நிறைய கதாபாத்திரங்களை வீணடித்து இருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    அமீன் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். காட்சிகள் தெளிவாக அமையவில்லை.

    இசை

    கார்த்திக் ஹர்ஷா இசையில் பாடல்கள் கவரவில்லை. ஹரியின் பின்னணி இசை பெரியதாக எடுபடவில்லை.

    • படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் G.V. பெருமாள்.
    • சரீரம் படத்திற்கு இசையமைப்பாளர் V.T. பாரதிராஜா இசையமைத்துள்ளார்.

    G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "சரீரம்".

    இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    இப்படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் G.V. பெருமாள்.

    ஒரு காதல் ஜோடி, அவர்களின் காதலுக்கு குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, வாழ வழி தெரியாமல், காதலுக்காக ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்கிறார்கள். அந்த காதல் ஜோடியை இந்த சமூகம் ஏற்றுக் கொண்டதா? இல்லையா?. அவர்களின் விதி என்னவானது என்பது தான் இபடத்தின் கதை.

    இதுவரை திரையில் காதலுக்காக, பேச்சு முதல் இதயம் வரை பலவற்றை தியாகம் செய்ததாக பல படங்கள் வந்துள்ளது. ஆனால் சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் முதல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

    புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் J.மனோஜ், பாய்ஸ் புகழ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கௌரி, லில்லி, மிலா ஆகியோருடன் இயக்குநர் G.V.பெருமாள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு இசையமைப்பாளர் V.T. பாரதிராஜா இசையமைத்துள்ளார்.

    இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    • Mr Zoo Keeper யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
    • படத்தின் டிரெய்லர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது

    சின்னத்திரை பிரபலமான புகழ் பெரியத்திரையில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நிலையில், கதாநாயகனாக 'மிஸ்டர் ஜூ கீப்பர்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை ஜே. சுரேஷ் இயக்கியுள்ளார். ஜே. சுரேஷ் வேலை, என்னவளே, ஜூனியர் சீனியர் ஆகிய படங்களை இயக்கிய நிலையில், புகழ் நடிக்கும் 'மிஸ்டர் ஜூ கீப்பர்' படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தின் டிரெய்லர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இப்படத்தை ஜே 4 ஸ்டுடியோஸ் ராஜ ரத்தினம் தயாரித்துள்ளார். இப்படத்தில் அனிமேஷன் இல்லாமல், உண்மையான புலியை நடிக்க வைத்திருப்பதாகப் படக்குழு அறிவித்தனர்.

    இந்நிலையில், சின்னத்திரை நடிகர் புகழ் நாயகனாக நடித்துள்ள 'மிஸ்டர் ஜூ கீப்பர்' படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

    • உலகளவில் நாளை 7 தமிழ் திரைப்படங்கள் வெளியாகின்றன.
    • 'படை தலைவன்' படம் திரையரங்க ஒதுக்கீடு காரணமாக ஒத்திவைப்பு.

    தமிழகம் மற்றும் உலகளவில் நாளை வெளியாக இருக்கும் தமிழ் திரைப்படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

    நாளை ஒரே நாளில் 7 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

    அதன்படி, விஜய் சேதுபதி நடிப்பில் 'ஏஸ்', டொவினோ தாமஸ்-ன் 'நரி வேட்டை', யோகி பாபுவின் 'ஸ்கூல்', 'மையல்', 'அகமொழி விதிகள்', 'ஆகக் கடவன', 'திருப்பூர் குருவி' ஆகிய 7 படங்கள் நாளை வெளியாகின்றன.

    சண்முக பாண்டியன் நடிப்பில் நாளை திரைக்கு வரவிருந்த 'படை தலைவன்' படம் திரையரங்க ஒதுக்கீடு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 3 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
    • தற்போது வரைக்கும் பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷனில் 92 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

    கடந்த மாதம் 9-ஆம் தேதி மலையாள மொழியில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் ப்ரேமலு எனும் படம் வெளியானது.

    மாமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரமாக நடித்துள்ளனர். 3 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது வரைக்கும் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் 92 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் இப்படம் இடம்பெற்றுள்ளது. 

    சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வெகுஜன மக்களிடம் நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்தமையால் படக் குழுவினர் இப்படத்தை தெலுங்கு மொழியில் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி, வரும் மார்ச் 8-ஆம் தேதி தெலுங்கு மொழியில் இத்திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

    • திரையிசை ரசிகர்களின் செவிகளை தாலாட்டும் 'ஆலன்' பட பாடல்கள்.
    • திகட்டாத காதல் காவியமாக உருவாகும் 'ஆலன்'.

    இயக்குநர் சிவா. ஆர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆலன்' திரைப்படத்தில் வெற்றி, மதுரா, விவேக் பிரசன்னா, ஹரிஷ் பெராடி, 'அருவி' மதன் குமார், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். கே. உதயகுமார் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை காசி விஸ்வநாத் மேற்கொண்டிருக்கிறார். ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 3 S பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சிவா. ஆர் தயாரித்திருக்கிறார்.

    இந்த காதல் காவியத்தில் 'எட்டு தோட்டாக்கள்' வெற்றி கதையின் நாயகனாகவும், நாயகிகளாக ஜெர்மன் மதுரா மற்றும் அனு சித்தாராவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஹரிஷ் பெராடி, மதன்குமார், விவேக் பிரசன்னா, கருணாகரன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள்.

    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் வெளியிட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

    ×