என் மலர்
நீங்கள் தேடியது "mr zoo keeper"
- டி.ராஜாவேல் இயக்கத்தில் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது
- குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் Mr.Zoo Keeper.
இந்த வார இறுதியில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக எட்டு புதிய படங்கள் திரையரங்குகளில் நாளை வெளியாக இருக்கிறது. பல்வேறு வகை கதைக்களங்களோடு வெளியாகும் இந்த படங்களின் மீது, ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.
ஹவுஸ்மேட்ஸ்
டி.ராஜாவேல் இயக்கத்தில் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா சந்தினி பைஜு, வினோதினீ, தீனா, அப்தூல் லீ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையை ராஜேஷ் முருகேசன் மேற்கொள்கிறார் மற்றும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
மிஸ்டர். ஜூ கீப்பர்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் Mr.ZooKeeper.படத்தின் நாயகியாக ஷிரின் காஞ்ச்வாலா நடித்துள்ளார். படத்தை ஜே.சுரேஷ் இயக்கியுள்ளார். படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொள்ள ஒளிப்பதிவு பணிகளை தன்வீர் மிர் செய்துள்ளார். படத்தை ஜே4 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
முதல் பக்கம்
வெற்றி நடிப்பில் கிரைம் இன்வஸ்டிகேஷன் திரில்லராக முதல் பக்கம் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அனிஷ் அஷ்ரஃப் இயக்கியுள்ளார். படத்தின் நாயகியாக ஷில்பா மஞ்சுனாத் நடித்துல்ளார். மேலும் இவர்களுடன் நயனா சாய், மகேஷ் தாஸ் , தம்பி ராமியா மற்றும் ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏஜிஆர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மகேஷ்வரன் தேவதாஸ் தயாரித்துள்ளார்.
சரண்டர்
கௌதமன் கணபதி இயக்கத்தில் தர்ஷன் தியாகராஜன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் சரண்டர். இப்படத்தில் லால், சுஜித் ஷங்கர், மன்சூர் அலி கான், முதிஷ்காந்த் மற்றும் பதின் குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். விகாஸ் இசையமைத்த படத்தை வி.ஆர்.வி குமார் தயாரித்துள்ளார்.
மேலும் உதயா நடித்த அக்யூஸ்ட், டிஜே நடித்த உசுரே , கதிர் நடித்த மீஷா மற்றும் சுவாஸிகா நடித்த போகி திரைப்படங்கள் வெளியாகிறது.
- Mr Zoo Keeper யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
- படத்தின் டிரெய்லர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது
சின்னத்திரை பிரபலமான புகழ் பெரியத்திரையில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நிலையில், கதாநாயகனாக 'மிஸ்டர் ஜூ கீப்பர்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை ஜே. சுரேஷ் இயக்கியுள்ளார். ஜே. சுரேஷ் வேலை, என்னவளே, ஜூனியர் சீனியர் ஆகிய படங்களை இயக்கிய நிலையில், புகழ் நடிக்கும் 'மிஸ்டர் ஜூ கீப்பர்' படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தின் டிரெய்லர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தை ஜே 4 ஸ்டுடியோஸ் ராஜ ரத்தினம் தயாரித்துள்ளார். இப்படத்தில் அனிமேஷன் இல்லாமல், உண்மையான புலியை நடிக்க வைத்திருப்பதாகப் படக்குழு அறிவித்தனர்.
இந்நிலையில், சின்னத்திரை நடிகர் புகழ் நாயகனாக நடித்துள்ள 'மிஸ்டர் ஜூ கீப்பர்' படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

- நடிகர் புகழ் நடித்துள்ள திரைப்படம் 'மிஸ்டர் ஜூ கீப்பர்'.
- இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஜெ4 ஸ்டுடியோஸ் சார்பில் எஸ். ராஜரத்தினம் மற்றும் டி. ஜெபா ஜோன்ஸ் தயாரிப்பில் ஜெ. சுரேஷ் இயக்கத்தில், 'குக் வித் கோமாளி' மூலம் பிரபலமான நடிகர் புகழ் முதல் முறையாக நாயகனாக நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'மிஸ்டர் ஜூ கீப்பர்'.

ஒரு புலியைக் காப்பாற்றப் போராடும் ஒரு எளியவனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து, ஒரு அழகான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் புகழ் பேசியதாவது, தம்பிக்காக வருவேன் என வந்த சூரி அண்ணாவிற்கு நன்றி. என்னை அறிமுகப்படுத்திய தாம்சன் சாருக்கு நன்றி. இதே பிரசாத் லேபுக்கு வெளியே கார் வாஷ் கடையில் வேலை செய்துள்ளேன், இலை எடுத்திருக்கிறேன், இன்று இங்கு என் படம் இசை விழா நடப்பது மகிழ்ச்சி. இயக்குனர் என்னை அழைத்து நீ ஹீரோ, புலியுடன் நடிக்க வேண்டும் என்றார். ஓகே சார் பண்ணிடலாம் என்றேன். யுவன் சார் மியூசிக் என்றார் ஆனால் ஷூட் ஒரு வருடம் ஆகும் என்றார்.

அப்புறம் ஒரு வருடம் கழித்து நிஜத்திலேயே புலியைக் கூட்டி வந்து, ஆம்புலன்ஸ் வைத்து நடிக்க வைத்தார்கள். ஒரிஜினல் புலியுடன் நடித்திருக்கிறேன். இப்படத்தை நம்பி முழு ஆதரவு தந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. பல ஹீரோயின்கள் தயங்கிய போதும் கதையை நம்பி, என்னுடன் நடித்த ஷிரின் அவர்களுக்கு நன்றி. படத்தில் எல்லோருமே கடுமையாக உழைத்துள்ளனர். ராதிகா மாஸ்டர், ஃபைட் மாஸ்டர் எல்லோருக்கும் என் நன்றிகள். பெரிய பெரிய ஹீரோ படங்களுக்கு மியூசிக் போடும் யுவன் சார் எனக்காக இசை அமைத்ததற்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி. படம் நன்றாக வந்துள்ளது. படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் என்றார்.

மேலும், நடிகர் சூரி பேசியதாவது, இந்தப்படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் நன்றி. முழுக்க காட்டுக்குள் படம் எடுத்துள்ளார்கள். காட்டுக்குள் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும். மூன்று வருடம் காட்டுக்குள் நானும் படத்தில் நடித்திருக்கிறேன். புலி ஊருக்குள் வந்துவிட்டது என்கிறார்கள் ஆனால் நாம் தான் காட்டை ஆக்கிரமித்துள்ளோம். நாம் தான் அதனுடைய இடத்திலிருந்து வெளியேற வேண்டும் எனும் நல்ல கருத்துடன் இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள். வாழ்த்துகள்.

தம்பி புகழ் இன்னும் பல உச்சங்கள் செல்வான், அவனுக்கு வாழ்த்துகள். யுவன் இருக்கிறார் என்றார்கள் அவர் இருந்தாலே வெற்றி தான். என் 'கருடன்' படத்திற்கும் இசையமைக்கிறார். எப்போதும் திரையுலகில் அவர் ராஜ்ஜியம் தான். அவருக்கு என் நன்றி. புகழிடம் நிறையத் திறமை இருக்கிறது. எல்லோர் வீட்டிலும் அவன் பெயர் நுழைந்துள்ளது. அவனிடம் நல்ல காமெடி சென்ஸ் உள்ளது. அவன் ஜெயிக்க வேண்டும் அதை விட அவன் நிலைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். இயக்குநர் சுரேஷ் மிகத் திறமையானவர் அவருக்கு வாழ்த்துகள். படம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துகள் நன்றி என்றார்.






