search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pugazh"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் புகழ் நடித்துள்ள திரைப்படம் 'மிஸ்டர் ஜூ கீப்பர்'.
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஜெ4 ஸ்டுடியோஸ் சார்பில் எஸ். ராஜரத்தினம் மற்றும் டி. ஜெபா ஜோன்ஸ் தயாரிப்பில் ஜெ. சுரேஷ் இயக்கத்தில், 'குக் வித் கோமாளி' மூலம் பிரபலமான நடிகர் புகழ் முதல் முறையாக நாயகனாக நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'மிஸ்டர் ஜூ கீப்பர்'.


    ஒரு புலியைக் காப்பாற்றப் போராடும் ஒரு எளியவனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து, ஒரு அழகான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


    இந்த நிகழ்ச்சியில் நடிகர் புகழ் பேசியதாவது, தம்பிக்காக வருவேன் என வந்த சூரி அண்ணாவிற்கு நன்றி. என்னை அறிமுகப்படுத்திய தாம்சன் சாருக்கு நன்றி. இதே பிரசாத் லேபுக்கு வெளியே கார் வாஷ் கடையில் வேலை செய்துள்ளேன், இலை எடுத்திருக்கிறேன், இன்று இங்கு என் படம் இசை விழா நடப்பது மகிழ்ச்சி. இயக்குனர் என்னை அழைத்து நீ ஹீரோ, புலியுடன் நடிக்க வேண்டும் என்றார். ஓகே சார் பண்ணிடலாம் என்றேன். யுவன் சார் மியூசிக் என்றார் ஆனால் ஷூட் ஒரு வருடம் ஆகும் என்றார்.


    அப்புறம் ஒரு வருடம் கழித்து நிஜத்திலேயே புலியைக் கூட்டி வந்து, ஆம்புலன்ஸ் வைத்து நடிக்க வைத்தார்கள். ஒரிஜினல் புலியுடன் நடித்திருக்கிறேன். இப்படத்தை நம்பி முழு ஆதரவு தந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. பல ஹீரோயின்கள் தயங்கிய போதும் கதையை நம்பி, என்னுடன் நடித்த ஷிரின் அவர்களுக்கு நன்றி. படத்தில் எல்லோருமே கடுமையாக உழைத்துள்ளனர். ராதிகா மாஸ்டர், ஃபைட் மாஸ்டர் எல்லோருக்கும் என் நன்றிகள். பெரிய பெரிய ஹீரோ படங்களுக்கு மியூசிக் போடும் யுவன் சார் எனக்காக இசை அமைத்ததற்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி. படம் நன்றாக வந்துள்ளது. படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் என்றார்.


    மேலும், நடிகர் சூரி பேசியதாவது, இந்தப்படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் நன்றி. முழுக்க காட்டுக்குள் படம் எடுத்துள்ளார்கள். காட்டுக்குள் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும். மூன்று வருடம் காட்டுக்குள் நானும் படத்தில் நடித்திருக்கிறேன். புலி ஊருக்குள் வந்துவிட்டது என்கிறார்கள் ஆனால் நாம் தான் காட்டை ஆக்கிரமித்துள்ளோம். நாம் தான் அதனுடைய இடத்திலிருந்து வெளியேற வேண்டும் எனும் நல்ல கருத்துடன் இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள். வாழ்த்துகள்.


    தம்பி புகழ் இன்னும் பல உச்சங்கள் செல்வான், அவனுக்கு வாழ்த்துகள். யுவன் இருக்கிறார் என்றார்கள் அவர் இருந்தாலே வெற்றி தான். என் 'கருடன்' படத்திற்கும் இசையமைக்கிறார். எப்போதும் திரையுலகில் அவர் ராஜ்ஜியம் தான். அவருக்கு என் நன்றி. புகழிடம் நிறையத் திறமை இருக்கிறது. எல்லோர் வீட்டிலும் அவன் பெயர் நுழைந்துள்ளது. அவனிடம் நல்ல காமெடி சென்ஸ் உள்ளது. அவன் ஜெயிக்க வேண்டும் அதை விட அவன் நிலைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். இயக்குநர் சுரேஷ் மிகத் திறமையானவர் அவருக்கு வாழ்த்துகள். படம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துகள் நன்றி என்றார்.

    • இயக்குனர் எம்.ஜே.இளன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இப்படத்தின் கதாநாயகனாக புகழ் நடிக்கிறார்.

    இயக்குனர் எம்.ஜே.இளன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'துடிக்கிறது மீசை'. இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் கதாநாயகனாக நடிக்கிறார். யோகி வீர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.ராம் வழங்கும் இப்படத்தின் தொடக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. இந்த விழாவில் விழாவில் புகழ், முருகதாஸ், சந்தானம் படங்களின் மூலம் பிரபலமான மாறன்,இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட படக்குழுவினரும் , சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் செந்தில், இயக்குனர் பேரரசு, மது. தியாகராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


    'துடிக்கிறது மீசை' படத்தைப் பற்றி இயக்குனர் எம்.ஜே. இளன் பேசியதாவது, "படத்தின் கதை என்னவென்றால், காதல் தவறில்லை. ஆனால்,காதலுக்காக வாழ்க்கையை அழித்துக் கொண்டு தங்கள் எதிர்காலத்தை வீணடிப்பதைத் தவறு என்று சொல்கிற கதை இது. காதலுடன் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. காதலில் விழுந்து தன்னை அழித்துக் கொள்ளும் இளைஞர்களைப் பற்றி இந்த கதை பேசுகிறது. இக்கதை மதுரையிலிருந்து சென்னைக்குப் பயணிக்கிறது. இந்த கதையை இக்காலத்திற்கு ஏற்ற வகையில் நாங்கள் காதல், நகைச்சுவை கலந்து சுவாரஸ்சியமாகக் கூறவிருக்கிறோம்.


    இன்றைய சினிமாவின் ஆரோக்கியமான விஷயமாக எனக்கு ஒன்று தோன்றுகிறது. இன்று எத்தனை பெரிய நட்சத்திரங்கள் நடித்தாலும் அவை வெற்றிபெறும் என்று கூற முடியாது. ஆனால் நல்ல கதை அம்சம் உள்ள படங்கள், புதுமையான திரைக்கதை உள்ள படங்கள் இப்போது வெற்றி பெற்று வருகின்றன. இது ஒரு நல்ல ஆரோக்கியமான, என்னைப் போன்ற புதியவர்களுக்கு நம்பிக்கை தரும் ஒன்றாக இருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் மூலம் புகழ்பெற்ற வசனமான 'துடிக்கிறது மீசை' என்பதையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளோம். இத்தலைப்பு கோபத்தை குறியீடாக சொல்கிறது.


    இப்படத்திற்கு ஒளிப்பதிவு அசோக்குமார், இசை ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் இசைவாணன், சீர்காழி சிற்பி என்று சினிமா மீது பேரார்வமும் திறமையும் உள்ளவர்கள் இணைந்துள்ளார்கள். படப்பிடிப்புக்கு நம்பிக்கையோடு புறப்படுகிறது படக்குழு" என்றார்.

    • குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் புகழ்.
    • இவரின் திருமாணம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது பெரியத்திரையில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அஜித்துடன் வலிமை, சந்தானத்துடன் சபாபதி, அஸ்வினுடன் என்ன சொல்ல போகிறாய், அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். தற்போது மிஸ்டர் சூ கீப்பர் என்ற படத்தில் கதாநாயகனாக களம் இறங்கியிருக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     

    புகழ் - பென்சி

    புகழ் - பென்சி

    சமீபத்தில் புகழ் தனது காதலி குறித்து நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசினார். அப்போது நானும் பென்சியும் 5 வருடமாக காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கப்போவது யாரு ஆடிஷன் போகும்போதில் இருந்தே தெரியும். இந்த வருடம் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என புகழ் தெரிவித்திருந்தார்.

     

    புகழ் - பென்சி

    புகழ் - பென்சி

    இந்நிலையில், புகழ்-பென்சியின் திருமண தேதி தற்போது வெளியாகி உள்ளது. இவர்களின் திருமணம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது சம்ந்தப்பட்ட திருமண அழைப்பிதழ் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகினறனர்.

    மு.களஞ்சியம் இயக்கத்தில் சீமான், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் நாயகனாக நடிக்கும் ‘முந்திரிக்காடு’ படத்தின் முன்னோட்டம். #Munthirikaadu
    தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘முந்திரிக்காடு’.

    இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் திரு, கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.



    ஒளிப்பதிவு - ஜி.ஏ.சிவசுந்தர், இசை - ஏ.கே.பிரியன், படத்தொகுப்பு - எல்.வி.கே.தாஸ், பாடல்கள் - கவிபாஸ்கர், கலை - மயில்கிருஷ்ணன், ஸ்டண்ட் - லீ.முருகன், தயாரிப்பு மேற்பார்வை - டி.ஜி. ராமகிருஷ்ணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மு.களஞ்சியம்.

    படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, “ ‘முந்திரிக்காட்டு மக்களின் வாழ்க்கை படம். யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலை உயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதை பதிவு செய்கிறோம் என்றார். #Munthirikaadu

    ×