"ஜனநாயகன்" ஒத்திவைப்பு

திட்டமிட்டபடி ஜனநாயகன் படம் வெளியாவதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
"ஜனநாயகன்" ஒத்திவைப்பு
Published on

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்தப்படம் ஜன நாயகன். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன.9 திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து படத்திற்கு சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பட தயாரிப்பு நிர்வாணம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "பரிந்துரைத்த மாற்றங்களை செய்தால், 'U/A சான்றிதழ் வழங்குகிறோம் எனக் கூறினார்கள். அதனடிப்படையில் தணிக்கை வாரியம் கூறிய அனைத்து திருத்தங்களும் செய்யப்பட்டது.

அதனை கண்காணிப்பு அதிகாரியும் உறுதி செய்தார். ஆனால் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக யாரோ ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை" என்று வாதம் வைத்தார்.

இதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டுமென மனுதாரர் கோரமுடியாது என தணிக்கை வாரியம் தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி. ஆஷா, ஜனநாயகன் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட புகாரை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து ஏன் படத்தை ஜன.10ஆம் தேதிக்கு ரிலீஸ் செய்யக்கூடாது? தை பிறந்தால் வழி பிறக்குமே? எனக்கூறி வழக்கை இன்று (ஜன.7) ஒத்திவைத்தார்.

இந்த வழக்கின் மீதான இன்றைய விசாரணையின் முடிவில், ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரிய வழக்கின் தீர்ப்பை, நாளை காலை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். இதனால் திட்டமிட்டபடி ஜனநாயகன் படம் வெளியாவதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜயின் ஜனநாயகன் படத்திற்கு இதுவரை தணிககைச் சான்றதழ் கிடைக்காத நிலையில், ஐரோப்பபிய நாடுகளில் ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் வெளியாகாது என விநியோகஸ்தர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ரஷய, ஸ்பெயின், நார்வே, போலாந்து உள்பட 39க்கும் அதிக நாடுகளில் ஜனநாயகன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com